Posts

Showing posts from June, 2019

TZUNAMI-எனது உயிரைக் காப்பாற்றிய என்னுயிரே

Image
எனது உயிரைக் காப்பாற்றிய என்னுயிரே உன்னை என் வாழ்வின் இறுதி வரை மறக்க மாட்டேன்" மரண விளிம்பில் அந்த தைரியம் எப்படி வந்தது? - சுனாமியில் நண்பனை மீட்டவரின் கதை #MyVikatan நம் வாசகர் தியாகராஜன் 2004-ம் ஆண்டு சுனாமி அலைகளில் தன் மாற்றுத் திறனாளி நண்பரைக் காப்பாற்றிய தருணத்தைக் கட்டுரையாகப் பகிர்ந்துள்ளார்.. இடம் : கல்லூரி மாணவர் விடுதி, கடற்கரை, கடலூர். நாள் : டிசம்பர் 26 (ஞாயிறு), 2004. நேரம் : காலை 8 மணி (ஏறத்தாழ). இதுவும் ஒரு வழக்கமான காலையாகவே உதித்திருந்தது. காலை உணவை முடித்துவிட்டு செய்முறை பதிவேட்டினை நிரப்பிக்கொண்டிருந்தேன். நான் அப்போது கல்லூரி மூன்றாம் ஆண்டு பயின்று கொண்டிருந்தேன். எங்கள் கல்லூரிக்கும் கடற்கரைக்கும் இடைவெளி சுமார் 500 மீட்டர்தான் இருக்கும். கல்லூரியின் அருகிலேயே விடுதியும் இருந்தது. மாற்று திறனாளியைக் காப்பாற்றிய தியாகராஜன்.. விடுதிக்கும் கடற்கரைக்கும் இடைவெளி சுமார் 500 முதல் 600 மீட்டர்தான் இருக்கும். எங்கள் விடுதிக்கும் கடற்கரைக்கும் இடையில் பெரிய மைதானம் இருக்கும். அங்கே அவ்வப்போது கிரிக்கெட் விளையாடுவார்கள். இது வேறு எங்கும் இல்லாத சூழ...

'டாப் சிலிப்' உருவான சுவாரஷ்ய வரலாறு; தெய்வமாக போற்றப்படும் 'ஹியூகோ வுட்'

Image
'டாப் சிலிப்' உருவான சுவாரஷ்ய வரலாறு; தெய்வமாக போற்றப்படும் 'ஹியூகோ வுட்' தென்னிந்தியாவில் ஐந்து மாநிலங்களை இணைக்கும் அழகிய மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் (Western Gates) “யுனெஸ்கோ’வின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இம்மலைத்தொடர் அரபிக்கடலிருந்து வரும் குளிர்காற்றை தடுத்து, மழைப்பொழிவைத் தருகிறது. இதன்மூலமே, தமிழகத்தின் 40% நீர்த்தேவையையும், கேரளத்தின் 100% நீர்த்தேவையையும் நிறைவு செய்யப்படுகிறது.  8841-அடி உயரமுடைய ஆனைமுடி என்ற மலை உச்சியைக்கொண்ட இம்மலைத் தொடர் உலகில் பல்லுயிரின பெருக்கம் மிக்க பத்து இடங்களில் ஒன்று. இங்குள்ள பத்துக்கும் மேற்பட்ட தேசிய சரணாலயங்கள் பாதுகாக்கப்பட்ட பல்லுயிரின பெருக்கத்திற்கு வழிவகை செய்கிறது. அரிய உயிரினங்கள், மூலிகைகள் நிறைந்த பகுதியாகவும் உள்ளது. 5000-வகைத் தாவரங்கள், 139-வகைப் பாலூட்டிகள், 508-பறவைகள் 179-நீரிலும், நிலத்திலும் வாழும் உயிரினங்கள் இந்த மலைத்தொடரில் வாழ்கின்றன. உலகளவில் அழியும் நிலையில் உள்ள 325-வகை உயிரினங்கள் இங்கே கடும் போராட்டத்திற்கிடையில் உயிர் வாழ்வதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றது. இவ்வளவ...

அத்திப்பூ athippoo

Image
அத்திப்பூ கம்பம் அருகே கேகே பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மரத்தில் அத்திப்பூ பூத்துள்ளது.ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அத்தியை மனிதன் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே பார்க்க குடியும். காணக்கிடைக்காதது அரிதாக கிடைத்தால் அதை ‘அத்திப் பூத்தாற்போல’ என்பார்கள். காரணம், அத்தி மரத்தில் பூ பூப்பதை பார்ப்பது அரிது. கண்டு காய் காய்க்கும், காணாமல் பூ பூக்கும் என்ற விடுகதையே அத்தியினால் தான் உருவானது.அத்தி மரத்தின் இலை, பால், பழம், பிஞ்சு, காய், பட்டை என அனைத்துமே மருந்தாகவோ அல்லது துணை மருந்தாகவோ சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது. கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏழு அத்தி மரங்கள் உள்ளன. இதில் ஒரு மரத்தில் ஒரு பூ மட்டும் பூத்துள்ளது. தற்போது அத்திப்பழ சீசன் என்பதால் இங்குள்ள மரங்களில் அத்தி பழுத்துள்ளது. பழுத்த பழங்கள் வீணாக மண்ணில் விழுந்து கிடக்கிறது. இதன் மகத்துவமும், மருத்துவப்பலனும் மக்களுக்கு தெரியாததால் ஒருசிலரைத்தவிற யாரும் இந்த பழங்களை எடுத்துச் செல்வதில்லை.அத்தியின் மகத்துவம் குறித்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்தமருத்துவர் சிர...

shenbagavalli Dam

Image
shenbagavalli Dam இன்றைய முல்லைப்பெரியாறு அணைக்காக தமிழகம் மற்றும் கேரளாவும் அடித்துக்கொள்வது உலகம் அறிந்து ஒன்று. ஆனால் இந்த முல்லைப்பெரியாறு அணைக்கே நதிமூலம் சிவகிரி மலைகள் என்றால் பலருக்கும் தெரியாது. தமிழகம், கேரளத்தை ஒன்றிணைக்கும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது சிவகிரி. செண்பகவல்லி அணை... முல்லைப் பெரியாறு அளவுக்குப் பேசப்படாத ஓர் அணையின் கதை! இன்றைய சூழ்நிலையில் தமிழகம் தண்ணீருக்காக பிற மாநிலங்களைச் சார்ந்தே இருக்க வேண்டியுள்ளது. காவிரியாக இருந்தாலும் சரி, முல்லைப்பெரியாறு அணையாக இருந்தாலும் சரி பக்கத்து மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் தமிழகத்துக்குள் தண்ணீர் வருவது கடினம்தான். மன்னராட்சி காலத்தில் மக்களுக்காக உருவாக்கப்பட்ட தண்ணீர்த் திட்டங்கள் மக்களாட்சி காலத்தில் தண்ணீரை வைத்து அரசியல் நடத்தும் அரசியல்வாதிகள் காலில் மிதிபட்டு வருவது கூடுதல் சோகம்.  இப்படியான சூழ்நிலையில் அரசுகளின் அலட்சியத்தால் ஒருதலைமுறை மறந்துபோன தென்தமிழகத்தைச் செழிக்க வைத்த ஓர்  அணைக்கட்டு மறக்கடிக்கப்பட்ட வரலாற்றைத்தான் பார்க்கப்போகிறோம். தென்தமிழகத...