Posts

Showing posts from January, 2020

M.N.ROY FREEDOM FIGHTER BORN MARCH 21-1954 JANUARY 1954

Image
M.N.ROY  FREEDOM FIGHTER BORN  MARCH 21-1954 JANUARY 1954 மனபேந்திர நாத் ராய் அல்லது எம். என். ராய் (M. N. Roy, 21 மார்ச்சு 1887 - 26 ஜனவரி 1954) இந்தியா விடுதலை அடைய புரட்சிச் செயல்களில் ஈடுபட்டவர். ஒரு கம்யூனிஸ்ட்டு, போராளி, சிந்தனையாளர், நாத்திகர் என்று இவர் போற்றப்படுகிறார். பிறப்பும் படிப்பும் இவரது இயற்பெயர் நரேந்திர நாத் பட்டாச்சாரியா. தந்தை ஒரு புரோகிதர்.[1] ராய் மேற்கு வங்கத்தில் ஆர்பிலியா என்னும் ஊரில் பிறந்தார். அவருடைய பள்ளிப்படிப்பு ஆர்பிலியாவில் தொடங்கியது. வங்கத்தொழில்க் கழகத்தில் பொறியியலும் வேதியியலும் கற்றார். சொந்த முயற்சியில் தொடர்ந்து படித்து தம் அறிவைப் பெருக்கிக்கொண்டார். தேசிய உணர்ச்சி 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்திய தேசிய உணர்ச்சி எங்கும் பரவத்தொடங்கியது. பங்கிம் சந்திர சட்டர்ஜி, விவேகானந்தர் ஆகியோரின் எழுத்துகளைப் படித்து உணர்வு பெற்றார். பிரித்தானிய அரசுக்கு எதிராகப் போராடி இந்தியா விடுதலை பெறவேண்டும் என்று விரும்பினார். ஆயுதப்புரட்சி மூலம் மாற்றம் காணலாம் என்று நம்பினார். பொதுவுடைமைக் கட்சி மெக்சிக்கோவிலும் இந்தியாவிலும் ...

அம்மாவையும், கை ராட்டையையும் ஞாபகப்படுத்திய, அந்த சர்வோதய சங்கக் கட்டடம்

Image
அம்மாவையும், கை ராட்டையையும் ஞாபகப்படுத்திய, அந்த சர்வோதய சங்கக் கட்டடம் டாக்டர்களின் ஆலோசனையை காட்டிலும், நண்பர்களின் ஆலோசனையை பின்பற்றுவதே பெரும்பாலானவர்களின், 'சாய்ஸ்!' நானும் அதற்கு விதிவிலக்கல்ல. என் சுகரையும், ரத்த அழுத்தத்தையும் மாதந்தோறும் பரிசோதித்து, மாத்திரைகளையும்,'இன்சுலினை'யும் வழங்கும் டாக்டர், 'உணவு கட்டுப்பாடு மற்றும் நடைபயிற்சி முக்கியம்...' என்று, பலமுறை சொல்லியும் பொருட்படுத்தாமல் இருந்தேன். ''நாளைலேர்ந்து, 'பீச்'சுல நடைபயிற்சிக்கு வர்றீங்க. நீங்க வர்றீங்களா இல்லையான்னு, நான் எங்கிருந்தாவது, பார்த்துட்டு இருப்பேன்,'' என்று, நண்பர், அறிவுறுத்திய போது, தட்ட முடியவில்லை. மறுநாள் முதல், நானும், மனைவியும், 'பீச்'சில் நடை பயில ஆரம்பித்தோம். அப்போது நாங்கள், சென்னை ராயப்பேட்டை, போஸ்ட் ஆபீஸ் மாடியில் இருந்த, 'குவாட்டர்சில்' தான் குடியிருந்தோம். அங்கிருந்து, 'ஸ்கூட்டி'யில் மெரீனா பீச்சுக்கு வந்து, நடை பயின்ற பின், வண்டியை எடுத்து வீடு திரும்புவது வாடிக்கையானது. உழைப்பாளர் சிலையை கடந்து செல...

