S.V.SAHASRANAMAM , FIGHTER OF INDEPENDENCE THROUGH DRAMA BORN 1913 NOVEMBER 29- 1988 FEBRUVARY 19
S.V.SAHASRANAMAM , FIGHTER OF INDEPENDENCE THROUGH DRAMA BORN 1913 NOVEMBER 29- 1988 FEBRUVARY 19 எஸ். வி. சகஸ்ரநாமம் (நவம்பர் 29, 1913 - பெப்ரவரி 19, 1988) நாடகக் கலைஞரும், திரைப்பட நடிகரும் ஆவார். தமிழ் நாடகக் கலைக்காக அரும்பணி ஆற்றியவர். தமது சிறப்பானப் பணிக்காக இந்திய அரசின் சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர். 200க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். இளமைக் காலம்[மூலத்தைத் தொகு] கோவையை அடுத்த சிங்காநல்லூரில் பிறந்தவர்[1]. சிறு வயதிலேயே தாயை இழந்த சகஸ்ரநாமம் தமது வறிய, பெரிய குடும்பத்தின் வீட்டுக் கஷ்டத்தினால் சித்தப்பாவின் பலகாரக் கடையில் வேலை செய்ய சென்றபோது தற்செயலாக உள்ளூரில் பாய்ஸ் கம்பெனி நாடகம் ஒன்றைப் பார்த்து, குடும்ப நெருக்கடியிலிருந்து தப்பித்துப் போய்ச் சுதந்திரமாக ஆடிப்பாடி நடிக்கும் வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டார். வீட்டை விட்டு ஓடிப் போய் அப்பாவின் பொய்க் கையெழுத்தைப் போட்டு, மதுரை பாலசண்முகானந்த சபா மேலாளர் காமேஸ்வர அய்யரிடம், "சம்மதம்" என்று கடிதத்தைக் கொடுத்து நாடகக் கம்பெனியில்...