K.R.KALYANA RAMAN WRITER BORN 1919 JULY 1- 2001 APRIL 4
K.R.KALYANA RAMAN WRITER BORN 1919 JULY 1- 2001 APRIL 4 மகரம் என்ற புனைபெயரில் எழுதிய கே. ஆர். கல்யாணராமன் (சூலை 1, 1919 – ஏப்ரல் 4, 2001) தமிழக எழுத்தாளரும், தொகுப்பாசிரியரும் ஆவார்.[1] வாழ்க்கைக் குறிப்பு கல்யாணராமன் 1944 ஆம் ஆண்டில் எழுத ஆரம்பித்தார். க. ரா என்ற புனைபெயரில் 1944 கல்கி இதழ்களில் மூன்று கட்டுரைகளை எழுதினார். பின்னர் அதே ஆண்டில் ஆனந்த விகடன் இதழில் கே. ஆர். கே என்ற பெயரில் 'சங்கீத அகராதி' என்ற கட்டுரையை எழுதினார். விகடன் ஆசிரியர் தேவன் இவருக்கு கல்யாணராமனின் பிறந்த இராசியான 'மகரம்' என்ற புனைபெயரை சூட்டி அப்பெயரிலேயே எழுத வேண்டினார். அப்பெயரிலேயே தொடர்ந்து பல நகைச்சுவைக் கட்டுரைகளை எழுதினார்.[2] இவரது நகைச்சுவைக் கட்டுரைகள் 10 நூல்களாகவும், சிறுகதைகள் இரண்டு தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளன. இவரது கட்டுரைகள் சந்திரோதயம், பாரிஜாதம், மணிக்கொடி போன்ற இதழ்களிலும்[1], இலங்கை தினகரன் பத்திரிகையிலும்[3] வெளிவந்துள்ளன. எழுதுவது எப்படி என்ற கட்டுரைகளைத் தொகுத்து புத்தகங்களாக பழனியப்பா பிரதர்சு நிறுவனம் வெளியிட்டது. இவரது படைப்புகள் வானொலியிலும் ஒலிபரப்பாகியுள்ள...