ஒலிம்பிக் பதக்கங்களை விற்றவர்கள்!
ஒலிம்பிக் பதக்கங்களை விற்றவர்கள்! உலகின் மதிப்புமிக்க விளையாட்டுப் போட்டி ஒலிம்பிக். இந்தப் போட்டிகளில் கலந்துகொள்வதும் பதக்கங்களை அள்ளுவதும் தனிப்பட்ட நபர்களுக்கு மட்டுமின்றி, நாட்டுக்கே பெருமை தேடித் தருவதாக இருக்கிறது. ஒலிம்பிக் போட்டிகளுக்குச் செல்லும் ஒவ்வொரு வீரரும் பதக்கக் கனவுகளோடுதான் செல்கிறார்கள். போட்டியிலும் பங்கேற்கிறார்கள்; போராடுகிறார்கள். இறுதியில் சிலர் பதக்கங்களை ஜெயிக்கிறார்கள். இப்படி ஆண்டுக்கணக்காக உழைத்து, பயிற்சி செய்து, போராடி வென்ற தங்கப் பதக்கங்களைச் சிலர் விற்பனை செய்திருக்கிறார்கள் தெரியுமா? ஏன், எதற்காகப் பதக்கங்களை விற்றார்கள் என்று பார்ப்போமா! போலந்து நாட்டைச் சேர்ந்த ஒடிலியா, நீச்சல் வீராங்கனை. 1994-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளத் தகுதி பெற்றார். “நான் எத்தனைத் தங்கப் பதக்கங்கள் வென்றாலும் அவற்றை அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக வழங்கிவிடுவேன்” என்று அறிவித்தார். பத்தாண்டுகளுக்குப் பிறகு, 2004-ம் ஆண்டு தங்கப் பதக்கம் வென்றார். போலந்து நாட்டின் முதல் தங்கம் வென்ற நீச்சல் வீரர் இவர். ஆனால், தங்கப் பதக்கத்தை ஏலத்தில் விற்றார்...