Tuesday 13 August 2019

பாலயோகினி பேபி சரோஜா



பாலயோகினி பேபி சரோஜா


அன்றைய புகழ்பெற்ற இயக்குனர் கே சுப்ரமணியம் அவர்களால் பாலயோகினி (1937)  திரைப்படத்தின் மூலம் ஐந்து வயது குழந்தை ஒருவர் அறிமுகம் ஆனார்... குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட பாலயோகினி படத்தில்...அந்த  ஐந்து வயது குழந்தையுடன்  கே ஆர் செல்லம், பால சரஸ்வதி, ஆர் பிரகதாம்பாள், பேபி ருக்குமணி ஆகியோரும் நடித்தனர்... படம் வெளிவந்தபோது அனைவரையும் விட அந்தக்குழந்தை மிகப்பெரும் புகழ் அடைந்தாள்... அன்றைய புகழ்பெற்ற ஹாலிவுட் குழந்தை நட்சத்திரமான ஷர்லி டெம்பிளுக்கு இணையாக புகழப்பட்டார்... பத்திரிகைகள் அவரை தமிழகத்தின் ஷர்லி டெம்பிள் என அழைத்தன...  தமிழ் பெண்கள் தன குழந்தையாகவே அவரை பார்த்து புல்லரித்துப் போனார்கள்...  தமிழ் திரைஉலகின் சரித்திரத்தில் முதல் முறையாக அந்தக் குழந்தையின் பெயரை தங்கள் தயாரிப்புகளில் வியாபாரிகள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்... அந்தக் குழந்தை --"பேபி சரோஜா"

சரோஜா  சோப் - சரோஜா பவுடர் -  சரோஜா கண்மை -  சரோஜா வளையல்...என அவரின் பெயர் பல பொருட்களில் பயன்படுத்தப்பட்டது... மேலும் கைப்பைகள், நோட்டுப்புத்தகங்கள் உட்பட பல பொருட்களில் அவரின் புகைப்படம் பிரிண்ட் செய்து விற்பனை செய்யப்பட்டது   ...   ( பூவே பூச்சூடவா படத்திற்குப் பிறகு... நதியா வளையல் -  நதியா புடவை என பெண்கள் மத்தியில் பரபரப்பு கிளம்பியது நினைவுக்கு வருகிறது )  

பேபி சரோஜா இயக்குனர் கே சுப்ரமணியத்தின் சகோதரர் கே விஸ்வநாதனின் மகள்... இவர்களின் குடும்பம் மிகச்சிறந்த தேசபக்தக் குடும்பம்... இந்த நிலையில் ஒரு வர்த்தக நிறுவனம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த சோப்பின் மீது சரோஜாவின் படத்தை பதிந்து "சரோஜா சாண்டல்" என்கிற பெயரில் விற்பனை செய்தது  ... அந்நிய  நாட்டுப் பொருட்களை விலக்கி ஒதுக்க வேண்டும் என்கிற காந்தியின் சொல்லை கடைப்பிடிக்கும் கே விஸ்வநாதன் அந்தக் கம்பெனியின் மீது வழக்குத்தொடர்ந்து...
வெளிநாட்டு சோப்பின் மீது  தன் மகளின் பெயரையும் படத்தையும் பயன் படுத்துவதை தடுத்தார்....

வெல்க நாடு... வெல்க நல் இதயங்கள்...

"ராதே தோழி"
Film : பாலயோகினி (1937)
Lyrics : பாபநாசம் சிவன்
Music : மோதி பாபு & மாருதி சீத்தாராமையா 
Singer : பேபி சரோஜா

No comments:

Post a Comment