GANDHI காந்திஜி இறந்த பிறகு உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த புகைப்படம்
GANDHI காந்திஜி இறந்த பிறகு உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த புகைப்படம் ”லைஃப்” பத்திரிகை. மார்கரெட் புருக் ஒயிட் சாந்தமே உருவான முகத்துடன் கையில் நாளிதழோடு ராட்டையின் முன்பு காந்திஜி அமர்ந்திருக்கும் இந்தப் புகைப்படம் மிகவும் பிரபலமானது. அவரது அஹிம்சை, ஒத்துழையாமை, கிராம சுயராஜ்ஜியம், ஆங்கிலேயருக்கு எதிராக அவர் எடுத்த ஆயுதமான இராட்டை என அனைத்தையும் ஒருசேர கொண்டிருக்கும் இந்தப் புகைப்படம் உலகளவில் அஹிம்சையின் முகமாக இன்றளவும் அவரை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறது. ”லைஃப்” பத்திரிகை. மார்கரெட் புருக் ஒயிட் 1946-ம் ஆண்டு பிற்பகுதியில் இந்தியா சுதந்திரம் அடைவதற்கான சூழல் நிலவியதால் அதற்கு காரணமான காந்திஜியைப் பற்றி எழுத நினைத்தது அமெரிக்காவின் புகழ்பெற்ற ”லைஃப்” பத்திரிகை. அதற்காக மார்கரெட் புருக் ஒயிட் (Margaret Bourke-White) என்ற பெண் புகைப்படப் பத்திரிகையாளரை இந்தியாவுக்கு அனுப்பியது. டெல்லியில் காந்திஜியை சந்திக்க சென்ற அவரை உடனே அனுமதிக்கவில்லை. மாறாக காந்திஜி சார்பில் நிபந்தனைகள் அவருக்கு விதிக்கப்பட்டது. ஒன்று புகைப்படம் எடுப்பதற்கு...