Posts

Showing posts with the label HEMU

HEMU VIKRAMADITYA ,HINDU KING

Image
  HEMU VIKRAMADITYA ,HINDU KING ஹேமு விக்ரமாதித்யா வரலாறு: முகலாய படைகளைத் தோற்கடித்து டெல்லியை கைப்பற்றிய இந்து அரசர் ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (உலக நாடுகளில் பதிவான பழங்காலச் சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 44வது கட்டுரை இது.) ஹரியாணா மாநிலம் ரேவாரியில் வசித்தவர் ஹேமு. இடைக்கால இந்தியாவில் போட்டி முஸ்லிம் ஆட்சியாளர்களிடையே குறுகிய காலத்திற்கு 'இந்து ராஜ்ஜியத்தை' நிறுவிய பெருமை ஹேமுவுக்கு உண்டு. அவர் தனது முழு வாழ்க்கையிலும் மொத்தம் 22 போர்களை வென்றுள்ளார். இதன் காரணமாக, சில வரலாற்றாசிரியர்கள் அவருக்கு 'இடைக்கால இந்தியாவின் சமுத்திர குப்தா' என்ற பட்டத்தை வழங்கினர். ஹேமு 'இடைக்காலத்தின் நெப்போலியன்' என்றும் அழைக்கப்பட்டார். அவர் ஒரு சிறந்த போர்வீரராகவும் திறமையான நிர்வாகியாகவும் இருந்தார். அவரது போரிடும் திறமையை அவரது நண்பர்களுடன் கூடவே அவரது...

SECOND PANIPAT WAR 1556 NOVEMBER 5 -AKBAR VS HEMU

Image
  SECOND PANIPAT WAR 1556 NOVEMBER 5  -AKBAR VS HEMU இரண்டாம் பானிபட் போர் (Second Battle of Panipat) வட இந்தியாவை ஆண்ட தில்லி பேரரசர் ஹெமுவின் படைகளுக்கும், அக்பரின் போர்ப்படைகளுக்கும் இடையே, 5 நவம்பர் 1556இல் பானிபட் என்ற இடத்தில் போர் நடைபெற்றது[5] போரில் அக்பர் வென்றார் பின்னனி வட இந்தியப் பேரரசர் ஹெமு 24 சனவரி 1556இல் மொகலாய அரசர் உமாயூன் இறந்த போது, அவரின் மகன் அக்பருக்கு வயது 13. அப்போது மொகலாயர் அரசு காபூல், காந்தகார் மற்றும் பஞ்சாப் மற்றும் தில்லியின் சில பகுதிகளை மட்டுமே கொண்டிருந்தது. 14 பிப்ரவரி 1556இல் அக்பர் தனது காப்பாளரும் மாமனுமாகிய பைராம் கானுடன் பஞ்சாபில் காலநௌர் பகுதியில் இருந்தார். ஹெமு என்பவர், ஆப்கானிய தில்லி ஆட்சியாளர் அடில் ஷாவின் தலைமை அமைச்சராகவும், தலைமைப் படைத்தலைவராகவும் இருந்தவர். ஹெமு என்ற ஹேமசந்திர விக்கிரமாதித்தன் கி. பி 1556இல், தில்லிப் போரில் அக்பரை வென்று தில்லி அரியணை ஏறினார். போர் பானிபட் என்ற இடத்தில் 5 நவம்பர் 1556 அன்று மொகலாயரின் 10,000 தரைப்படைகள்,[7][8] ஹெமுவின் 30,000 தரைப்படையினருடன் போரிட்டது. ஹெமுவின் யானைப் படைகள் மொகலாயர் படை...