Posts

Showing posts with the label செய்

வெள்ளையனே வெளியேறு - விருதுநகரில் போராட்டம் AUGUST 11,1942

Image
வெள்ளையனே வெளியேறு -  விருதுநகரில் போராட்டம்  AUGUST 11,1942 1942 ஆகஸ்டு 8 இல் பம்பாயில் கூடிய அனைத்து இந்திய காங்கிரஸ் குழு வெள்ளையனே வெளியேறு என்று ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தார் அவர் ஷேக்ஸ்பியரின் ஹாம்லட் நாடக பாணியில் ஒரு பன்ச் டயலாக் ஒன்றை முன் மொழிந்தார் - TO BE OR TO BE என்ற பாணியை கடைப்பிடித்தார் அவர் சொன்ன மந்திரச்சொல் " செய் அல்லது செத்து மடி" 1942 ஆகஸ்டு 9 மறுநாள் மஹாத்மா காந்தி ,மஹாதேவ் தேசாய் ,மற்றும் கண்ணுக்கு தெரிந்த தலைவர்கள் கைது செய்யப்பட்டனர் -காங்கிரஸ் இயக்கம் தடை செய்யப்பட்டது  மறுநாள் ஆகஸ்ட் 10 காமராஜ் ,கஸ்துரிபாய் கைது செய்யப்பட்டனர் -மதுரையில் கலவரம் நடந்தது .போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 வயது சிறுவன் மாண்டான் .எனவே தமிழ் நாடெங்கும் எழுச்சியும்,கிளர்ச்சியும் ஏற்பட்டது ஆகஸ்ட் 11,1942 விருதுநகர் தெப்பக்குளம் தெற்கு படித்துறையில் போலீஸ் குதிரைப்படை நிறுத்தப்பட்டிருந்தது - ஒவ்வொரு குதிரையும் 6 அடி உயரத்திற்கு குறையாமல் நிறுத்தப்பட்டிருந்தன .. இங்கிருந்து மூன்று வழிப்பாதை தொடங்குகிறது -தெற்...