Friday 27 September 2019

ADULTRY IS NOT A CRIME - SUPREME COURT SEPTEMBER 27,2018








திருமணமான ஆண் - பெண் இடையே கள்ள உறவு கிரிமினல் குற்றம் இல்லை : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

* கள்ள உறவு விவாகரத்துக்கு வழிவகுக்கும். ஆனால், அது ஒரு குற்றமாகாது.

* கள்ள உறவால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாத வரை அது குற்றம் கிடையாது.

* பெண்களை சமமின்றி நடத்துவது அரசியலமைப்பு சட்டத்தின் கோபத்தை வரவேற்பது போன்றது.

* பெண்களுக்கு கணவர்கள் எஜமானர்கள் அல்ல.

 அரசியலமைப்பின் அழகு என்பதே நான், நீங்கள் என அனைவரையும் உள்ளடக்கியது தான்.

 மகிழ்ச்சியற்ற திருமணத்தின் விளைவாகதான் தகாத உறவு ஏற்படுகிறது.

ஒரே பெண் நீதிபதி:

கள்ள உறவு வழக்கில் நேற்று தீர்ப்பளித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இடம் பெற்ற ஒரே பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா. இவர், ‘சட்டப்பிரிவு 497 அரசியலமைப்புக்கு விரோதமானது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பிருந்தா காரத் வரவேற்பு:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா கரத் கூறுகையில், “உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். பெண்கள் ஆண்களின் சொத்தாக கருதும் சட்டத்தை உடைத்தது வரவேற்கத்தக்கது” என்றார்.



புதுடெல்லி,: ‘திருமணமான ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான கள்ள  உறவு கிரிமினல் குற்றமல்ல’ என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், கள்ள உறவை குற்றமாக கருதும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 497, அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும் அதிரடியாக ரத்து செய்துள்ளது.  திருமணமான ஆண், பெண் இடையேயான கள்ள உறவில், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 497ன் கீழ் தவறு செய்யும் ஆணுக்கு மட்டும் தண்டனை விதிக்கப்படுகிறது. பெண்ணுக்கு தண்டனை விதிக்கப்படுவது இல்லை. இந்த முரண்பாட்டை எதிர்த்து,  ஜோசப் ஷைன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘இந்திய  தண்டனை சட்டப்பிரிவு 497ல், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான கள்ள உறவு விரிவாக விவரிக்கப்படவில்லை. ஆண்களை மட்டும் தண்டிப்பதற்கான விளக்கங்கள் மட்டுமே இதில் இடம் பெற்றுள்ளன. பெண்களுக்கான தண்டனை விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. இது முரண்பாடாக உள்ளது. எனவே, இந்த சட்டப்பிரிவை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

 இந்த வழக்கில், ‘497வது சட்டப்பிரிவில் திருத்தம் செய்தாலோ அல்லது அதை ரத்து செய்தாலோ கணவன் - மனைவி என்ற திருமண உறவையே அது சிதறடித்து விடும். இந்த சட்டமானது 157 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் இருக்கிறது. அதனால், திருமண உறவு பாதுகாக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த சட்டப்பிரிவை பொருத்தவரை தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும்’ என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. ‘திருமணமான ஆணோ, பெண்ணோ முறை தவறி கள்ள உறவு வைத்துக் கொள்வது,  இருவரின் அனுமதியோடு நடக்கிறது. இதை பாலியல் வன்கொடுமை என சட்டப்பிரிவு 497ல் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், திருமண உறவை காக்க வேண்டிய பொறுப்பு இருவருக்கும் உள்ளது. மேலும், வயது வந்த இருவர் உறவு கொள்ளும்போது அதை எப்படி தண்டனைக்குரிய குற்றமாக கருத முடியும்?’ என, வழக்கின்போது நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். கடந்த மாதம் 8ம் தேதி இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்ததை தொடர்ந்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள்  ஒத்திவைத்தனர்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், கன்வில்கர், சந்திரசூட் மற்றும் இந்து மல்கோத்ரா அடங்கிய அரசியல் சாசன அமர்வு நேற்று ஒருமித்த தீர்ப்பு அளித்தது. தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது: இந்திய தண்டனைச் சட்டத்தின் 497வது பிரிவும், திருமண பந்தத்துக்கு எதிரான குற்றத்துக்கு தண்டனை அளிக்கும் சட்டப்பிரிவு 198ம், அரசியல் சாசனத்துக்கு எதிரானவை. எனவே, இந்த சட்டங்களை ரத்து செய்து உத்தரவிடுகிறோம். மேலும்,
சட்டப்பிரிவு 497வது பிரிவு தன்னிச்சையானது. குழப்பமானது மட்டுமின்றி, அரசியல் சட்டத்தில் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சம உரிமை மற்றும் சமவாய்ப்பு உரிமைகளை மீறியதாக உள்ளது. பெண்ணுக்கு அவருடைய கணவர் எஜமானர் அல்ல. பெண்களை இழிவுப்படுத்துவது, சம உரிமையின்றி நடத்துவது, பாகுபாட்டுடன் நடத்துவது போன்று பெண்களின் சம உரிமையை மீறும் எந்த நடைமுறையாக இருந்தாலும், அது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. கள்ள உறவு என்பது கிரிமினல் குற்றமல்ல. இருப்பினும் அப்படிப்பட்ட உறவு திருமண வாழ்க்கையை பாதிக்கிறது.. இதில், கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமானது அல்ல, இருவருக்கும் உரித்தானது. கள்ள உறவில் ஆண்கள் மட்டுமே தண்டனையை பெறுவது என்பதும் சம உரிமை அடிப்படையை பாதிக்கிறது.
 மேலும், பாலியல் உறவில் தனக்கு விருப்பமானவர்களை தேர்வு செய்வது என்பது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. மேலும், ஆணாதிக்க மனநிலையாலும், ஆணுக்கு பெண் அடிமை என்ற நினைப்பினாலும் கூட கள்ள உறவு நிலை ஏற்படுகிறது.

இந்த சமூகம் விரும்பும்படி இருக்க வேண்டும் என்றோ அல்லது ஒர் ஆண் நினைப்பதுபோல் பெண்ணும் நினைக்க வேண்டும் என்றோ பெண்களை கட்டாயப்படுத்த முடியாது. இது, பெண்களின் அடையாளத்தை சிதைப்பதற்கு சமமானது. எனவே, பெண்ணுக்கு கணவன் எஜமானர் அல்ல என்பதை கூறுவதற்கான நேரம் வந்து விட்டது. ஆண்- பெண் இருவருக்கும் உள்ள ஒரே அளவுகோல் தான் உள்ளது. அது, ‘அனைவரும் சமம்’ என்பதுதான். பெண்ணின் மீது கணவன் தனது ஆதிக்கத்தை காட்ட முடியாது.கள்ள உறவு என்பது விவாகரத்துக்கான ஒரு அடிப்படையாக இருக்கலாம். ஆனால், இந்த உறவு குற்றமாகாது. அதே நேரம், கள்ள உறவால் கணவன், மனைவி இருவரில் யாராவது ஒருவர் மிகவும் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டால், அது தற்கொலைக்கு தூண்டி குற்றமாக கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கலாம். ேமலும், திருமண உறவை சீர்குலைக்கும் சிவில் தவறாகவும் கள்ள உறவை கருதலாம். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதிகள் கூறியது என்ன?

கள்ள உறவு வழக்கில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வில், அவர் உட்பட 5 நீதிபதிகள் இடம் பெற்றனர். தீர்ப்பில் அவர்கள் கூறியுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: திருமண பந்தம் முறிவு உள்ளிட்ட சிவில் பிரச்னைகள் மற்றும் மகிழ்ச்சியற்ற திருமண வாழ்க்கைக்கு கள்ள உறவு காரணமாக அமைகிறது. அதேநேரம், மகிழ்ச்சியற்ற திருமண வாழ்க்கையே கள்ள உறவுக்கும் காரணமாகிறது. இருப்பினும், அந்த உறவை கிரிமினல் குற்றமாக கருத முடியாது.- தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

பெண்ணின் பாலியல் உறவு சுதந்திரத்தை சட்டப்பிரிவு 497 பறிக்கிறது. தனிப்பட்ட வழக்கையில் தனது விருப்பப்படி தேர்வு செய்வது என்பது முக்கியமானது. அதில் இருந்து, பாலியல் உறவு என்ற தேர்வை துண்டிக்க முடியாது. அப்படி செய்வது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. திருமணத்துக்குப் பிறகு தனது பாலியல் உறவு சுதந்திரத்தை கணவனிடம் மனைவி அடகு வைத்து விடுவதில்லை. திருமண பந்தத்துக்கு அப்பாற்பட்டு, தனது விருப்பப்படி யாருடனும் அவர் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும் உரிமையை பறிக்கக் கூடாது.- நீதிபதி சந்திரசூட்

சட்டப் புத்தகத்தில் இனியும் சட்டப்பிரிவு 497 நீடிக்க வேண்டும் என்பதை நியாயப்படுத்துவதற்கு எந்த காரணங்–்களும் இல்லை.
- நீதிபதி இந்து மல்கோத்ரா.

சமூகத்தின் விருப்பப்படியோ அல்லது கணவனின் விருப்பப்படியோ நடந்து கொள்ளும்படி பெண்களை கட்டாயப்படுத்த முடியாது.
- தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி கன்வில்கர்

சட்டப்பிரிவு 497, பெண்களுக்கான சம உரிமை மற்றும் சமவாய்ப்பு உரிமையை மீறியதாக உள்ளது. இது மிகவும் குழப்பமான சட்டம்.  இது, அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் இந்திய அரசியல் சட்டப்பிரிவு 14 மற்றும் 21ஐ மீறுவதாக உள்ளது. - நீதிபதி ஆர்.எப்.நாரிமன்.

வக்கீல்கள் கருத்து:

தீர்ப்பு குறித்து வக்கீல்கள் கருத்து:

ஆதிலட்சுமி லோகமூர்த்தி: பாலின பாகுபாடு இல்லாமல், அனைத்து பாலினத்தவர்களுக்கும் ஒரேமாதிரியான சட்டம் எதிர்காலத்தில் வரும் என்பதற்கு இந்த தீர்ப்பு முன்மாதிரியாக உள்ளது. ஆண்களை மட்டுமே குற்றவாளியாக்கி தண்டனை வழங்கும், சட்ட பிரிவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

பெண் தவறு செய்தாலும், ஆண் தவறு செய்தாலும் பொறுப்பு இருவருக்கும் தான் பெண்ணுக்கு பாலியல் உறவை தேர்வு செய்யக்கூடிய உரிமை உள்ளது என்பதை இந்த தீர்ப்பு சுட்டி காட்டியுள்ளது. அதே நேரத்தில், தகாத உறவு குடும்பநல நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகளை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுத்திவிடும். இதுவரை குற்றமாக இருந்த இந்த தகாத உறவு. இனிமேல் தவறு என்று கருதப்படும் என்பது இந்த தீர்ப்பின் சாரம் அம்சம்.

