TRUTH IS STRANGER THAN FICTION - THE STORY OF WILLIAM WALDORF AND GEORGE C. BOLDT
TRUTH IS STRANGER THAN FICTION - THE STORY OF WILLIAM WALDORF AND GEORGE C. BOLDT (William Waldorf Astor/WIFE) அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா நகரம். நள்ளிரவு நேரம். மழை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது. நகரத்தையே மூழ்கடித்துவிடும் மூர்க்கத்தோடு அடைமழை கொட்டித் தீர்த்துக்கொண்டிருந்தது. அந்த சின்ன ஹோட்டலுக்கு வெளியே ஒரு வாடகை கார் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு முதியவரும் அவர் மனைவியும் இறங்கினார்கள். மெள்ள அடியெடுத்துவைத்து ஹோட்டலுக்குள் நுழைந்தார்கள். வரவேற்பறையில் ஓர் இளைஞன் அமர்ந்திருந்தான். அவனருகே இருவரும் போனார்கள். அந்த முதியவர் தன் தலையில் அணிந்திருந்த தொப்பியைக் கழற்றிக் கைகளில் வைத்துக்கொண்டார். இளைஞனைப் பார்த்து முகமன் கூறினார். ``இன்று இரவு தங்குவதற்கு இந்த ஹோட்டலில் எங்களுக்கு ஓர் அறை கிடைக்குமா?’’ என்று கேட்டார் வந்தவர். இளைஞன் புன்னகை மாறாமல் அவரையும் அவர் மனைவியையும் பார்த்தான். மென்மையான குரலில் அவரிடம் சொன்னான்... ``ஐயா மன்னிக்கவும். இன்றைக்கு இந்த நகரத்தில் மூன்று முக்கியமான பெரிய விழாக்கள், கூட்டங்கள் நடந்திருக்கின்றன. அதனால் நகரிலிருக்கும் எல்லா ஹோட்டல்களுமே நிரம்...