RAILWAYS STARTED 1837 IN MADRAS ,RUN OVER 1853 IN POONA -DHANE
RAILWAYS STARTED 1837 IN MADRAS ,RUN OVER 1853 IN POONA -DHANE சென்னப்பட்டணமெனுங் கெடிஸ்தலத்தில் தன்னாலேரெயில்போட ராயபுரத்தில் (நன்னே) ராயபுரத்தில் ெரயில்ரோட்டுபோட நவாப்புகவர்னர் ஜெனரல்மேஜருங் கூட (நன்னே) கர்னல்துரைசிப்பாயி துருப்புதானே சேர்ந்தார்போலீசுதுரை சேவகனுடனே (நன்னே) வேட்டுகள்போட்டார்கள் இருபத்தொண்ணு பட்டாளம்துருப்பு ரயிட்செய்தார்நிண்ணு... - இப்படி ராயபுரம் நிலையத்திலிருந்து மெட்ராஸின் முதல் ரயில் புறப்பட்ட அழகை வர்ணிக்கிறது அன்றைய கடைக்கால் கும்மி பாடல் ஒன்று. இன்று சென்னையின் மூன்று போக்குவரத்துகளும் அதிநவீன வளர்ச்சியில் பயணிப்பதைப் பார்க்கிறோம். நகரின் எந்த மூலைக்குப் போய் வரவும் பஸ் வசதிகள் உள்ளன. புறநகர், மெட்ரோ, பறக்கும் ரயில் என ரயில் போக்குவரத்தும் பல பாதைகளில் பரபரக்கிறது. ஆனால், அன்று நிலைமை அப்படியிருக்கவில்லை. பாமர மக்கள் எல்லா இடங்களுக்கும் நடந்துதான் சென்றனர். கொஞ்சம் வசதியானவர்கள் மாட்டு வண்டியிலோ, குதிரை வண்டியிலோ போய் வந்தனர். மன்னர், ஜமீன்தார்களாக இருந்தவர்கள் பல்லக்கில் பயணப்பட்டனர். இங்கே ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பிறகே...