30% டெப்ரிசியேஷன், 3 ஆண்டில் வாகனத்தின் விலை ஜீரோ... கைகொடுக்குமா புதிய திட்டம்! ரஞ்சித் ரூஸோ 2001 பிப்ரவரிக்குப் பிறகு, (19 ஆண்டுகள் கழித்து) கடந்த ஜூலை மாதத்தில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது ஆட்டோமொபைல் துறை. பொருளாதாரம் யூடர்ன் அடிப்பதை காட்டும் முதல் இண்டிகேட்டர் ஆட்டோமொபைல்தான். இந்த 21-ம் நூற்றாண்டில் நாம் சந்திக்கும் மூன்றாவது மந்தநிலை இது இதற்கு முன்பு ஏற்பட்ட அனைத்துப் பொருளாதார மந்தநிலையிலும் முதலில் பாதித்தவை கமர்ஷியல் வாகனங்களின் விற்பனை தான். அதற்குப் பிறகு, இது ஒரு நோய் போல அனைத்து செக்மென்ட்டுகளுக்கும் பரவும். டூ-வீலர் செக்மென்ட்தான் கடைசி. ஆனால், பெரும்பாலும் டூ-வீலர் செக்மென்ட்டுக்கு பரவும் முன் மந்தநிலை தானாகவே சரியாகிவிடும். இம்முறை வித்தியாசமாக முதலில் பாதிக்கப்பட்டது கார் செக்மென்ட். அதன்பிறகுதான் கமர்ஷியல் வாகனங்கள். இந்தியாவில் 80 சதவிகித சந்தையை கொண்டிருக்கும் இருசக்கர வாகனங்களும் இப்போது பாதிப்படைந்துள்ளன. ஆட்டோமொபைல் ஆட்டோமொபைல் vikatan இந்தப் பாதிப்பு எவ்வளவு பெரியது என்றால், ப கார்களின் விற்பனை கடந்த ஆண்டு ஜூலை மாதத்தை ஒப்பிடும்போ...
Posts
Showing posts from August, 2019
RAJASHREE , LEGEND ACTRESS BORN 1945 AUGUST 31
- Get link
- X
- Other Apps
RAJASHREE , LEGEND ACTRESS BORN 1945 AUGUST 31 ராஜஸ்ரீ – சிலப்பதிகாரத்தின் கதையை மையமாக வைத்து வெளியான தமிழ்த் திரைப்படம் பூம்புகார். இப்படத்தில் மாதவியாக நடித்து புகழ்பெற்ற பழம்பெற்ற நடிகை ராஜஸ்ரீ. பல்வேறு படங்களில் நடித்து மக்கள் மனதைக் கவர்ந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். “”ராஜஸ்ரீ பிறந்தது ஆந்திராவில் உள்ள ஏலூர் என்ற கிராமத்தில். அங்கு ராஜஸ்ரீயினுடைய அப்பா ஸ்டேஷன் மாஸ்டராக இருந்தார். இவருடன் கூட பிறந்தது ஒரே ஒரு அக்கா மட்டும் தான். அப்போதே அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் இருந்தார்கள். ராஜஸ்ரீக்கு பத்து வயதிருக்கும் பொழுது சென்னைக்கு வந்தார். அப்போ தி.நகரில் ராஜஸ்ரீ இருந்த தெருவில் தான் நடிகை ஜமுனா, கிருஷ்ணகுமாரி, ஹீரோ செல்லம் என தெலுங்கு நடிகர்கள் வீடும் இருந்தது. “நாக தேவதை’ படத்தில் ஜமுனாவின் சின்ன வயசு கதாபாத்திரத்தில் நடித்தார். ஒரே பாட்டுல சின்ன வயசுல இருந்து பெரிய வயசுக்கு மாறுவது மாதிரி காட்சி. அது தான் ராஜஸ்ரீ நடித்த முதல் படம். அதன்பிறகு ஏவி.எம்மில் ரா...