ஏபி.சூரியபிரகாசம்: திருமணம் ஆன, ஒரு பெண் காலத்தின் கட்டாயத்தின் அடிப்படையில் வேறு ஒரு நபருடன் உறவு வைத்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டால், அந்த பெண்ணுடன், உறவு வைத்துக்கொள்ளும் ஆணுக்கு தான் தண்டனை கிடைக்கும். அந்த பெண் தனது வாழ்வாதாரத்திற்காக உறவு வைத்திருக்கும் நிலையில் அந்த ஆண் தண்டனை பெற்று சிறைக்கு சென்றுவிட்டால் அந்த பெண்ணின் நிலை என்னவாகும்.

இந்த விஷயத்தில் பெண்ணுக்கு சாதகமாகவே, இந்த தீர்ப்பு அமைத்துள்ளது. மேலை நாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்தியாவில் தற்போது தான் பெண்களுக்கு அதிக மன உளைச்சலை ஏற்படுத்தி வந்த இந்த சட்டம் தவறு என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

அப்துல் ரகுமான்: பாலின பேதம் உறவில் இல்லை, என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. கள்ளத்தனமான உறவில் பெண் குற்றவாளியில்லை. என்ற நிலை இருந்து வந்தது. ஆண்களை மட்டுமே தண்டனைக்கு உள்ளாக்கும் இந்த சட்டப்பிரிவு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது இருபாலினத்தவருக்கும் உறவை தேர்வு செய்ய சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு குடும்பங்கலில் பிரச்னை ஏற்படுத்திவிட கூடாது.



முத்தலாக்கை போன்று  சட்ட விரோதமானது:

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ரேணுகா சவுத்ரி கூறுகையில், “முத்தலாக்கை போலவே இதுவும் சட்ட விரோதமானது. நீதிமன்ற தீர்ப்பில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், இது எங்களுக்கு எப்படி உதவும் என்று விளக்கமளிக்க வேண்டும்” என்றார்.
எப்படி வழக்கு தொடர முடியும்?

சமு்க ஆர்வலர் பிருந்தா அடிகே கூறுகையில், “ஆண்கள் இரண்டு, மூன்று திருமணங்களை செய்து கொள்கிறார்கள். முதல், இரண்டாவது அல்லது மூன்றாவது மனைவியை கைவிடும்போது பிரச்னைகள் அதிகம். கள்ள உறவு குற்றமில்லை என்றால் எவ்வாறு ஒரு பெண் கணவருக்கு எதிராக வழக்கு தொடர முடியும்? இது கவலை தருவதாக உள்ளது” என்றார்.

லைசன்ஸ்  வழங்குகிறீர்களா?
‘கள்ள உறவு குற்றமல்ல’ என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒரு பிரிவினர் வரவேற்ற போதும், சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் கூறுகையில், “  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க முடியாது. இது முற்றிலும் பெண்களுக்கு விரோதமான தீர்ப்பு. கள்ள உறவை சட்ட விரோதமில்லை என்பது நாட்டில் உள்ள பெண்களுக்கு மேலும் வலியை சேர்க்கும். இந்த நாட்டில் திருமணம் செய்து கொள்வதற்கு வெளிப்படையாக பொது உரிமத்தை கொடுத்துள்ளீர்கள் அதே நேரத்தில் கள்ள உறவையும் வைத்திருக்கலாம் என்றால், திருமணத்தின் புனித தன்மைதான் என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


எந்த நாடுகளில் கள்ள உறவு குற்றம்:

1. ஆப்கானிஸ்தான்
2. இந்ேதானேஷியா
3. வங்கதேசம்
4. ஈரான்
5. மாலத்தீவு
6. பாகிஸ்தான்
7. பிலிப்பைன்ஸ்
8. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
9. அமெரிக்காவில் உள்ள சில மாநிலங்கள்
10. அல்ஜீரியா
11. காங்கோ
12. எகிப்து
13. மொராக்கோ
14. நைஜீரியாவின் சில பகுதிகள்

எந்த நாடுகளில் கள்ள உறவு குற்றமல்ல:
1. சீனா
2. ஜப்பான்
3. பிரேசில்
4. நியூசிலாந்து
5. ஆஸ்திரேலியா
6. ஸ்காட்லாந்து
7. நெதர்லாந்து
8 டென்மார்க்
9. பிரான்ஸ்
10. ஜெர்மனி
11. ஆஸ்திரியா
12. அயர்லாந்து
13. பர்படாஸ்
14. பெர்முடா
15. ஜமைக்கா
16. டிரினிடாட் மற்றும் டொபாகோ
17. செய்செல்லஸ்
18. தென்கொரியா
19. கவுதமாலா

Monday 23 September 2019

OPERATION VIJAY - GOA SURRENDER

OPERATION VIJAY - GOA SURRENDER


ஆப்ரேசன் விஜய்’ பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை! By Aashika| Updated: Friday, July 13, 2018, 18:02 [IST] முக்கியமான ஓர் நிகழ்வை கூட்டாக செய்து முடிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு பெயரை வைத்து தொடர்ந்து அதை குறித்தான தகவல்களை பகிர்ந்து கொள்ளவும், திட்டமிட்ட செயல் எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்று அணுகும் வகையில் அது உதவிடும். இந்த விஷயம் ராணுவத்தினர் மத்தியில் ஏகப்பிரபலம்.


 இந்திய வரலாற்றில் இரண்டு முறை ஆப்ரேசன் விஜய் என்ற பெயரில் ஆப்ரேசன் நடந்திருக்கிறது. முதலாவதாக 1961 ஆம் ஆண்டு வாஸ்கோட காமா 1498 ஆம் ஆண்டு இந்தியா வந்தடைந்ததிலிருந்து சுமார் 450 ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்த போர்ச்சுகீசியர்களை வெளியேற்றும் வகையில் நடத்தப்பட்ட போர். இன்னொன்று 1999 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு நடைப்பெற்ற கார்கில் போர். விஜய் என்றால் வெற்றி என்று பொருள் தரும் கார்கில் போரில் வெற்றியடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆப்ரேசன் விஜய் என்று பெயரிடப்பட்டது. அதோடு கார்கில் விஜய் திவாஸ் என்று வருடந்தோறும் அனுஷ்டிக்கப்படுகிறது. கார்கில் போரின் போது நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் வகையில் இந்த நாளை அனுஷ்டிக்கிறார்கள். 

 இந்தியாவிற்கு நுழைய முதல் கடல் வழியை கண்டுபிடித்தவர்கள் போர்ச்சுகீசியர்கள். போர்ச்சுகீசிய வீரன் வாஸ்கோட காமா கடல் வழியாக பயணித்து காலிகட் வந்தடைகிறார். அப்போது அந்த பகுதியை ஆட்சி செய்து வந்த ஜமோரின் என்ற அரசர் அவரை வரவேற்று உபசரிக்கிறார். மூன்று மாதங்களில் கிளம்பும் போது எக்கச்சக்கமான பரிசுப் பொருட்களுடன் திரும்புகிறார் வாஸ்கோட காமா. இந்தியாவில் பரிசாக கிடைத்த பொருட்கள் அதன் உண்மையான விலையை விட சுமார் 60 மடங்கு அதிகமாக ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் விற்கப்பட்டது. 

 1501 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக வாஸ்கோடகாமா காலிகட் வருகிறார். வந்தவர் கண்ணூரில் ஒரு தொழிற்சாலையை நிறுவுகிறார். அங்கிருந்து அவர்களது ஆதிக்கம் ஆரம்பமாகிறது. அரபிய வியாபாரிகளுக்கு போர்ச்சுகீசியர்களின் இந்த வளர்ச்சி கோபத்தை உண்டாக்குகிறது. அதோடு அவர்களை மன்னர் ஆதரவு தருகிறாரே என்று கடுங்கோபம். அவ்வப்போது மன்னருக்கு போர்ச்சுகீசியர்களுக்கும் இடையில் புகைச்சலை ஏற்படுத்திக் கொண்டேயிருந்தார்கள். போர்ச்சுகீசியர்களுக்கும் மன்னருக்கும் இடையில் போர் நடந்தது. இதில் போர்ச்சுகீசியர்கள் வெற்றி பெற்றார்கள். 1505 ஆம் ஆண்டு இந்தியாவிற்கான போர்ச்சுகீசிய கவர்னராக பிரான்ஸிஸ்கோ டி அல்மீடியா பதவியேற்றார். இந்திய பெருங்கடலை தாங்களே நிர்வகிப்போம் என்றார்கள் எங்கள் அனுமதியின்றி இந்தப் பகுதியை யாரும் கடந்து செல்லக்கூட அனுமதிக்க முடியாது என்றார்கள். இதற்காக இவர்கள் கொண்டு வந்த பாலிஸி தான் ப்ளூ வாட்டர் பாலிசி

