THE LAST DAYS OF V.O. CHIDAMBARAM PILLAI
THE LAST DAYS OF V.O. CHIDAMBARAM PILLAI வ.உ.சி யின் கடைசி காலத்தைப் பற்றி ஒரு பழைய தினமணிச் செய்தி. ஒரு கப்பல் கம்பெனி முதலாளிக்கு அவர்கள் அளிக்கும் தொகை, அதைப் பெற்றுக்கொள்ளும் அவரின் நிலை மனதை உலுக்கியது. அன்புடன், கிருஷ்ணன் சங்கரன் அன்புள்ள கிருஷ்ணன் சங்கரன் 1936ல் ல் அந்த 75 ரூபாய் என்பது சிறியதொகை அல்ல. தங்கக் கணக்குப்படி பார்த்தால் 1936ல் தங்கம் ஒரு சவரன் [8 கிராம், 22 காரட்] 25 ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் மூன்று சவரன். இன்று ஒரு சவரன் முப்பதாயிரம் ரூபாய். அதாவது ஒரு லட்சம் ரூபாய். இன்னும் சுருக்கமாகச் சொன்னால் அன்றைய நடுத்தரவர்க்க வாழ்க்கையின்படி ஆறுமாதம் வாழ்வதற்கான பணம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஒரு தனிநபர்க்குழு அதை அளித்தது நல்ல விஷயம்தான். அதைப்போல பல உதவிகள் தொடர்ச்சியாக அவருக்கு வந்தன என்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. வ.உ.சி தேசபக்தர், அதற்காக பெரும்பொருளை இழந்தவர், இன்னும் பெரிய அளவில் உதவிக்குத் தகுதியானவர்தான். அந்த உதவிகள் அவருக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அன்றைய சூழல் என்ன? பொதுவாக இத்தகைய உதவிகள் செய்யப்படுவது அமைதியான, நிலையான காலகட்டங்களில். ...