Posts

Showing posts with the label தமிழ்

பாரதியார் பிறப்பு 1882 டிசம்பர் 11 இறப்பு 1921 செப்டம்பர் 11

Image
பாரதியார்  பிறப்பு 1882  டிசம்பர் 11 இறப்பு 1921 செப்டம்பர் 11   நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதி தம் தாய்மொழியாம் தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" எனக் கவிபுனைந்த கவிஞாயிறு. சமற்கிருதம், வங்காளம், இந்தி, பிரான்சியம், ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர்.  பழந்தமிழ்க் காவியங்களின் மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்டவர் என்று அறியப்படுகின்றார். தேசிய கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர் என்றும் அண்மைக்கால தமிழின் தன்னிகரற்ற கவியேறு என்றும் பலர் கருதுகின்றனர். “ தேடிச் சோறுநிதந் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிப்...

பிரபல கொடைவள்ளல் / சிரிப்பு நடிகர் என் .எஸ் .கிருஷ்ணன் பிறந்த நாள் 1908 நவம்பர் 29 இறந்த நாள் 1957 ஆகஸ்ட் 30

Image
பிரபல கொடைவள்ளல் / சிரிப்பு நடிகர்  என் .எஸ் .கிருஷ்ணன்    பிறந்த நாள்  1908 நவம்பர் 29  இறந்த நாள் 1957 ஆகஸ்ட் 30  “சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கு சொந்தமானது சிரிப்பு” ‘கலைவாணர்’ தமிழ் திரைப்படத்துறையில் ‘கலைவாணர்’ என அழைக்கப்பட்ட என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்க வைத்தவர்.  “சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கு சொந்தமானது சிரிப்பு” என்ற பாடல் ஒன்றே என். எஸ். கலைவாணரின் நகைச்சுவைக் கலந்த சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும். தமிழ் சுனிமா உலகில் நகைச்சுவைக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, பிறர் மனதைப் புண்படுத்தாமல் நகைச்சுவைகளைக் கையாளும் அற்புதக் கலைஞன். தமிழில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே இணையற்ற நகைச்சுவை நடிகராக விளங்கிய இவர், உலகப் புகழ்பெற்ற சார்லி சாப்ளின் போல, சிரிப்புடன் சிந்தனையையும் கலந்து கொடுத்தவர்.  ஒரு நாடகக் கலைஞனாக...

டை ரக்டர் கே.பாலசந்தர் - அவன் ஒரு தொடர்கதை

Image
டை ரக்டர் கே.பாலசந்தர் -  அவன் ஒரு தொடர்கதை  டை ரக்டர் கே.பாலசந்தர் வாழ்க்கையில் சில சோக சம்பவங்கள் நடந்தன. அதன் விளைவாக அவர் படங்களில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களைப் புகுத்தினார். பொதுவாக பாலசந்தரின் படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். பெண்களின் பிரச்சினைகள் அலசப்படும். பெண் உரிமை வலியுறுத்தப்படும். சமூக சீர்திருத்த கருத்துக்கள் எடுத்துக் கூறப்படும். இதற்குக் காரணம் என்ன என்பது குறித்து பாலசந்தர் எழுதியிருப்பதாவது:- எங்கள் குடும்பம் பெரிய குடும்பம்தான். அண்ணன் பாலசுப்பிரமணியன் மூத்தவர். அவருக்குப்பின் சேதுலட்சுமி, மங்களம், சரசுவதி என்ற மூன்று மூத்த சகோதரிகள். ஐந்தாவதாக நான். எனக்கு அடுத்து ஒரு தங்கை nஜயலட்சுமி. நான் சின்னஞ்சிறுவனாக இருந்தபோதே எனது மூத்த சகோதரிகளான சேதுலட்சுமி, மங்களம், சரசுவதி ஆகியோருக்கு திருமணமாகிவிட்டது. அதுவும் நான் பிறப்பதற்கு முன்பே மங்களம் அக்காவுக்குத் திருமணம் முடிந்து விட்டது. அப்போது அக்காவுக்கு வயது 8. நான் பிறப்பதற்கு முன்பே திருமணமான மங்களம் அக்கா, அடுத்த ஆண்டே கணவனை இழந்து விட்டாள். ...

‘புரட்சிக் கலைஞர்’ எனவும், ‘கேப்டன்’ எனவும் அழைக்கப்படும் விஜயகாந்த் பிறப்பு: ஆகஸ்ட் 25, 1952

Image
‘புரட்சிக் கலைஞர்’ எனவும்,  ‘கேப்டன்’ எனவும் அழைக்கப்படும்  விஜயகாந்த் பிறப்பு: ஆகஸ்ட் 25, 1952 @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ விஜயகாந்த் மற்றவர்களைப்போலல்லாமல் தானாக முயன்று முன்னுக்கு  வந்தவர் .இளைமையில் சிற்சில நாடகங்களில் நடித்து வந்ததாக ,தானும் அவருடன் நடித்திருப்பதாக மதுரையை சேர்ந்த நாடக நடிகை ஒருவர் கூறினார்  1975-1980. அப்போது சிவகாசிக்கு விஜயகாந்த் வந்திருப்பதாகவும் ,அவருடன் போட்டோ பிடிக்க வருமாறு அழைத்தார் .அப்போது திருத்தங்கலில் அசோக் கலர் போட்டோ ஸ்டுடியோ என்ற பெயரில் ஸ்டுடியோ நடத்தி வந்தேன் .  சுமார் 5 மணிக்கு பழனியப்பா பேலஸ் என்ற சாதாரண லாட்ஜில் 2-3 நண்பர்களுடன் வந்திருந்தார் .அப்போது அவருடைய சமீபகால படங்கள்  தோல்வியை தழுவியிருந்தன .எனவே ஒவ்வொரு ஊராய் சென்று திரையிடும் தியேட்டர்களில் இடையில் ரசிகர்களை சந்தித்தும் வந்தார் .  1986 JANUARY 22    பார்ப்பதற்கு மிகவும் ஜம் என்று அழகாக உடை அணிந்து புன்னகையுடன் காட்சி அளித்தார் நானும் சிலரை படம் எடுத்துவிட்டு ஒரு ஓரத்தில் நின்று கொண்டேன் .ஒரு 10 ...