SHENBAGARAMAN PILLAI OF TAMILNADU AND GERMANY
SHENBAGARAMAN PILLAI OF TAMILNADU AND GERMANY சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர், செண்பகராமன் பிள்ளை. நாஞ்சில் நாட்டை சேர்ந்த இவர் மீது, 17 வயதிலேயே ராஜ துரோக குற்றம் தேடி வந்தது. ஆங்கிலேயரிடம் சிக்கி, கொடுமைப்படுவதை விட, தலைமறைவாகி விடுவதே நல்லது என, மும்பைக்கு பயணமானார். அங்கிருந்து, ஒரு ஆங்கிலேயர் உதவியுடன், இத்தாலி சென்றார். இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்தில் மேற்கல்வி படித்து, ஜெர்மனிக்கு சென்று, டாக்டர் பட்டமும் பெற்றார். இதனிடையே, சுவிட்சர்லாந்தின், ஜூரிச் நகரில் இருந்தபோது, 'அனைத்துலக இந்திய ஆதரவு குழு' ஒன்றை துவக்கினார். அது சார்பாக, 'இந்தியா ஆதரவு' என்ற பத்திரிகையையும் துவக்கி நடத்தினார். ஜெர்மன் மன்னருடன் நல்ல நட்பில் இருந்தார், செண்பகராமன். ஜெர்மனியில், ஆங்கிலேய எதிர்ப்பு பிரசாரம் செய்து, ஆதரவு பெற்றார். இந்தியாவில் ஆங்கிலேயரை விரட்ட முயன்றவர்களுக்கு, ஆயுதம் வினியோகம் செய்து, அவர்களை விரட்ட வேண்டும் என்பது, அவரது திட்டம். அப்போது, திலகரை தொடர்பு கொண்டார். திலகர் ஆதரவாளராக இருந்த, வ.உ.சிதம்பரனாருக்கும் இந்த விஷயம்...