- Get link
- X
- Other Apps
அத்தமும் வாழ்வும் அகத்துமட் டேவிழி அம்புஒழுக மெத்திய மாதரும் வீதிமட் டேவிம்மி விம்மியிரு கைத்தலம் மேல்வைத்து அழும்மைந் தரும்சுடு காடுமட்டே பற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவமுமே -பட்டினத்தார் வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ. கண்ணாதாசன் சென்னை திருவொற்றீயூரில் விப்கோ கம்பேனியில் வேலை செய்த போது பட்டினத்தார் சமாதிக்கு போவது வழக்கம்.
SHEENABORA MURDER CASE,MYSTERY
- Get link
- X
- Other Apps
SHEENABORA MURDER CASE,MYSTERY சீனா போரா (Sheena Bora) என்ற 24 வயது இளம்பெண் ஒருவர் மும்பையிலிருக்கும் மும்பை மெட்ரோ ஒன் நிறுவனத்தில் செயல் பணியாளராக பணியாற்றி வந்தார். இவர் ஊடகத் துறையில் பிரபலமாக விளங்கிய இந்திராணி முகர்ஜி மற்றும் சித்தார்த்தா தாஸ் ஆகியோரது மகள் ஆவார். சீனா போராவிற்கு மெக்கேல் போரா என்ற ஒரு தம்பியார் இருக்கின்றார். சீனா போரா தனது தாயாரான இந்திராணி முகர்ஜியின் மூன்றாவது கணவரும், ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் தலைமை அலுவலராக பணியாற்றிய பீட்டர் முகர்ஜியின் முதலாவது மனைவியின் மகனான ராகுல் முகர்ஜியை காதலித்தும் வந்தார். கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 24 முதல் அவர் காணாமல் போனார், அதன் பின் அவரைப் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 2015-யில் அநாமதேயர் ஒருவரால் வழங்கப்பட்ட துப்பின் அடிப்படையில் மும்பை காவல்துறையினர் அவருடைய தாயாரான இந்திராணி முகர்ஜியை சீனா போராவை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்தனர். அவருடன் இந்திராணி முகர்ஜியின் இரண்டாவது கணவரான சஞ்சீவ் கண்ணா மற்றும் வாகன ஓட்டுநர் சியாம்வர் பிந்துராம் ராய் ஆகியோரையும் கொலைக்கு உடந்தையாக இருந்தனர்...
KARUNANIDHI IMPLEMENTED PROHIBITION 1971 AUGUST 30
- Get link
- X
- Other Apps
அண்ணாவுக்கு பின்னர் முதல்வரான கருணாநிதி முதன் முதலில் மதுவிலக்கை ரத்து செய்தார். 1971 AUGUST 30 நாளை தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஆட்சி அமையுமெனில், மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. இவரின் கருத்துக்கு, ஆதரவும் எதிர்ப்புமாக பல்வேறு கருத்துகள் சொல்லப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மதுவிலக்கு விஷயத்தில் தமிழகத்தை ஆண்ட கட்சிகள் இதுவரை கடைபிடித்து வந்த நிலைகள் என்னென்ன? மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டதன் பின்னணி எல்லாம் சுவாரஸ்யமான வரலாறு. அதைப்பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம். சுதந்திர இந்தியாவில் 1971-ம் ஆண்டு வரை தமிழகத்தில் மதுவிலக்கு அமலில் இருந்தது. சுதந்திரம் பெற்ற பின்னர் தமிழக முதல்வராக இருந்த ராஜாஜி துவங்கி, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, காமராஜர், எம்.பக்தவத்சலம், அண்ணா வரை எந்த முதல்வரும் மதுவிலக்கை ரத்து செய்ய முன்வரவில்லை. மதுவிலக்கை ரத்து செய்யலாம் என பல யோசனைகள் இவர்களுக்கு சொல்லப்பட்ட போதும், அதையெல்லாம் இந்த முதல்வர்கள் மறுத்தார்கள். தி.மு.க. 1967-...