 அல்மீடியாவிற்கு பிறகு 1509 ஆம் ஆண்டு அல்ஃபோன்சோ டி அல்புக்வர்கியு என்பவர் இரண்டாம் கவர்னராக பொறுப்பேற்றார். ஒவர் பிஜாபூர் சுல்தானிடமிருந்து 1510 ஆம் ஆண்டு கோவா வை கைப்பற்றினார். கோவாவை கைப்பற்றிய அல்புக்வர்கியு தான் போர்ச்சுகீசிய கொடியை இந்தியாவில் நிலைக்கச் செய்தவர் என்று போற்றப்படுகிறார். நாளடைவில் போர்ச்சுகீசியர்களின் தலைமையிடமாக கோவா விளங்கியது. பதினாறாம் நூற்றாண்டு முடிவதற்குள்ளாக இந்தியாவைச் சுற்றி கோவா, டாமன், டியு, சால்செட் போன்ற இந்திய கடல் எல்லையை எல்லாம் கைப்பற்றி தங்கள் ஆதிக்கத்தின் கீழ் சேர்த்துக் கொண்டார்கள். 
இந்த காலகட்டத்தில் தான் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் வாணிபம் செய்வதற்காக வருகிறார்கள். இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டினை நிர்வாகம் செய்வதற்கும் இந்தியாவை விட பன் மடங்கு வளர்ந்திருக்கும் பிரிட்டிஷ்காரர்களை சாமாளிக்கும் திறன் சிறிய நாடான போர்ச்சுகீசியர்களிடம் இருக்கவில்லை. போர்ச்சுகீசியர்கள் வியாபாரத்தைவிட தங்கள் மதத்தை பரப்ப வேண்டும் என்ற நோக்கத்திற்கு பிரதான முக்கியத்துவம் வழங்கினார்கள் என்பதால் அவை இங்கே எடுபடவில்லை. மெல்ல தங்கள் ஆதிக்கத்தை இந்தியாவில் இழக்க ஆரம்பித்தார்கள். 1612 ஆம் ஆண்டு சூரத்தை பிரிட்டிஷிடம் விட்டுக் கொடுத்தார்கள். 1631 ஆம் ஆண்டு போர்ச்சுகீசியர்களிடமிருந்த ஹூக்லியை முகலாயர்கள் கைப்பற்றினார்கள்.
இப்படி ஒரு பக்கம் போர் மூலமாக ஒவ்வொன்றாக இழந்து வர போர்ச்சுகீசிய இளவரசிக்கும் இங்கிலாந்தின் இரண்டாம் சார்லஸுக்கும் 1661 ஆம் ஆண்டு திருமணம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் போர்ச்சுகீசிய இளவரசிக்கு வழங்கப்பட்ட வரதட்சனையாக போர்ச்சுகீசிய ஆதிக்கத்தில் இருந்த மும்பையை எழுதி வாங்கினார் இரண்டாம் சார்லஸ். 1739 ஆம் ஆண்டு போர்ச்சுகீசியர்களின் வடக்கு பகுதியை எல்லாம் மராத்திய மன்னர் கைப்பற்றினார். நாலாபுறமும் இப்பிடி ஒவ்வொன்றாக இழந்த போர்ச்சுகீசியர்களிடம் இறுதியாக நிலைத்தது கோவா, டாமன் மற்றும் டியு. இந்தியாவிற்கு முதன் முதலாக வந்த அந்நிய நாட்டினர் போர்ச்சுகீசியர்கள். அதே போல இந்தியாவை விட்டு கடைசியாக சென்றவர்களும் போர்ச்சுகீசியர்கள் தான். இந்தியாவிற்கு 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் கிடைத்த போதும் போர்ச்சுகீசியர்கள் கோவாவிலேயே இருந்தார்கள்.
இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுப்பதாக ஆங்கிலேயர்கள் அறிவித்துவிட்டார்கள். இந்நிலையில் ஜூலியா மெனீஸ் என்ற மருத்துவரை கோவாவில் வசித்து வந்த ராம் மனோஹர் லோஹியா என்பவர் தன் வீட்டிற்கு அழைத்திருந்தார். இதற்கு முன்பாகவே இருவரும் நண்பர்கள். மும்பையில் இருந்த போது மருத்துவர் மெனீஸை சந்தித்து மருத்துவ ஆலோசனை பெற்றிருந்தார். இருவரும் இணைந்து நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக கோவாவில் தொடர்கிற போர்ச்சுகீசிய ஆட்சியை நிறுத்த வேண்டும் என்று கூட்டங்களை போராட்டங்களை நடத்தினார்கள். இவர்களது போராட்டங்களை தொடர்ந்து போலீஸ் இருவரையும் கைது செய்தது. 
தொடர்ந்து கோவாவுக்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று தீவிரமாக போராட ஆரம்பித்தார்கள். 1946 ஆம் ஆண்டிலிருந்து போர்ச்சுகீசியர்களை ஒட்டுமொத்தமாக இந்தியாவிலிருந்து வெளியேற்றுவதற்கான திட்டங்கள் ஆயுத்தமாகின. ஒரு பக்கம் ஆங்கிலேயருக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் போர்ச்சுகீசியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறவும் போராடினார்கள். ஏராளமான மக்கள் கைது செய்யப்பட்டார்கள். கோவா மக்கள் இந்த நிலம், கடல்,மண் எல்லாமே தங்களுக்கு உரிமையானது அதனை எங்கிருந்தோ வந்த போர்ச்சுகீசியர்கள் ஆட்சி செய்து நம்மை அடிமையாக வைத்திருப்பதா என்று கேள்வி மக்கள் மனதில் எழுந்தது. 
1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற போதும் கோவா போர்ச்சுகீசியர்களின் ஆதிக்கத்திலேயே இருந்தது. இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்ற ஜவஹர்லால் நேரு போர்ச்சுகீசியர்களையும் இந்தியாவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று சூளுரைத்தார். பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. போர்ச்சுகீசியர்கள் கோவாவை விட்டு வெளியேற மாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். புதுச்சேரியில் இருந்த பிரெஞ்சு நாட்டினர் நீண்ட இழுப்பறிக்கு பிறகு ஆட்சியை இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டார்கள்.
1954 ஆம் ஆண்டு போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. போராட்டக்காரர்கள் போர்ச்சுகீசியர்களின் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி ஆகிய பகுதிகளை கைப்பற்றினார்கள். இதனைத் தொடர்ந்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியாவுக்கு எதிராக புகார் அளித்தது போர்ச்சுகீஸ். 1960 ஆம் ஆண்டு இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வெளியானது. அதில் அந்த நிலப்பகுதியை கையாளும் உரிமை போர்ச்சுகீசியர்களுக்கு இருப்பது போலவே இந்திய எல்லைக்கு உட்பட்டு இருப்பதால் இந்தியர்களுக்கும் அந்த நிலம் சொந்தமானது தான் என்று சொல்லப்பட்டது. கொல்லப்பட்டார்கள்.
 இதனைத் தொடர்ந்து மக்கள் மிகத் தீவிரமாக போராட்டத்தில் இறங்கினார்கள். கோவாவில் இருந்த டிராகோல் கோட்டையில் இந்திய கொடியை ஏற்றினார்கள். 1955 ஆம் ஆண்டு கோவாவில் இருந்த இந்திய தூதரகம் மூடப்பட்டது. சுதந்திர இந்தியாவில் இருக்கும் போர்ச்சுகீசியர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். போர்ச்சுகீசியர்களின் ஆட்சியில் கீழ் இருக்கக்கூடிய கோவா, டாமன் மற்றும் டியு ஆகிய பகுதிகளை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று பிரதமர் நேரு அறிவித்தார். போர்ச்சுகீசியர்கள் எளிதாக சென்று வியாபாரம் மேற்கொள்ளும் வழித்தடங்களில் எல்லாம் தடையை ஏற்படுத்தினார்கள். 1961 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி இந்தியப் படை கோவாவில் நுழைந்துவிட்டது. அந்த படையினருக்கு வெற்றியை குறிக்கும் வகையில் ஆப்ரேசன் விஜய் என்று பெயிரிடப்பட்டிருந்தது. சுமார் 36 மணி நேரம் தரைவழி, கடல் வழி, வான் வழி என எல்லா வழித்தடங்களையும் முடக்கியது ஆப்ரேசன் விஜய்.... வேறு வழியின்றி போர்ச்சுகீசியர்கள் இந்திய அரசங்கத்திடம் சரணடைந்தார்கள்.




MERCHANT ROYAL DROWNED 1641 SEPTEMBER 23





MERCHANT ROYAL DROWNED 

1641 SEPTEMBER 23


மெர்ச்சண்ட் ராயல் (Merchant Royal) ராயல் மெர்ச்சண்ட் என்றும் அழைக்கப்படுவது, 17ஆம் நூற்றாண்டின் ஆங்கிலேய வணிகக் கப்பலாகும். இது 1641 செப்டம்பர் 23அன்று கோர்ன்வால் கவுண்டியில், லாண்ட்'ஸ் எண்டில் கடலில் மூழ்கியது. இக்கப்பலில் (இன்றைய மதிப்பில் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்) குறைந்தது 100,000 பவுண்டு தங்கம் [3], மெக்சிகன் வெள்ளிப் பாளங்கள் 400 (மேலும் 1 மில்லியன்) கிட்டத்தட்ட 500,000 எசுப்பானிய டாலர்கள் மற்றும் பிற நாணயங்கள், என அனைத்தும் சேர்ந்து இதை அனைத்து காலத்துக்காமான மிகவும் மதிப்புமிக்க மூழ்கிய கப்பலாக ஆக்கியது. [4]

மர்ச்சன்ட் ராயால் 1637 முதல் 1640 வரை மேற்கு இந்திய தீவுகளில் எசுமானியக் குடியேற்றங்களில் மூன்று ஆண்டுகள் வணிகம் செய்தது. இக்காலகட்டமானது இங்கிலாந்துக்கும் எசுபானியாவுக்கும் அமைதியான நல்லுறவு நிலவிவந்தத காலமாகும். மேற்கு இந்தியத் தீவுகளில் வணிக நோக்கில் நங்கூரமிட்டிருந்தத மெர்ச்சண்ட் ராயல் மற்றும் அதன் தங்கைக் கப்பலாக, டோவர் மெர்ச்சண்ட், ஆகிய இரு கப்பல்களும் லண்டனை நோக்கிப் புறப்படும் வழியில் ஸ்பெயினின் காடிஸ் துறைமுகத்தில் சில நாட்கள் தங்கியது. முந்தைய கடினமான பயணத்தால் மெர்ச்சென்ட் ராயலில் கசிவுகள் அதிகமாயிருந்து கப்பல் சற்று பலவீனமாக இருந்தது.


அச்சமயம் கேடிஸ் துறைமுகத்தில் நின்றுகொண்டி ருந்த எசுபாயினியக் கப்பல் ஒன்று திடீரென தீ விபத்துக்கு உள்ளானது. இக்கப்பல் புறப்படும்போது பெல்ஜியத்தின் பிளாண்டர்சு நகரத்தில் பணியில் உள்ள சுமார் 30,000 எசுபானிய வீரர்களுக்கான சம்பளத்தை அனுப்புவதாக இருந்து. கப்பல் தீக்கிரையாகிவிட்டதால் இந்த சம்பள நாணயங்களை அங்கு கொண்டு சேர்க்குமாறு எசுமானிய அதிராரிகள் மெர்சண்ட ராயல் கப்பல் தலைவரைக் கோரினார். சரக்குகளை ஏற்றிச் செல்வதற்கு எசுபானியாவிடமிருந்து கப்பல் உரிமையாளர்களுக்கு நல்ல வாடகை கிடைக்கும் என்பதால் கேப்டன் லிம்ப்ரே இதற்கு ஒப்புக்கொண்டார். இந்தச் செல்வங்களை ஏற்றிக்கொண்டு ஆண்ட்வெரின் வழியில் தன் நாட்டுக்கு செல்லத் துவங்கியது.

1641, செப்டம்பர் 23 அன்று கார்ன்வெல்லின் மேற்குப் பகுதியான லேண்ட்ஸ் எண்ட் கடல் பகுதி. மிக மோசமான வானிலையால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் மெர்ச்சென்ட் ராயல் கப்பலில் கடல் நீர் புக ஆரம்பித்தது. இறுதியில் மெர்ச்சென்ட் ராயல் தன் சரக்குகளுடன் கடலில் மூழ்கியது.

