OPERATION VIJAY - GOA SURRENDER
OPERATION VIJAY - GOA SURRENDER ஆப்ரேசன் விஜய்’ பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை! By Aashika| Updated: Friday, July 13, 2018, 18:02 [IST] முக்கியமான ஓர் நிகழ்வை கூட்டாக செய்து முடிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு பெயரை வைத்து தொடர்ந்து அதை குறித்தான தகவல்களை பகிர்ந்து கொள்ளவும், திட்டமிட்ட செயல் எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்று அணுகும் வகையில் அது உதவிடும். இந்த விஷயம் ராணுவத்தினர் மத்தியில் ஏகப்பிரபலம். இந்திய வரலாற்றில் இரண்டு முறை ஆப்ரேசன் விஜய் என்ற பெயரில் ஆப்ரேசன் நடந்திருக்கிறது. முதலாவதாக 1961 ஆம் ஆண்டு வாஸ்கோட காமா 1498 ஆம் ஆண்டு இந்தியா வந்தடைந்ததிலிருந்து சுமார் 450 ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்த போர்ச்சுகீசியர்களை வெளியேற்றும் வகையில் நடத்தப்பட்ட போர். இன்னொன்று 1999 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு நடைப்பெற்ற கார்கில் போர். விஜய் என்றால் வெற்றி என்று பொருள் தரும் கார்கில் போரில் வெற்றியடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆப்ரேசன் விஜய் என்று பெயரிடப்பட்டது. அதோடு கார்கில் விஜய் திவாஸ் என்று வருடந்தோறும் அனுஷ்டிக்கப்படுகிறது. கார்கில...