INDEPENDECE FIRST AMENDED BY CONGRESS ON 1930 JANUARY 26

Image
ஜன., 26, 1930ல் தான், ' முழு சுவராஜ்யம் மொத்த சுதந்திரம் இந்திய அரசியலமைப்பு சட்டம், ஜனாதிபதியின் கையெழுத்தை பெற்று, அமலுக்கு வந்த நாளை தான், இந்திய குடியரசு தினமாக கொண்டாடுகிறோம். ஜனவரி, 26ம் தேதியன்று கொண்டாட காரணம், ஜன., 26, 1930ல் தான், 'முழு சுவராஜ்யம் மொத்த சுதந்திரம்' என்ற கோரிக்கையை வைத்தது, காங்கிரஸ். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை, அம்பேத்கருடன் இணைந்து இறுதி வடிவம் கொடுத்த பிரபலங்கள்: ஜவஹர்லால் நேரு, ராஜாஜி, வல்லபாய் படேல், கணேஷ் வாசுதேவ் மாவலன்கர், சியாமா பிரசாத் முகர்ஜி, ராஜேந்திர பிரசாத், கே.என்.முன்ஷி, அபுல்கலாம் ஆசாத் மற்றும் பல்வந்த்ராய் மேத்தா ஆகியோர். இவர்களை தவிர, அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், என்.கோபாலசாமி, முகமது சதுல்லா, பி.எல்.மிட்டர் மற்றும் டி.பி.கைத்தான் ஆகியோரை ரகசிய உறுப்பினர்கள் என கூறுவர். இந்த அரசியலமைப்பு சார்ந்த தொகுப்பு முழுவதையும், தன் அழகான கையெழுத்தால் எழுதியவர், பிரேம் பீகாரி நரைன் ரெய்சதா. ஒரே சமயத்தில், ஹிந்தி, ஆங்கிலம் என, இரண்டிலும் அரசியலமைப்பு சட்டம் உருவானது. கையால் உருவாக்கப்பட்ட காகிதத்தில், இது எழுதப்பட்...

டாக்டர் ராஜேந்திர பிரசாத் RAJENDRA PRASAD

Image
டாக்டர் ராஜேந்திர பிரசாத் இருமுறை, இந்திய ஜனாதிபதியாக இருந்த பெருமை, டாக்டர் ராஜேந்திர பிரசாத்துக்கு உண்டு. ஜனாதிபதியான அவர், தன் தமக்கை படவதி தேவியுடன் வசித்து வந்தார். ஜன., 25, 1960ம் ஆண்டு இரவு, தமக்கை படவதிதேவி காலமாகி விட்டார்.  அடுத்த நாள் காலை, குடியரசு தினம். தமக்கை இறந்த செய்தி வெளியானால், குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு இடையூறாக இருக்கும் என்று கருதிய, ராஜேந்திர பிரசாத், அதை வெளியிடவில்லை.  அடுத்த நாள், ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டு, ராஜ்பவனுக்கு திரும்பிய சில நிமிடங்களுக்கு பிறகே, தமக்கையின் மரண செய்தி வெளியில் தெரிவிக்கப்பட்டது.

CHINNA ANNAMALAI ,FREEDOM FIGHTER BORN 1920 JUNE 18- 1980 JUNE 18

Image
CHINNA ANNAMALAI ,FREEDOM FIGHTER  BORN 1920 JUNE 18- 1980 JUNE 18 சின்ன அண்ணாமலை (ஜூன் 18 1920 - ஜூன் 18 1980) தமிழ்ப் பண்ணை சின்ன அண்ணாமலை என அறியப்படும் இவர் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, பேச்சாளர் தமிழ் எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர்[ வாழ்க்கை வரலாறு சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம் ஒ சிறுவயல் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவரது பெற்றோர் 'பாங்கர்' நாச்சியப்ப செட்டியார்- மீனாட்சி தம்பதியினர். தயாரித்த திரைப்படங்கள் "ஐந்து லட்சம்', "கடவுளின் குழந்தை', "தங்க மலை ரகசியம்' உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளர். வெளியிட்ட நூல்கள் சின்ன அண்ணாமலை, தனது தமிழ்ப் பண்ணைப் பதிப்பகத்தின் வழியாகப் பின்வரும் நூல்களை வெளியிட்டார்: பாரதிபிறந்தார்' கல்கி பெயர்க் காரணம் 1944 ல் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு ஒரு விழாவில் ரூ.20,000 நிதி திரட்டி பண முடிப்பு அளித்தார் அண்ணாமலை. அவ்விழாவில் ராஜாஜி "சின்ன அண்ணாமலை" என்று அழைத்தார். அதுவே அண்ணாமலையின் பெயராக பிரபலமானது.[3] இவருடைய படைப...