கப்பல் தலைவர் உட்பட 40 பேர் உயிர் பிழைத்திருக்க, மீதி 18 பேர் நீரில் மூழ்கி இறந்து போயிருந்தார்கள். மேலும் மெர்சண்ட் ராயல் கப்பலில் இருந்த செல்வங்களை சகோதரி கப்பலான டோவர் மெர்ச்சென்டுக்கு மாற்றியதாக தெரியவில்லை.

முழ்கிய கப்பலைத் தேடுதல்
ஒடிஸி மரைன் எக்ஸ்ப்ளோரஷன் என்ற நிறுவனமானது பல ஆண்டுகளாக மூழ்கிய மெர்சண்ட் ராயல் கப்பலைக் கண்டுபிடிக்க முயன்றுவருகிறது. ஆனால் இதில் இதுவரை வெற்றியடையவில்லை.

2007 ஆம் ஆண்டில் ஒடிஸி மரைன் எக்ஸ்ப்ளோரஷன் குழுவானது பிளாக் ஸ்வான் என்ற திட்டத்தை அறிவித்தது. இதில் ஒரு மூழ்கிய கப்பலைக் கண்டறிந்தனர். அதில் இருந்து சுமார் 500 மில்லியன் (£ 363 மில்லியன்) மதிப்புள்ள வெள்ளி மற்றும் தங்க நாணயங்களை கண்டுபிடித்து. அது மெர்ச்சென்ட் ராயல்தான் என்று கருதப்பட்டது. [5] ஆனால் இது மெர்சண்ட் ராயல் கப்பல்தான் என ஒடிஸி குழுவானது இன்னும் உறுதிப்படுத்தவில்லை, ஆனால் இப்போது அது அது கி.பி. 1804இல் மூழ்கிப் போன ஸ்பெயின் கப்பலான நயெஸ்டா செனோரா டி லாஸ் மெர்சிடிஸாக இருக்கலாம் என நம்புகிறது. [6]

2009 ஆம் ஆண்டு டிஸ்கவரி தொலைக்காட்சி அதன் நிகழ்ச்சியான, ட்ரெசர் குவெஸ்ட் என்ற நிகழ்ச்சிக்காக மூழ்கிய கப்பல் தேடுவதைத் தொடர்ந்தது, ஆனால் இந்த முயற்சியும் மீண்டும் தோல்வியடைந்தது.

Sunday 22 September 2019

P.B.SRINIVAS ,A LEGEND







பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பெயரில் வந்த கௌரவம்: பலரோடு எனக்கும் ஒன்று
August 9, 2013
- வெங்கட் சாமிநாதன் 


இவ்வளவு மாதங்களுக்குப் பிறகு போன வருடம் டிஸம்பர் மாதத்திலிருந்து நடந்த நிகழ்வுகளை அவற்றின் தொடர்ச்சியில் சொல்லாம் தான். ஆனால் இவற்றின் தொடக்கம் எங்கு எப்போதிலிருந்து எனபதெல்லாம் எனக்கு தெரியாத காரணத்தால் சொல்வது கடினம். ஒருவாறாக யூகிக்கலாம். அது தவறாகவும் இருக்கலாம்.

PB_Srinivasசரி இப்படித்தான் தொடங்குகிறது. அம்ருத வர்ஷினி என்ற பங்களூரிலிருந்து செயல்படும் ஒரு ஸ்தாபனத்திலிருந்து கே.எஸ்.எல் ஸ்வாமி என்பவர் கையெழுத்திட்டு 5.12.2012 தேதியிட்ட கடிதம் இரண்டு நாட்களுக்குப் பிறகு எனக்கு வந்தது. அந்த ஸ்தாபனம் 22.12.2012 அன்று டாக்டர் பி.பி. ஸ்ரீனிவாஸ் என்னும் பிரபல சினிமா பின்னணி பாடகருக்கு  82 வயது பூர்த்தி யாகிறது (பி. 22.9.1931) அன்று அவரது ஸ்ஹஸ்ர சந்திர தர்ஸனமும் பூர்த்தி ஆவதால் அந்த வைபவத்தைக் கொண்டாடவும்  அவரை கௌரவிக்கவும் ஒரு பெரும் விழா ஒன்று ஏற்பாடு செய்துள்ளோம், அந்த சந்தர்ப்பத்தில் பி.பி ஸ்ரீனிவாஸ் கன்னட சினிமாவுக்கு மட்டுமல்ல, தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி சினிமா படங்களிலும் ஆயிரக்கணக்கான பாட்டுக்கள் பாடி இரண்டு தலைமுறை ரசிகர்களை மகிழ்வித்துள்ளவர். இந்த அனைத்து மொழிகள் தவிர, ஆங்கிலம், உருது சமஸ்கிருதம் மொழிகளிலும் அவர் வல்லுனராக இருந்தவர். எனவே, 22.12.2012 அன்று அவரைக் கௌரவிக்கும் போது இந்த அனைத்து மொழிகளிலும் தம் பங்களிப்பைத் தந்துள்ள, பி.பி ஸ்ரீனிவாஸ் போல 80 வயது நிறைந்த, அறிஞர்களையும் கௌரவிக்கத் திட்டமிட்டுள்ள்தாகவும், அவ்வகையில் தமிழ் மொழிக்குத் தாங்கள் செய்துள்ள பாராட்டத்தக்க சேவையைக் கருத்தில் கொண்டு பி..பி.ஸ்ரீனிவாஸை கௌரவிக்கும் அதே மேடையில் தங்களையும் கௌரவிக்க விரும்புகிறோம். இது பி.பி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கும் மகிழ்ச்சி தரும். எனவே இந்த கௌரவத்தை ஏற்க தங்கள் ஒப்புதலை உடன் தெரிவிக்க வேண்டுகிறோம், என்று கண்டிருந்தது.

ஆச்சரியமாக இருந்தது. தனித்து விடப்பட்டதால் எஞ்சிய காலத்தைக் கழிக்க மகனுடன் வாழ வந்த இடத்தில் இப்படி ஒரு ஏற்பும் கௌரவமுமா? ”தோட்டத்துப் பச்சிலைக்கு உள்ளூரிலே என்னிக்குங்க மதிப்பு இருந்துச்சி?” என்று எளிய கிராமத்து வாசி கூட கேலி செய்வான். இங்கு அதுவும் தமிழ் நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம் என்று கூச்சலிடும் கர்நாடகத்தில், ”உங்களை கௌரவிக்கிறோம்” என்றா குரல் எழும்? எப்படி இது நேர்கிறது?. அதையெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம். முதலில் சரி என்று உடனே மறு நாளே பதில் போட்டுவிட்டு சாவகாசமாக யோசிக்கத் தொடங்கினேன். அபூர்வமாக வந்தது கைவிட்டுப் போய்விட்டால்? இடையில் தடுத்தாட்கொளபவர்கள் நிறைய எங்கும் இருப்பார்கள் என்பது ஒரு புறம் இருக்க, அம்ருத வர்ஷிணிக்காரர்களே கூட “ஸொல்ப க்ஷமா மாட்ரி, எத்தனையோ சாமிநாதன், அட்ரஸ் தப்பாப் போயிடுத்து. அது வேற சாமிநாதன்” என்று சொல்ல எத்தனை நேரம் ஆகும்? எதுவும் நடக்கலாம் தானே.

உடனே அவர்கள் கௌரவத்தை ஏற்றுக்கொள்ள சம்மதித்து கடிதம் எழுதினேன். அதே வேகத்தில், ஏற்றதற்கு நன்றி சொல்லிக் கடிதமும் வந்துவிட்டது. 27.12. அன்று  4.00 மணிக்கு என்னை பாலஸ் க்ரௌண்ட்ஸ்க்கு அழைத்துச் செல்ல கார் வரும் என்றும் சொன்னார்கள். சந்தோஷம். கமுக்கமாக இருக்கவேண்டும். யாரிடமும் சொல்லக் கூடாது என்று மனசில் நினைத்துக்கொண்டேன். அதெல்லாம் சரி. இன்னொரு குடைச்சல்.

இவர்களுக்கு என்னை எப்படித் தெரியும்? இப்படி ஒரு ஆள் இங்கே இருக்கான்யா? என்று கூட ஒருத்தனும் சொல்ல மாட்டானே நம்மூர் ஆள்? நம்மூர்லேயே கவனிக்க ஆள் இல்லை. இங்கே.? 80 வயது நிறைந்திருக்க வேண்டும் என்ற ஒரு தகுதி எனக்கு இருக்கிறது. கேட்டால் பள்ளிக்கூட சர்ட்டிபிகேட் இருக்கிறது. காட்டலாம். ஆனால் இது கலைஞர் கருணாநிதிக்கும் இருக்கிறது. பேராசிரியர் க. அன்பழகனுக்கும் இருக்கிறதே. சொல்லப் போனால் அவர்கள் 80 ப்ளஸ் over qualified. தமிழ் உலகம் அறிந்தவர்களாயிற்றே. சக்தி வாய்ந்தவர்களாயிற்றே. அவர்களை ஏன் தேடிப்போகவில்லை? ஒரு வேளை சென்னையிலிருந்து அழைத்து வர செலவு அதிகமாகும் என்றா? ஒரு பெரிய கூட்டமே வரும் என்றா? அல்லது பத்தோடு பதினொன்றாகச் சேர அவர்கள் மறுப்பார்கள்? தனி மரியாதை கேட்பார்கள்? பி.பிஸ்ரீனிவாஸ் பின்னுக்குப் போய் அவர்கள் மேல் தான் ஸ்பாட்லைட் விழும்? எல்லாம் யோசித்திருப்பார்கள். இது அவ்வளவும் எனக்கு சாதகமான points. இந்த வம்பெல்லாம் சாமிநாதனிடம் இல்லையே. சல்லிஸாக காரியம் முடியும். சரி. மற்றது?

