NEW CADOLINA , VOTE FOR INDEPENDENCE FROM FRANCE
NEW CADOLINA , VOTE FOR INDEPENDENCE FROM FRANCE , நவம்பர் 4, நியூ கலிடோனியா சுதந்திரம் அடைவதற்கான பொது வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு கிழக்கே உள்ள நியூ கலிடோனிய தீவு இன்று வரை ஒரு பிரெஞ்சு காலனியாக உள்ளது. அந்தத் தீவின் அரச நிர்வாகம், இராணுவம், பொலிஸ், நீதிமன்றம் எல்லாம் பிரான்ஸ் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இதற்கு முன்னர் இருபது வருடங்களுக்கு முன்னர் நடந்த பொது வாக்கெடுப்பில் 93% பிரான்சுடன் சேர்ந்திருப்பதற்கு வாக்களித்தனர். ஆனால், அந்த முடிவு நம்பத் தகுந்ததாக இருக்கவில்லை. வாக்கெடுப்பில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிகின்றது. அன்றைய வாக்கேடுப்பை தீவின் பூர்வ குடிகளான "கானாக்" இன மக்கள் பெருமளவில் புறக்கணித்தனர். தற்போது மீண்டும் வாக்கெடுப்புக்கு விடப் படுவதற்கு காரணம், சுதந்திரம் குறித்து பூர்வ குடி மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு. சுதந்திரம் கிடைத்தால் நாட்டின் பெயரை "கானாக்" என்று மாற்ற விரும்புகின்றனர். இருப்பினும் நியூ கலிடோனியா தனி நாடாவதற்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கும் என்று சொல்ல முடிய...