DARA SHUKOH , BROTHER OF AURANGAZEEB MURDERED 1659 , AUGUST 30
- Get link
- X
- Other Apps
DARA SHUKOH , BROTHER OF AURANGAZEEB MURDERED 1659 , AUGUST 30 தாரா சிக்கோ (Dara Shukoh, தாரா ஷிக்கோ, பாரசீகம்: دارا شكوه , மார்ச் 20, 1615 – ஆகத்து 30, 1659) முகலாயப் பேரரசன் ஷாஜகானுக்கும் மும்தாஜ் மகாலுக்கும் பிறந்த மூத்த மகனும், முடிக்குரிய இளவரசரும் ஆவார். பாரசீக மொழியில் தாரா ஷிகோ என்றால் “புகழ் வாய்ந்தவன்” என்று பொருள். மன்னர் ஷாஜஹானும், உடன்பிறந்த ஜஹனாரா பேகமும் முகலாய ஆட்சிக்கு வாரிசாக தாரா சிக்கோவைத்தான் எண்ணியிருந்தார்கள். ஆனால், ஒரு கொடூரப் போருக்கு பின்னர், தாரா ஷிகோவை அவருடைய இளைய சகோதரர் அவுரங்கசீப் தோற்கடித்துக் கொலை செய்து ஆட்சிப் பொறுப்பினைக் கைப்பற்றினார்.[1][2][3]. மரணம் 1657-ஆம் ஆண்டு ஷாஜஹான் உடல் நோய்வாய்ப்பட்ட சமயம், அரியணையை கைப் பற்ற அவரின் நான்கு புதல்வர்களிடையே கடும் போராட்டம் ஏற்பட்டது. இவர்களில் தாரா ஷிகோவிற்கும், ஔரங்கசீபிற்குமே அதிக வாய்ப்பிருந்தது. இப்போராட்டத்தின் முதற்கட்டமாக, பெங்காலின் மன்னனாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார். ஸாஜஹானின் இரண்டாவது மகன் ஷா ஷூஜா. மற்றொரு பக்கம், தாரா ஷிகோ, ஷாஜஹானின் மூன்றாவது மகனான ஔர...
JAMUNA ,LEGEND ACTRESS BORN 1936 AUGUST 30
- Get link
- X
- Other Apps
JAMUNA ,LEGEND ACTRESS BORN 1936 AUGUST 30 ஜமுனா – பிறப்பு- 30.08.1936 – வயது-77. நிச்சயதாம்பூலம், குழந்தையும் தெய்வமும், தங்கமலை ரகசியம், நல்லதீர்ப்பு, தாய் மகளுக்குக் கட்டிய தாலி, மிஸ்ஸியம்மா போன்ற பல்வேறு தமிழ்ப் படங்களிலும் 198-க்கும் மேற்பட்ட தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்த அழகும் ஆற்றலும் கொண்ட புகழ்பெற்ற நடிகை. தெலுங்கில் புட்டில்லு என்ற படத்தில் 1952-இல் அறிமுகமானார். நடிக்க வருமுன் பள்ளியில் மேடையில் நடித்து வந்தார். இந்திப்படங்களிலும் நடித்துள்ளார். ஜுல்லாரி ரமணராவ் என்ற கல்லூரி விரிவுரையாளரை மணந்து கொண்டார். இவர்கட்கு வம்சி கிருஷ்ணா என்ற மகனும் ஷ்ரவந்தி என்ற மகளும் உள்ளனர். தமிழிலும் தெலுங்கிலும் சிவாஜிகணேசன்,ஜெய்சங்கர், ஜெமினிகணேசன், நாகேஷ்வரராவ், என்.ரி.ராமராவ், சோபன்பாபு போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்தவர். அமுதாய்ப் பொழிந்த நிலவு -அந்தநாள் ஞாபகம் புராணப் படங்களின் ஆதிக்கம் குறையாத ஐம்பதுகளில் தெலுங்கு சினிமாவை சீர்திருத்த சினிமாவாக மாற்றிக்காட்டிய சினிமா சிற்பிகளில் முக்கியமானவர் கரிகாபட்டி ராஜா ராவ். புகழ்பெற்ற மருத்துவராகவும் இருந்த இவ...