Shashwathi Nanjanagudu Tirumalamba Award winners 2011


பங்களூருக்கு வந்த வருடம் எனக்கு தெரிந்த தமிழறிஞர் இங்கு பேராசிரியர் ப. கிருஷ்ணசாமி, க்ரைஸ்ட் காலேஜில் இருப்பவர். இப்போது அது க்ரைஸ்ட் யுனிவர்சிடி ஆக உயர்ந்துள்ளது. அவர் எனக்கு தொலைபேசியில் ஒரு அழைப்பு விடுத்தார். ஷாஷ்வதி அவார்ட்ஸ் கமிட்டி ஒவ்வொரு வருடமும் படைப்பு இலக்கியத்துக்கு பெரும் சேவை செய்துள்ள பெண் எழுத்தாளர்களை கௌரவித்து நஞ்சன்கூடு திருமலாம்பா அவார்ட் என்ற பெயரில் 40,000 ரூபாய் பரிசும் ஒரு காமதேனு விக்கிரஹமும் கொடுப்பார்களாம், ஒவ்வொரு வருடமும் ஒரு மொழி என முறை வைத்து. இந்த வருடம் தமிழுக்கு ஒரு பெண் எழுத்தாளரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு தனக்குத் தரப்பட்டுள்ள தாகவும், அதற்கு தான் தலைமை ஏற்று இன்னும் இரண்டு பேர், ஒரு பெண்ணும் உள்ளடங்கிய குழு அமைத்து தேர்வு செய்யச் சொல்லி யிருக்கிறார்கள். அந்தக் குழுவில் நீங்களும் சேர்ந்து எனக்கு தேர்வில் உதவ வேண்டும் என்று சொன்னார். சந்தோஷமாக இருந்தது. நிறைய பெண் எழுத்தாளர்களைப் படித்தோம். தேர்வும் செய்தோம். பரிசும் கௌரவமும் உமா மகேஸ்வரிக்குச் சென்றது. அந்த பரிசுக்கு என்னபெயர் என்பது மறந்துவிட்டது. பல வருஷங்களுக்கு முன்  தில்லியில் இருந்த போது கதா பரிசுக்கு உமா மகேஸ்வரியைத் தேர்ந்ததும் எனக்கு மகிழ்ச்சி தந்த ஒன்று. அது தனித்துச் செய்த தேர்வு. இது ஒரு குழுவோடு செய்த தேர்வு. அவ்வளவே.

அதற்குப் பிறகு என்னையும் ஒரு “அறிஞனாக, இலக்கியம் பற்றித் தெரிந்தவனாக சுட்டிக்காட்ட யாரும் இருக்கவில்லை. குடத்தில் இட்ட விளக்கு என்று நான் எனக்குச் சொல்லி மனசை ஆற்றிக்கொள்ளலாம். தமிழில் தான் எல்லாத்துக்கும் சமாதானங்கள் வழி வகை சொல்ல சொல்வளம் இருக்கிறதே.

சரி. ஆனால், இது எப்படி நேர்ந்தது? 27.12.2012 அன்று நான் என்னை அழைத்துச் செல்ல அவர்கள் சொன்னபடி கார் வரும் என்று காத்திருந்தேன். மாலை 5.00, 5.30 என்று நேரம் சென்றதே ஒழிய காரும் இல்லை. யாரிடமிருந்தும் ஏதும் செய்தியும் இல்லை.  அழைப்புக் கடிதத்தில் கண்டிருந்த ரவி சுப்பிரமணியம் என்பவருக்கு டெலிபோன் செய்து கேட்டேன். வேறு யாரோ பதில் சொன்னார்கள். “சாரி. அது கான்ஸல் ஆகிவிட்டது. ஸ்ரீனிவாஸ்க்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அதற்காக எல்லோரும் அலைந்து கொண்டிருக்கிறோம். உங்களுக்கு கடிதம் வரும்” என்று சொன்னார்கள்.

அதன் பிறகு சில வாரங்களோ மாதங்களோ கழித்து பங்களூர் பத்திரிகைகளில் ஸ்ரீனிவாஸை கௌரவிக்கும் விழாக்கள் ஒன்றிரண்டு நடந்ததாக செய்தி வந்தது. அதில் அம்ருதவர்ஷிணி இல்லை. பின்னர் சில நாட்கள் கழித்து பி.பிஸ்ரீனிவாஸ் மறைந்துவிட்ட (14.4.2013) செய்தியும் எல்லா பத்திரிகைகளிலும் வந்தது. என்னுடைய ஜாதகத்தின் பாதிப்பு ரொம்ப தூரம் தாக்கும் வலுவும் கொண்டது போலும் என்று நினைத்துக்கொண்டேன். பின்னர் எல்லாம் மறந்தும் விட்டது.

பி.பி ஸ்ரீனிவாஸுக்கு விழா என்று பேசி ஐந்து மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போது அவரே இல்லையென்றால், அவரை வைத்துச் செய்யப்படும் விழா, ஸ்ஹஸ்ர சந்திர தரிசனம் கொண்டாடப்படுவதற்கு என்ன அர்த்தம் இருக்கும்? இது பற்றி எந்த நினைப்பும் இல்லாது முற்றிலும் மறந்து விட்டபோது, மே மாதம் ஒரு நாள் வாசல் மணி அடிக்க வழக்கம் போல் கதவைத் திறந்தால்  முன்னால் நின்றவர் ”நான் தான் ரவி சுப்பிரமணியம், அம்ருதவர்ஷிணி யிலிருந்து, பி.பி ஸ்ரீனிவாஸ் விஷயமாக வந்தேன் என்று சொல்லிக்கொண்டு. இந்த இடத்தையும், உங்களையும் தெரிந்து அறிமுகம் செய்துகொள்ளத் தான் வந்தேன். கேஎஸ் எல் ஸ்வாமி, அவரும் ரவி தான். அவர் வந்து அழைப்பார்” என்று சொல்லிவிட்டுச் சென்றவர் மறு நாள் கே எஸ் எல் ஸ்வாமி வந்தார். அவர் தான் இந்த விழாவுக்கு முழு பொறுப்பாளர். சினிமா டைரக்டர் என்றும் பல படங்களை இயக்கியவர் என்றும் கன்னட சினிமா உலகில் தெரிந்தவர் என்றும் சொன்னார்கள். அவரிடம் நிஜமான ஒரு பெரிய மனித கம்பீரம் இருந்தது. நமஸ்காரம் என்றார். மன்னிக்க வேண்டினார். காலைத் தொட்டு வணங்கினார். எல்லாம் எனக்குப் பழக்கமில்லாததால், சங்கடமாக இருந்தது. சகஜமாக மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் மிகுந்த பண்பாளர். சொன்னார்:

”பி.பிஸ்ரீனிவாஸ் விழா நடத்த இருக்கிறோம். அவர் இருந்த போது பெரிய அளவில் நடத்த இருந்தோம். நம் துரதிர்ஷ்டம் அவர் மறைந்து விட்டார். இருந்தாலும் விழாவும் கௌரவிப்பும் இருக்கும். பெரிய அளவில் இல்லாவிட்டாலும். முடிந்த அளவில் நடத்துவோம். அது தான் தாமதமாகிவிட்டது. நடப்பது அதே பாலஸ் க்ரௌண்ட்ஸில் தான். 7.5.2013 அன்று. 4.00  மாலை காரோடு வருவேன். உங்களை அழைத்துச் செல்ல. நடந்து விட்டதற்கு மிகவும் வருந்துகிறோம். ஆனால் இதெல்லாம் இப்படி நடக்கும் என்று யார் கண்டார்கள்.?” என்று சொன்னார். அத்தோடு ஒரு அழைப்பிதழையும் கொடுத்தார். 4.5.2013 அன்றைய தேதி தான். கௌரவிக்க இருந்த மற்ற அனைவரிடமும் போய் நேரில் அழைக்க வேண்டும்.

இப்படியெல்லாம் கூட ஆச்சரியம் நிகழ்கிறது. எல்லாவற்றையும் விட அவர்களுக்கு பி.பி ஸ்ரீனிவாசிடம் இருந்த பிடிப்பும் ஈடுபாடும் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது. பி.பி ஸ்ரீனிவாஸ் என்ற பெயர் கேட்டதும் என மனதில் எழும் ஒரு பிம்பம் சென்னைக்கு நான் வந்த புதிதிலிருந்து பலமுறை நன்பர்களுடன் உடுப்பி ட்ரைவ்-இன்னுக்கு போனதுண்டு. நண்பர்களுடன் தான். அப்போதெல்லாம் ஒரு மூலையில் சுற்றியுள்ள மேஜைகள் சில காலியாக இருக்க, ஸ்ரீனிவாஸ் தனித்து ஒரு இடத்தில் உட்கார்ந்திருப்பார். அவருக்கு என எப்போதும் காட்சி தரும் உடை உண்டே. ஒரு மைசூர் மகாராஜா தலைப்பாகை மாதிரி ஒன்று. கோட். பக்கத்தில் ஒரு தோள்பை நிறைய புத்தகங்களோ நோட்டோ காகிதங்களோ, என்னவோ. அவர் பாட்டுக்கு ஏதோ எழுதிக்கொண்டிருப்பார். யாரும் அவருடன் பேசியது கிடையாது. அவர்  இருக்கும் மேஜைக்குப் பக்கத்து மேஜையில் கூட யாரும் சாப்பிட உட்கார்ந்து நான் பார்த்ததில்லை. ”ஒரு பெரிய மனிதர், வயதானவர் ஏதோ மும்முரமாக சிந்தித்துக்கொண்டும் இடையில் எழுதிக் கொண்டுமிருக்கிறார். அவரை யாரும் தொந்திரவு செய்யக் கூடாது, தனித்திருக்க விடுவோம்,” என்ற நாகரீகம் கூட இங்கு பார்க்கக் கிடைக்கிறதே என்று நான் வியந்து போவேன்.

அந்த மனிதருக்குத் தான் பத்து வருடங்கள் கழித்து ஒரு பெரும் பாராட்டு விழா கன்னட ரசிகர்களால் பங்களூரில் நடத்த ஏற்பாடு நடக்கிறது. அவர் மற்ற மொழிகளுக்கும் தன் பாடல்கள் மூலம் பங்களித்து இருக்கிறார், ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தை இரண்டு தலைமுறகளாகப் பெற்றிருக்கிறார். நமக்கு இருக்கும் தமிழ்ப் பற்றுப் போல் சொல் அளவில் வெற்றுப் பெருமை அளவில் இல்லாது வெகு தீவிரமாக வெறி என்று சொல்லக் கூடிய அளவில் பொது வாழ்வில் காட்டிக்கொள்ளும் கன்னட மக்களிடையே பெரும் ரசிகர் கூட்டத்தை பெற்றிருப்பது எனக்கு வியப்பாகவே இருந்துள்ளது. இவ்வளவுக்கும் அவர் ஆந்திராவில் காக்கிநாடாவில் பிறந்தவர். முதலில் அவர் பாடியது ஹிந்தி படத்தில் 1952-ல் கீதா தத்தோடு. தமிழ், தெலுங்கு என்று பல மொழிகளில் நிறைய பாடி பின்னணிப் பாடகராக பேர் பெற்றிருந்தாலும், 1956-ல் ராஜ்குமாருக்கு குரல் கொடுத்தவர்.

