Posts

Showing posts with the label Elton

Douglas Elton Fairbanks SILENT FILM HOLLYWOOD BORN 1883 MAY 23 -1939 DECEMBER 12

Image
Douglas Elton Fairbanks SILENT FILM HOLLYWOOD BORN 1883 MAY 23 -1939 DECEMBER 12 .டக்ளஸ் ஃபேர் பேங்க்ஸ் - ஹாலிவுட் பேசா பட யுகத்தின் அரசன் உலக சினிமா உலக வரலாறு நடிகவேள் எம்.ஆர்.ராதாவை தமிழகத்தின் டக்ளஸ் என்று அழைப்பதுண்டு. யார் அந்த டக்ளஸ் என்று பலருக்குள்ளும் ஒரு கேள்வி எழுந்திருக்கக்கூடும். அது 1920. வாரன் ஜி.ஹார்டிங் அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மது விலக்கு அங்கு முழு வீச்சில் அமலாகியிருக்கிறது. 19-வது சட்டத்திருத்தத்தின் மூலம் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வந்துசேர்ந்திருந்தது. அமெரிக்காவின் முதல் வர்த்தக ரீதியிலான வானொலி நிலையம் காற்றில் தனது அலைவரிசையை முதன்முதலில் பரப்பத் துவங்கியிருந்தது. இந்தச் சூழலில்தான் பேசாப்படம் தனது உச்சக்கட்டப் புகழில் மக்களிடையே ஒருவிதக் கலைக் காய்ச்சலையே உண்டுபண்ணியிருந்தது. Douglas Fairbanksபழைய நாடக இசை அரங்குகள் சில எஞ்சியிருந்த போதும், புதிய சினிமா மாளிகைகள் மிகுந்த எழுச்சியோடு உதயமாகத் தொடங்கின. முழுமையான மேற்கத்திய இசைக் குழுக்களின் வீரியமிக்க இசையுடனான அமெரிக்காவின் சினிமா முழு வீச்சில் மக்களிட...