Thursday 18 June 2020

PRIYA RAMAN ,SOUTH INDIAN ACTRESS BORN 1974 SEPTEMBER 14



    PRIYA RAMAN ,SOUTH INDIAN 
ACTRESS BORN 1974 SEPTEMBER 14




ப்ரியா ராமன் தென்னிந்திய திரைப்பட நடிகை மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். இவர் தமிழ், மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் இரண்டு மொழிகளிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார். தமிழில் இவருடைய முதல்ப் படம் ரஜினிகாந்த் தயாரித்த வள்ளி என்ற திரைப்படம்.

சென்னை: நடிகர் ரஞ்சித் இரண்டாவது திருமணம் செய்வது பற்றி எனக்கு கவலை இல்லை என்று அவரது முதல்மனைவி பிரியாராமன் கூறியுள்ளார்.

பொன் விலங்கு, சிந்து நதி பூ, மறுமலர்ச்சி, பாண்டவர் பூமி' உள்பட பல படங்களில் நடித்தவர் ரஞ்சித். ‘பீஸ்மர்' என்ற படத்தை இவர் டைரக்டு செய்து, கதாநாயகனாக நடித்தார்.வள்ளி படத்தில் அறிமுகமானவர் பிரியா ராமன், சூரியவம்சம், சின்னராஜா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவரும், ரஞ்சித்தும் இணைந்து ‘நேசம் புதுசு' என்ற படத்தில் ஜோடியாக நடித்தார்கள்.

அப்போது, இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 1999-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16-ந் தேதி பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு ஆதித்யா (வயது 7), ஆகாஷ் (3) என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.கருத்து வேறுபாடு ரஞ்சித்துக்கும், பிரியா ராமனுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இரண்டு பேரும் விவாகரத்து செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி, தாம்பரத்தில் உள்ள நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மனு செய்தார்கள். கடந்த ஜூன் மாதம் இருவருக்கும் விவாகரத்து அளித்து தீர்ப்பு கூறப்பட்டது.நல்ல நண்பர் விவாகரத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இருவரும், நாங்கள் இருவரும் கணவன்-மனைவி உறவில் இருந்து விடுபட்டாலும், நல்ல நண்பர்களாக இருப்போம். சிறந்த தோழன்- தோழியாக வாழ்ந்துகாட்டுவோம் என்றனர். குழந்தைகள் இருவரும் பிரியா ராமனிடம் வசிக்கின்றனர்.இரண்டாவது திருமணம் இந்த நிலையில் நடிகை ராகசுதாவை 2-வது திருமணம் செய்து கொள்ளப்போவதாக ரஞ்சித் அறிவித்து உள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரியாராமன், அதுபற்றி எனக்கு கவலை இல்லை என்றார்.ஆண் துணை தேவையில்லை மேலும் அவர், எனக்கு தன்னம்பிக்கை நிறைய இருக்கிறது. சொந்த காலில் என்னால் நிற்க முடியும். ஆண் துணை எனக்கு தேவை இல்லை. இன்னொரு திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றும் கூறினார்.

எது நடக்குமோ அது நடக்கும் எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களுடன் யார் தயவுமின்றி வாழ்ந்து காட்டுவேன். யாரும் யாரையும் திருமணம் செய்து கொள்ளட்டும். அது அவர்களுடைய விருப்பம். நான் பகவான் கிருஷ்ணரின் பக்தை. அவர் வழி காட்டுதல்படி நடப்பேன். எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கும் என்று கூறியுள்ளார் பிரியாராமன்.பிரியா ராமன் நேசம் புதுசு படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் ரஞ்சித்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர்.

      தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார் பிரியா ராமன். நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார். இந்த நிலையில் பிரியா ராமன் பா.ஜனதாவில் இணைய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்து அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

     ஆந்திராவில் உள்ள பா.ஜனதா பிரமுகர்களை சந்தித்து பேசியுள்ளார். பா.ஜனதாவில் இணைவதை பிரியா ராமன் உறுதிப்படுத்தி உள்ளார். பிரியா ராமனின் முன்னாள் கணவரான ரஞ்சித் சில நாட்களுக்கு முன்பு பா.ம.க.வில் சேர்ந்தார். பின்னர் சில பிரச்சனைகளால் திமுகவில் சேர்ந்தார்.
Priya Raman is a Malayalam actress and film producer. She has appeared in Malayalam, Tamil, Telugu and Kannada cinema and in television serials of both languages. Her first film was the Rajnikanth-produced film Valli, in 1993. Her second film. Arthana, directed by I. V. Sasi and released in 1993 was her debut in Malayalam ilms and career
Malayalam Director Joshy cast her as an air force pilot in 1993 in Sainyam with Mammootty.[citation needed]

Besides films, she has also appeared in a number of Tamil and Malayalam television serials like the Tamil serial Durga, Malayalam T.V serial Kavyanjali produced by Ekta Kapoor of Balaji Telefilms (as "Anjali"), Swarnamayooram, Pavakoothu and Orma (as "Girly").[citation neede



.





.
.



.





.

No comments:

Post a Comment