dr-pb-srinivas-early-years-in-playbackநிறைய சினிமா ஹீரோக்களுக்கு அவர் குரல் கொடுத்திருந்தாலும், தமிழில் ஜெமினி கணேசன், கன்னடத்தில் விஷ்ணுவர்தன், கல்யாண்குமார் போன்றோருக்கும் பாடியிருந்தாலும், கன்னட சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டாரான ராஜ்குமாரே, “நான் வெறும் சரீரம் தான். என் சாரீரம் பி.பி.ஸ்ரீனிவாஸ் தான்” என்று மனம் திறந்து சொல்லும் அளவுக்கு ஈடு இணையற்ற ஒரு பாராட்டைப் பெறும் புகழ் பெற்றிருந்தவர். லதா மங்கேஷ்கர்,பானுமதி, பி.சுசீலா, ஜானகி, எல் ஆர் ஈஸ்வரி என்று ஒரு பெரிய அணிவகுப்பு அவருடன் பாடிய பாடகிகள். எனக்கு அவர் பாடிய கண்ணதாசனின் பாடல் “காலங்களில் அவள் வசந்தம்” தான் என் காதுகளில் பி. பி ஸ்ரீனிவாசஸ் பெயர் சொன்னதும் ரீங்கரிக்கும். இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம், இவ்வளவு பெருமை, இவ்வளவு நீண்ட கால பின்பாட்டு வாழ்வு அவர் காலத்தில் வேறு யாருக்காவது கிட்டியுள்ளதா என்பது தெரியவில்லை. அவர் தான் உடுப்பி ட்ரைவ் இன்னில் இதோ தனித்து ஒரு ஜோல்னாப் பை நிறைய காகிதங்களைத் திணித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார், யார் பற்றியும் அவருக்கு சிந்தனை இல்லாது, சுற்றி இருக்கும் யாருக்கும் அவர் பற்றிய சிந்தனை இல்லாது  கட் அவுட்டுகளே தம் பெருமையைச் சொல்வதாக மதம் கொண்ட ஒரு கடைத் தர கலாசாரம் வளர்த்துள்ள தமிழ் நாட்டில்.

பிறந்தது காக்கிநாடாவில். பாட ஆரம்பித்தது ஹிந்தியில். பாடியது எல்லா மொழிகளிலும், கன்னடத்தில் அதிகம் பாடியது என்றாலும். வாழ்வதோ, சென்னையில், சைதாப்பேட்டையா, சி.ஐ.டி. காலனியிலா? மற்ற எல்லோரையும் விட கொண்டாடப்படுவது கன்னடப் பித்து கொண்ட கன்னடியர்களால். இது என்ன இப்படி? என்ற வியப்பைத் தவிர வேறு ஏதும் தோன்றவில்லை.

இம்முறை சொன்னது போல் கார் வந்தது. தோள் கொடுக்க என் பையன் கணேஷையும் அழைத்துக்கொண்டேன். பாலஸ் மைதானத்தில் உள்ளே நுழைந்தால் ஒரு பெரிய கொட்டகை திறந்த மைதானத்தில் எழுப்பப் பட்டிருந்தது. வழ்க்கமாக அங்கு இருக்கும் தாற்காலிக கடைகளை அகற்றி எழுப்பபட்ட கொட்டகை என்றார்கள். மேடையும் மிகப் பெரியது. மேடை முழுதும் வாத்தியங்கள் அடைத்திருந்தன. பி.பிஸ்ரீனிவாஸின் உருவம் பிரம்மாண்டமாக மேடைக்குப் பின் இருந்த திரையில்.  பி.பி. ஸ்ரீனிவாசின் மிக பெரிய அளவில் தீட்டப்பட்டிருந்தது.



இடையில் அவசரத்துக்கு வெளியே போய் வர நேரிட்டால் என்ன செய்வது என்று அரங்கத்தின் முதல் வரிசை இருக்கைகளின் வலது கோடியை தேர்ந்தெடுத்து அமர்ந்தோம் நானும் கணேஷும். முதல் வரிசையின் நடு இருக்கைகளில் கௌரவிக்கப்பட இருந்த பல பிரமுகர்கள் அமர்ந்திருந்தனர். நான் என் இருக்கையில் அமர்ந்ததும் ரவி என்னை அணுகி ”வாருங்கள், வெங்கட சுப்பையாவும் மற்றவர்களும் வந்திருக்கிறார்கள். அவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்” என்று அழைத்துச் சென்றார். வெங்கட சுப்பையா 100 வயது நிரம்பியவர் என்றார்கள். கன்னட நிகண்டு ஒன்று அவரது மகத்தான காரியம் என்று சொன்னார்கள்.


ரவி, விழா பொறுப்பாளர் என்னை கௌரவிக்கப்படுபவரில் ஒருவருக்கு அறிமுகப்படுத்துகிறார். (அனேகமாக இவர் தான் வெங்கடசுப்பையாவோ என்னவோ)


மு.ச. க்ரிஷ்ணமூர்த்தி, ஹிந்தி நாவலாசிரியர், டாக்டர் கே.டி. பாண்டுரங்கி என்னும் ஒரு சமஸ்க்ரித பண்டிதர், வி.கே. ரங்காராவ் என்னும் சங்கீத விற்பன்னர் ஹஸ்ரத் நயீம் இக்பால் என்னும் ஹிந்தி, உருது எழுத்தாளர், பேராசிரியர் சேஷகிரி ராவ் என்னும் ஆங்கில நாவலாசிரியர், ஹோ. ஸ்ரீனிவாஸய்யா என்னும் காந்தியானாவில் அறிஞர். கானகலா பூஷண் டாக்டர் ஆர். கே. பத்மனாபா என்னும் இன்னொரு சங்கீத விற்பன்னர், இப்படி ஒரு பன்னிரண்டு பேர் என்னையும் சேர்த்து.

பின்னர் சற்று நேரம் கழித்து (கலைஞர் சொற்களில், கன்னடத்து பைங்கிளி) சரோஜா தேவியும், உடன் வந்தவர் ஜெயந்தி என்று சொன்னார்கள், அவரோடு வந்து காலியாக இருந்த என் பக்கத்து இருக்கைகளில் உட்கார்ந்து கொண்டார்கள். அவர்கள் வந்ததும் ரசிகர்,ரசிகைகள் கூட்டம் அவரைச் சுற்றியும் வரிசையில் நின்று அவரை தரிசித்து குசலம் விசாரிக்கத் தொடங்கினர். பிறகு அவர்களையெல்லாம் விரட்ட வேண்டி வந்தது. தரிசனத்துக்கு எவ்வளவு நேரம் வேண்டும்?.

அரங்கம். முதல் வரிசையில் இடது கோடியிலிருந்து, கணேஷ், நான், ஜெயந்தி, சரோஜா தேவி 


கிட்டத் தட்ட ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, ஒரு பெரிய பின்னணி பாடகர் நக்ஷத்திரக் கூட்டம் வந்தது. அவரகளை ரவி வரவேற்று அழைத்து வந்தார்.. ஜேஸுதாஸ், எஸ் பி பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம், இன்னும் எத்தனையோ பேர் எனக்கு தெரியாத பேர்கள். எல்லோரும் மேடையின் கீழே பி.பி. ஸ்ரீனிவாஸின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நானும் கணேஷும் அங்கு இருந்தது இரண்டரை அல்லது மூன்று மணி நேரம் இருக்கும். மேடை முழுதும் வாத்தியங்கள் பெரிய ஆர்க்கெஸ்ட்ரா ஸ்ரீனிவாஸ் பாடிய பாட்டுக்கள் தொடர்ந்து பாடப்பட்டன. பி.பி ஸ்ரீனிவாசனின் பதிவு செய்யப்பட்ட கன்னட பேச்சும் பாட்டும் இடையில் ஒலித்தன. வி எஸ் எல் ஸ்வாமி என்றும் ரவி என்றும் அறியப்பட்டவர் தான் நிகழ்ச்சிகளை நடத்தினார். வெகுஅழகாக கன்னடத்தில் பேசினார்.

பி.பிஸ்ரீனிவாஸின் குமாரர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்.


மிக உற்சாகத்துடனும் பெருமிதத்துடனும் அவர் ஸ்ரீனிவாஸ் தொடங்கி அவருடைய அங்கு பாடப்பட்ட ஒவ்வொரு பாட்டைப் பற்றியும், அங்கு வந்திருந்த ஒவ்வொருவர் பற்றியும் பேசியது சந்தோஷமாக இருந்தது. அவர் உணர்ந்த பெருமிதம் தான் அவர் வார்த்தைகளில் இருந்ததே தவிர வெற்று அலங்காரங்கள் அல்ல. ஜேஸு தாஸ், வாணி ஜெயராம், பாலசுப்பிரமணியம் இன்னும்  மற்றவர்கள் இடைவிட்டு இடைவிட்டு அடிக்கடி வந்து பாடினார்கள். ஒரு சில பாட்டுககளுக்குப் பிறகு, கௌரவிக்கப்பட இருந்தவர்கள் மேடைக்கு அழைத்து வரப்பட்டு நக்ஷத்திர பாடகர்கள், சரோஜா தேவி, ஜெயந்தி, ரவி உட்பட  எல்லோரும் புடை சூழ ஒவ்வொருவரும் கௌரவிக்கப்படுபவரை கால் தொட்டு வணங்கி, சால்வையோ, மாலையோ, பணமுடிப்போ, ஷீல்டோ கொடுத்தனர்.


எஸ்.பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம், சரோஜா தேவி, ஜேசுதாஸ், நீல நிற அங்கீயில் இருப்பவர் ரவி.

என் முறை ஆறாவதோ ஏழாவதோவாக இருந்ததால்,. அது வரை நான் கண்டதிலிருந்து ஒவ்வொருவருக்கும் அந்த மரியாதை நடந்ததைப் ;பார்த்தேன். கௌரவிக்கப்பட இருந்த அத்தனை பேருக்கும் இந்த மரியாதை நடந்திருக்கும்.. கௌரவிக்கப்பட்டவர் யார் யார் என்று ஒரு சிலருக்கே தெரிந்திருக்கும். ஆனால் பரிசுப் பொருட்களைக் கால்தொட்டு வணங்கிகொடுத்தவர்கள் பெரும் புகழ் பெற்றவர்கள். உலகத்தையே தம் ரசிகர்களாகக் கொண்டவர்கள். பி.பி.   ஸ்ரீனிவாஸைக் கௌரவிக்க வந்தவர்கள். ஜேசுதாஸ், பாலசுப்பிரமணியம் எல்லாம் ஒரு நிகழ்ச்சிக்கு வர ஒரு லக்ஷம் பெறுபவர்கள். இந்த நிகழ்ச்சிக்கு அவர்கள் ஒரு ரூபாய் கூட கேட்கவில்லை. பெறவில்லை என்று.



நாங்கள் அங்கு இருந்தது அதிகம் மூன்று மணிநேரம் தான். என் கௌரவிப்பு நடந்ததும் காருக்கு ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் போகலாம். கடைசி வரை இருக்க வேண்டிய அவசியமில்லை என்று ரவி எனக்கு அனுமதி தந்தார். இரவு வெகு நேரம் பன்னிரண்டு மணி வரை நிகழ்ச்சிகள் நீளும் பின்னர் எல்லோரையும் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று என்னை அழைத்துச் சென்ற ட்ரைவர் தந்த தகவல்.

