VIRUDHUNAGAR KVS MIDDLE SCHOOL
விருதுநகர் KVS நடுநிலைப் பள்ளி விருதுநகர் KVS நடுநிலைப் பள்ளி பொருட்காட்சியின் கலை அரங்கமே ! 1946ல் கீற்றுக் கொட்டகை ஆகப் பிறந்து 2003 ஆம் ஆண்டு வரை தீவிர கலைப் பணி ஆற்றினாய். 1960 முதல் மு. அ. பழனிச்சாமி நாடார் கலை அரங்கம் எனப் பெயர் சூட்டப்பட்டு புது வடிவம் பெற்றாய். விருதுநகரில் கலை நிகழ்ச்சிகளுக்குத் தனிக்கட்டணம் இல்லாததால் உனது mass reach அதிகம். எனவே தமிழ்த் திரைஉலகினர் உன்னைக் கொண்டாடினர். பங்குனி & சித்திரை கோடையிலே M K தியாகராஜ பாகவதர், K B சுந்தராம்பாள், M S விஸ்வநாதன், K V மஹாதேவன், T M S, P சுசிலா, ஜேசுதாஸ், SPB போன்றோரின் இன்னிசை மழை... NSK, தங்கவேலு, கிரேசி மோகன் முதலானோரின் கிச்சு கிச்சு மழை... MGR ன் அட்வகேட் அமரன், இன்பக்கனவு நாடகங்களில் முதன் முறையாக அவரைக் கண்டு மக்கள் " அங்கமா இல்லை தங்கமா " என்று திளைத்திட்ட ஆனந்த மழை... மேடையில் MGR குண்டுமணியை குண்டுக்கட்டாக தூக்கிச் சுழற்றியதில் எப்படிப்பட்ட ஆர்ப்பாட்ட மழை... 1959 ல் உன் புதிய வடிவிற்கு அடிப்படைக் கல் நாட்டிய சிவாஜி கணேசன், தேன்கூடு நாடகத்தில் காட்டிய நேர்த்தியான நெஞ்சு வலியால் கல...