MATA HARI ,DOUBLE AGENT SPY SHOT DEAD IN PARIS ஆகத்து 7, 1876 -1917 OCTOBER 15
MATA HARI ,DOUBLE AGENT SPY SHOT DEAD IN PARIS ஆகத்து 7, 1876 -1917 OCTOBER 15 மாட்ட ஹரி (Mata Hari, இயற்பெயர்: மார்கரெத்தா கெர்த்துரூதா செல்லே, ஆகத்து 7, 1876 – அக்டோபர் 15, 1917), டச்சு நடன மாது. இவர் முதலாம் உலகப் போரில் செருமனியருக்கு உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, பிரான்சிய இராணுவ நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு பாரிசுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.[1] மாட்ட ஹரி , என்றால் காலை நட்சத்திரம் என்று பொருள். ஜாவா தீவில் ஹவாய் நடனம் கற்ற இவர் பாரிசு நகரத்தில் கேபரே நடனக்காரி ஆனார். இந்த நடனம் பார்க்க வரும் பிரான்ஸ் படை ஆபீசரிடம் இரவெல்லாம் கூடி குலாவி ரகசியத்தை செருமனிக்கு சொல்லி வந்தார். இவர் அடையாள எண் H-21. இவர் பெரிய ரகசியம் எதையும் சொல்லவில்லை என்றாலும் பிரித்தானியர் இவரைப் பிடித்து எச்சரிக்கை செய்தனர். என்றாலும் படை அதிகாரிகளை வளைத்து போடுவதை நிறுத்தவில்லை. 1917 அக்டோபர் 15 இல் சுட்டு கொல்லப்பட்டார். பிறப்பும் இளமை பருவமும் மார்கரெத்தா ஆலந்தில் லியூவார்டன் என்ற நகரில் பிறந்தார். இவர் ஆடம் செல்லே என்ற தொப்பி வணிகருக்கும், ஆன்டி ஜெ என்பவருக்கும...