பி.பி ஸ்ரீனிவாஸைக் கௌரவிக்க வந்த, எந்தப் பொருளும் பெற்றுக்கொள்ளாத அவ்வளவு பின்னணிப் பாடகர் பாடகிகளும் நடிகைகளும் அந்த ஐந்து மணி  நேரமும் மேடையில் பாடவேண்டும், கௌரவிக்க வேண்டும். அவர்களுக்குத் தான் காக்கிநாடாவில் பிறந்து, சினிமாவில் பலருக்கும் பின்னணி பாடி, சென்னையில் வாழும் பி.பி.ஸ்ரீனிவாசிடம் எவ்வளவு விஸ்வாசமும், பாசமும்? அதைக் காட்ட ஒரு சந்தர்ப்பம் வரும்போது என்னவெல்லாம் செய்கிறார்கள்! கன்னட ரசிகர்களும் ஸ்ரீனிவாசை எப்படியெல்லாம் நினைவு கொண்டு கௌரவிக்கிறார்கள் எனறு எனக்கு ஒரு கோடி காட்டியது அன்றைய நிகழ்ச்சி.

நஸீம் இக்பால் கௌரவிக்கப் படுகிறார்


உடுப்பி ட்ரைவ் இன்னில் தன்னை மறந்து, தன்னைச் சுற்றிய அந்த உடுப்பி சூழலையும் மறந்து அமைதியோடு, அடக்கத்தோடும், தன்னில் ஆழ்ந்திருந்த ஸ்ரீனிவாசையும் நினைத்துக்கொண்டேன். மனதை நெகிழ்விக்கும் கணங்கள் அவை.

(ஒன்று சொல்ல வேண்டும். பரிசுப் பணமும் ஒரு பட்டு சுருக்குப் பையில் இருந்தது. அதில் ஒன்பது ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள். பின் ஆயிரம் ரூபாய்க்கு பத்து ரூபாய் நாணயங்கள். 15 பேருக்கோ என்னவோ ஒவ்வொருவருக்கும் இப்படிக் கொடுக்க பத்து ரூபாய் நாணயங்களை எங்குதான் எத்தனை பாங்குகளுக்குச் சென்று சேகரித்தார்களோ. அந்த மைசூர் ராஜா தலைப்பாகையைத் தான் என்ன செய்வதென்று தெரியவில்லை).

விழா நடந்து சில நாட்களுக்குப் பிற்கு ரவிக்கு நான் டெலிபோன் செய்து கேட்டேன்.”எனக்கு அந்த விழாவில் எடுத்த புகைப்படங்கள் சிலவற்றைத் தர ஏற்பாடு செய்ய முடியுமா?” என்று. ரொம்ப சந்தோஷத்துடன் ”எல்லாம் முடிந்தவுடன், நானே வருகிறேன். உங்களுக்குத் தேவையானதைத் தருகிறேன்” என்றார். இப்படி ஒரு சில தடவைகள் கேட்டு அதே பதில் தான் வந்தது.  ஓரிரு தடவைகள், அவரே என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “இன்று ZEE kannada வில். அந்த விழா நிகழ்ச்சிகள் ஒளி பரப்புவார்கள். பாருங்கள்” என்றார். வீட்டில் எல்லோரும் பார்த்தார்கள். அன்று பஙகளூர் வந்திருந்த சம்பந்திகளும் தான். அன்று என் பெருமையை சாட்சி பூதமாக ஸ்தாபிக்க முடிந்தது. ஆனால், முழுதுமாக எல்லாமே பாட்டுக்கள் தான். கௌரவிப்பு ஒவ்வொன்றும் இரண்டு நிமிடங்களுக்கு சுருக்கப்பட்டிருந்தது.. அதுவே 4 மணி நேரமாக நீண்டது. பின்னும் ஒரு நாள் வஸந்த் டிவியில் பாருங்கள். என்றார். அதுவும் பி.பி. ஸ்ரீனிவாஸ் நினைவு விழா தான் என்றாலும், பெங்களூர்  நிகழ்ச்சி அல்ல. புதிது. வேறானது. அரங்கில் முதல் வரிசை இருக்கையில் ரவி இருந்தார். வஸந்த் டிவி வஸந்தும் இருந்தார்.  கடைசியில் ஒரு நாள் ரவி சுப்பிரமணியம் தன்னுடன் ஒரு உதவியாளரை அழைத்துக்கொண்டு வந்து தன் லேப் டாப்பில் பதிவாகியிருந்த பங்களூர் பாலஸ் மைதான விழாவின் 500க்கும் மேற்பட்ட படங்களைக் காட்டிக் எது வேண்டுமோ சொல்லுங்கள். இப்பொதே ஒரு CD யில் பதிவு செய்து தருகிறேன் என்றார். 35 படங்களோ என்னவோ பதிவு செய்து கொடுத்தார்.

(அவற்றில் சில படங்கள் தான் மேலே உள்ளவை. விழா நிகழ்ச்சியின் படங்கள் சில இத்துடன், என் வார்த்தைகளை சாட்சியப்படுத்தும்).

வெங்கட் சாமிநாதன் ஐம்பது வருடங்களாகத் தமிழில் எழுதிவரும் கலை, இலக்கிய விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன். மேலும் விவரங்கள் இங்கே.




CRUDE PETROLEUM - AMERICA HAS TAKEN RESERVES



CRUDE PETROLEUM - 
AMERICA HAS TAKEN RESERVES


செளதி எண்ணெய் தாக்குதல்கள்: அமெரிக்கா ஏன் பாதாளத்தில் கச்சா எண்ணெய் சேமிக்கிறது?
19 செப்டம்பர் 2019

அமெரிக்காவின் லூசியானா மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் பாதாள சுரங்கங்களில் பெருமளவு கச்சா எண்ணெய் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
செளதி அரேபியாவில் முக்கிய கச்சா எண்ணெய் வளாகத்தின் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்காவில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பெருமளவு இருப்பில் இருந்து கச்சா எண்ணெயை வெளியில் எடுப்பது பற்றி அமெரிக்க அதிகாரிகள் பேசி வருகின்றனர்.கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோது, ''சந்தையில் போதிய அளவுக்கு எண்ணெய் கிடைக்கச் செய்வதற்கு'' இந்த கச்சா எண்ணெயைப் பயன்படுத்தலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில் கூறியிருந்தார்.

டெக்சாஸ் மற்றும் லூசியானாவில் பாதாள குகைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள 640 மில்லியனுக்கும் அதிகமான பேரல்கள் அளவிலான கச்சா எண்ணெய் பற்றித்தான் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முக்கியமான கையிருப்பை வைத்துக்கொள்ளும் வழக்கம் 1970களில் இருந்தே அமல் செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச எரிசக்தி முகமையின் உறுப்பு நாடுகள் அனைத்துமே 90 நாட்களின் தேவைக்கு இணையான அளவுக்கு கையிருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அமெரிக்காவின் கையிருப்புதான் உலகில் அதிகபட்ச அளவாக உள்ளது.

அது ஏன் உருவாக்கப்பட்டது?
1970களின் தொடக்கத்தில் மத்திய கிழக்கு நாடுகள் கச்சா எண்ணெயை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய மறுத்தபோது உலகம் முழுக்க கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததை அடுத்து, கையிருப்பு வைத்துக் கொள்வது பற்றிய சிந்தனை அமெரிக்க அரசியல்வாதிகள் மத்தியில் உருவானது.1973ல் அரபு-இஸ்ரேல் போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்ததால், இராக், குவைத், கத்தார் மற்றும் சௌதி அரேபியா ஆகிய நாடுகள் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய மறுத்தன.

சௌதி எண்ணெய் ஆலை தாக்குதல் சாமானிய இந்தியர்களை எப்படி பாதிக்கும்?
அந்த ஆண்டு அக்டோபர் மாதம் மூன்று வாரங்கள் மட்டுமே அந்தப் போர் நீடித்தது. ஆனால் கச்சா எண்ணெய் வழங்குவதற்கான தடை மார்ச் 1974 வரையில் நீடித்தது. அதனால் உலகெங்கும் கச்சா எண்ணெய் விலை 3 டாலர் என்ற அளவில் இருந்து 12 டாலர் என நான்கு மடங்கு அதிகரித்தது.பாதிக்கப்பட்ட நாடுகளில் பெட்ரோல் நிலையங்களுக்கு எதிரே காத்திருக்கும் கார்களின் புகைப்படங்கள், நெருக்கடியை வெளிக்காட்டுவதாக இருந்தன.அமெரிக்க நாடாளுமன்றம் 1975ல் எரிசக்திக் கொள்கை மற்றும் பாதுகாப்புச் சட்டத்தை உருவாக்கியது. இன்னொரு முறை பெரிய அளவில் கச்சா எண்ணெய் கிடைப்பது பாதிக்கப்பட்டால், நிலைமையைக் கையாள்வதற்காக முக்கிய பெட்ரோலிய கையிருப்பு வசதியை உருவாக்கியது.


கையிருப்பு என்பது என்ன?

இப்போது நான்கு இடங்களில் கச்சா எண்ணெய் சேமிக்கப்படுகிறது. டெக்சாஸில் ப்ரீபோர்ட் மற்றும் வின்னி, லூசியானாவில் சார்லஸ் ஏரிக்கு வெளியிலும், பேட்டன் ரூஜ்ஜிலும் சேமிக்கப்படுகிறது.ஒவ்வொரு இடத்திலும் செயற்கையாக உருவாக்கப்பட்ட, உள்புறமாக ரசாயன உப்பு பூசப்பட்ட பாதாள குகைகள் ஒரு கிலோ மீட்டர் வரை (3,300 அடி) உள்ளன. அவற்றில் கச்சா எண்ணெய் சேமிக்கப்பட்டுள்ளது. பூமிக்கு மேலே டேங்க்குகளில் வைப்பதைவிட இதற்கான செலவு குறைவு, பாதுகாப்பானதும் கூட. உப்பின் ரசாயனக் கலப்புத் தன்மையும், புவியியல் அழுத்தமும் கச்சா எண்ணெய் கசியாமல் தடுக்கின்றன.ப்ரீபோர்ட் அருகே பிரியன் மவுண்ட் என்ற இடத்தில் உள்ள மிகப் பெரிய சேமிப்பு வளாகத்தில் 254 மில்லியன் பேரல்கள் அளவிற்கு கச்சா எண்ணெய் சேமிக்கும் வசதி உள்ளது.


