Posts

Showing posts with the label CONQUESTED

NORMANS INVADED ,CONQUESTED ENGLAND

Image
  NORMANS INVADED ,CONQUESTED ENGLAND நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல் (Norman conquest of England) என்பது 11 ஆம் நூற்றாண்டில் வில்லியம் பிரபு தலைமையில் நோர்மானியர்களும் பிரெஞ்சுப் படையினரும் இங்கிலாந்தை வலிந்து கவர்ந்த நிகழ்வைக் குறிப்பதாகும். ஹேஸ்டிங்ஸ் சண்டையில் வில்லியம், இங்கிலாந்து அரசர் ஹெரால்டை 1066 அக்டோபர் 14 அன்று வென்று இங்கிலாந்தின் மன்னராக 1066ஆம் ஆண்டு கிறித்துமசு நாளன்று முடி சூட்டிக்கொண்டார். பின்னர் தமது கட்டுக்குள் கொண்டுவந்து பல மாற்றங்களை அரசாண்மையிலும் சமூகளவிலும் ஏற்படுத்தினார். இவரது நம்பிக்கைக்குரிய பலரை பிரான்சிலிருந்து இங்கிலாந்திற்கு வரச்செய்து பதவிகளை அளித்தார். வில்லியம் இங்கிலாந்தின் மீது படையெடுத்ததற்கு அவரது குடும்ப தொடர்புகளும் ஓர் காரணமாக அமைந்தது. இங்கிலாந்து மன்னர் எட்வர்டுக்கு மக்கள் இல்லாத நிலையில் அவரது உடன்பிறப்பை மணந்திருந்த காரணத்தினால் அடுத்த வாரிசாக தாம் முடிசூட்டப்படுவோம் என நம்பினார். ஆனால் சனவரி 1066 இல் எட்வர்டின் மறைவிற்கு பின்னர், மற்றொரு வாரிசும் இங்கிலாந்தின் வெசெக்சின் மன்னருமான ஹெரால்டுக்கு முடி சூட்டப்பட்டது. இதனால் தாம்...