FODDER SCAM - LALLU PRASAD YADAV COVICTED
FODDER SCAM - LALLU PRASAD YADAV COVICTED தீவன ஊழல் வழக்கு: லாலு குற்றவாளி எனத் தீர்ப்பு பிஹார் மாநில முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கால்நடைத் தீவன ஊழல் வழக்கு ஒன்றில் குற்றவாளி என்று ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பு வெளியானவுடன் நீதிமன்ற வளாகத்திலேயே அவர் கைது செய்யப்பட்டார். வரும் ஜனவரி 3-ஆம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவுள்ளன. மொத்தம் 34 பேர் குற்றம் சாட்டப்பட்டிருந்த இந்த வழக்கில் 11 பேர் விசாரணை காலத்தின்போது மரணம் அடைந்தனர். இந்த வழக்கில் லாலு உள்பட 16 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. லாலு முதலமைச்சராக இருந்த 1991 மற்றும் 1994 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே தியோகார்க் கருவூலத்தில் இருந்து 84 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் முறைகேடாக எடுக்கப்பட்டதாக தொடரப்பட்ட இந்த வழக்கின் வாதம் கடத்த டிசம்பர் 15 அன்று முடிவடைந்தது. அரசுப் பணத்தை முறைகேடாக அதிகாரிகள் கையாடல் செய்தது தெரிந்தும் அப்போது முதலமைச்சராக இருந்த லாலு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இரு...