செப்டம்பர் 13ஆம் தேதி 644.8 மில்லியன் பேரல்கள் அளவுக்கு கச்சா எண்ணெய் இந்த பாதாள குகைகளில் கையிருப்பு இருந்தது என்று இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத் துறையின் தகவலின்படி, 2018ல் அமெரிக்கர்கள் சராசரியாக ஒரு நாளுக்கு 20.5 மில்லியன் பேரல்கள் அளவுக்குக் கச்சா எண்ணெய் பயன்படுத்தியுள்ளனர். அதாவது கையிருப்பை வைத்து நாட்டில் 31 நாட்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.

அது எப்படி செயல்படுகிறது?

அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஜெரால்டு போர்டு கையெழுத்திட்ட 1975ஆம் ஆண்டு சட்டத்தின்படி, ''எரிபொருள் விநியோகத்தில் கடும் தட்டுப்பாடு'' ஏற்பட்டால் கையிருப்பு எண்ணெயைப் பயன்படுத்த அதிபர் மட்டுமே அனுமதி அளிக்க முடியும்.நடைமுறை சிக்கல்கள் என்பது குகைகளில் இருந்து ஒவ்வொரு நாளும் குறைந்த அளவுக்கு மட்டுமே கச்சா எண்ணெயை வெளியில் எடுக்க முடியும். அதாவது அதிபரின் அனுமதி இருந்தாலும், அது சந்தைக்கு வந்து சேர இரண்டு வாரங்கள் ஆகும்.சொல்லப்போனால், இந்தக் கச்சா எண்ணெய் அனைத்தும் சுத்திகரிப்பு செய்யப்படாதவை. கார்கள், கப்பல்கள், விமானங்களில் பயன்படுத்துவதற்கு முன்னதாக இதைச் சுத்திகரிப்பு செய்தாக வேண்டும்.செளதி அரேபியாவில் தாக்குதல்களைத் தொடர்ந்து கையிருப்பில் இருந்து எடுப்பது பற்றிய பேச்சுக்கான தேவை இன்னும் வரவில்லை என்று திங்கள்கிழமை சி.என்.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அமெரிக்க எரிபொருள் துறை செயலாளர் ரிக் பெர்ரி கூறியுள்ளார்.

இது அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளதா?

கடைசியாக 2011ல் இது பயன்படுத்தப்பட்டது. அரபு நாடுகளில் அரசுகளுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமானபோது, எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட தடங்கலைக் குறைக்க இந்த இடங்களில் இருந்து மொத்தம் 60 மில்லியன் பேரல்கள் அளவிற்கு கச்சா எண்ணெயை எடுக்க வேண்டிய கட்டாயம் சர்வதேச எரிபொருள் ஏஜென்சி உறுப்பு நாடுகளுக்கு ஏற்பட்டது.மெக்சிகோ வளைகுடா அருகே உப்பு பாதாள குகைகளில் அமெரிக்கா பல மில்லியன் பேரல்கள் அளவிற்கு கச்சா எண்ணெய் சேமித்து வைத்துள்ளது.இருந்தபோதிலும், சில சமயங்களில் பெருமளவு அமெரிக்கா விற்பனையும் செய்துள்ளது. 1991ல் வளைகுடா போரின்போது இந்தக் கையிருப்பைப் பயன்படுத்த அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் ஒப்புதல் அளித்தார். கத்ரீனா புயல் தாக்கியபோது 11 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெயை எடுக்க அவருடைய மகன் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் அனுமதி அளித்தார்.

அமெரிக்க எரிசக்தி உற்பத்தி வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இவ்வளவு அதிகமாக கையிருப்பு வைப்பது பற்றி கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இதை முற்றிலும் கைவிட்டு விடலாம் என்று வாஷிங்டனில் சிலர் பரிந்துரை செய்கின்றனர்.பெட்ரோல் நிலையங்களில் அமெரிக்க மக்களுக்கு விலையைக் குறைக்க இது உதவும் என்று 2014ல் அரசு பொறுப்புடைமை அலுவலகம் கூறியுள்ளது. 2017ல் அரசின் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, கையிருப்பில் பாதியை விற்பது பற்றி டிரம்ப் அரசு யோசனையை முன்வைத்தது.1997ல் பற்றாக்குறையைக் குறைக்கும் நடவடிக்கையாக 28 மில்லியன் பேரல்களை அதிபர் பில் கிளின்டன் அரசு விற்பனை செய்தது.

SURGERY IN VAGINA - IS IT NEED ? IS IT SAFE?





 SURGERY IN VAGINA - IS IT NEED ? IS IT SAFE?


பெண் பிறப்புறுப்பை அழகுப்படுத்தும் அறுவை சிகிச்சை: 
அவசியமா? பாதுகாப்பானதா?

பெண்கள் தங்களுடைய பிறப்புறுப்பு சாதாரணமாக தோன்றுகிறதா என்பதை சோதித்து பார்ப்பதற்கு உதவும் வகையில், புதியதொரு ஆன்லைன் வழிகாட்டி பதின்ம வயது பெண்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.பாலியல் சுகாதார சேரிட்டி புரூக் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள தரவுகளும், காட்சியாக வழங்கப்பட்டுள்ள உதாரணங்களும், பெண்கள் வயதுக்கு வருகின்றபோது, அவர்களின் பிறப்புறுப்புகள் எவ்வாறு மாறுகின்றன என்பது பற்றிய அறிவுறுத்தல்களை வழங்குகின்றன.

பெண்களுக்கு தங்களின் உடல் பற்றிய நம்பிக்கையை வழங்குவதோடு, தங்களின் பிறப்புறுப்பை தங்கள் விருப்பப்படி தோன்ற செய்வதற்கு 'அழகு வடிவமைப்பு அறுவை சிகிச்சை' மேற்கொள்ள பெண்கள் விரும்புவதையும் இது தணிக்கும் என்று இந்த வசதியை உருவாக்கியுள்ள நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இத்தகைய அறுவை சிகிச்சைகள் 18 வயதுக்கு கீழானோர் செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.வடிவத்தை மாற்றும் அல்லது பெண்ணின் பிறப்புறுப்பின் இதழ்களை அல்லது உதடுகளை சிறியதாக்குவதற்கு, தனிப்பட்ட மருத்துவர்களால் செய்யப்படுகின்ற பெரும்பான்மையான பெண் பிறப்புறுப்பு அழகு அறுவை சிகிச்சைகள் ஆயிரக்கணக்கான பவுண்ட்கள் செலவை உருவாக்குபவை.

பெண்ணின் பிறப்புறுப்பின் உதடுகளில் அசாதாரண நிலைமை அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்துதல், அல்லது அவரது உடல் நலத்தை கெடுப்பதாக இருந்தால், தேசிய சுகாதார சேவையால் அவ்வப்போது ஓர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.அழகுபடுத்துவதற்காக மட்டுமே பெண்களை இந்த அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைப்பதற்காக மருத்துவ தொழில்துறை இயங்கவில்லை.பிரிட்டன் தேசிய சுகாதர துறையின் புள்ளிவிபரங்களின்படி, 2015-16 ஆண்டு 18 வயதுக்கு கீழுள்ள 200க்கு அதிகமான பெண்கள் தங்களின் பிறப்புறுப்பில் 'அழகு அறுவை சிகிச்சை' செய்துள்ளனர். அதில் 150 பேர் 15 வயதுக்கு கீழானோர் ஆவர்.

பல்கலைக்கழக கல்லூரி மருத்துவமனையின் சிகிச்சை மைய நிபுணரும், இந்த திட்டத்தின் துணை வழிநடத்துனருமான லுயிஸே வில்லியம்ஸ் இது பற்றி குறிப்பிடுகையில், இளம் பெண்கள் தங்களின் பிறப்புறுப்பின் தோற்றத்தை பற்றி புரிந்து கொள்ள இது வழிவகுக்கும்.வயதுக்குவருகின்றபோது, பெண்களின் பிறப்புறுப்பு வளர்ச்சி, குறிப்பாக அவர்கள் அப்போதைய வளர்ச்சியை எவ்வாறு பார்ப்பார்கள் அல்லது உணருவார்கள் என்பது பற்றி புரிதல் ஏற்படும் என்று கூறியுள்ளார்.


பெண்ணின் பிறப்புறுப்பின் வடிவமும், அளவுகளும் வேறுபட்டதாக இருக்கின்றன என்றும், அவர்களுக்கு அறிவுரையும், ஆதரவும் வேண்டுமென்றால் எங்கு செல்ல வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளவும் இது உறுதியளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று லுயிஸே வில்லியம்ஸ் தெரிவித்திருக்கிறார்.
ராயல் கல்லூரியின் மகப்பேறு மற்றும் குழந்தைகள் சிறப்பு மருத்துவரும், குழந்தை மற்றும் குமரப்பருவ மகப்பேறுக்கான பிரிட்டன் சொசைட்டியை சேர்ந்த மருத்துவ நிபுணருமான டாக்டர் நௌமி குரோஞ்ச் இது பற்றி கருத்து தெரிவிக்கையில், பெண்ணின் பிறப்புறுப்பை சிறப்பாக தோன்ற செய்ய அழகு அறுவை சிகிச்சை செய்வதற்கு எந்தவித அறிவியல் சான்றுகளும் இல்லை.

அதிலும் குறிப்பாக, இன்னும், உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் வளரும் நிலையிலுள்ள பதின்ம வயதினரால் இந்த மாதிரியான அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு அறிவியல் சான்றுகளே இல்லை என்று தெரிவித்திருக்கிறார்."இந்த ஆதரங்கள் பெண்களுக்கும், இளம் பெண்களுக்கும் தகவல்களை வழங்கும் என்றும், அவர்களின் பிறப்புறுப்பின் தோற்றம் தளித்தன்மையானது. அவர்களின் வாழ்க்கை முழுவதும் அதன் தோற்றம் மாற்றம் அடையக்கூடியது, அவ்வாறு அமைவதுதான் சாதரணமானதும், ஆரோக்கியமானதாகவும் ஆகும் என்பதை புரிய வைக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம்" என்று நௌமி குரோஞ்ச் கூறியுள்ளார்.

பெண்ணின் பிறப்புறுப்பில் அழகு வடிவமைப்பு - என்ன தவறு நேரிடலாம்?
பெண்ணின் பிறப்புறுப்பை அழகு செய்வதற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டால் கீழுவரும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடலாம்.

ரத்தப்போக்கு
நோய்தொற்று
திசுக்களின் வடுக்கள்
பிறப்புறுப்புக்களின் உணர்திறன் குறைதல்

அறுவை சிகிச்சை ஏதேனும் மேற்கொண்டால் நேரக்கூடிய ஆபத்துகள் இவை:-

நரம்புகளில் ரத்த கட்டுதல்
மயக்க மருந்துக்கு மேசமான எதிர்வினை