JAMES COOK ,EXPLORER OF ENGLAND KILLED FEBRUARY 14,1779
JAMES COOK ,EXPLORER OF ENGLAND KILLED FEBRUARY 14,1779 ஜேம்ஸ் குக் (James Cook, 7 நவம்பர் 1728 - 14 பெப்ரவரி 1779) இங்கிலாந்தைச் சேர்ந்த நாடுகாண் பயணி, பிரிட்டிஷ் ஆய்வாளர், மாலுமி, வரைபடங்கள் உருவாக்குனர் மற்றும் பிரிட்டிஷ் அரச கடற்படையின் (Royal navy) அணித்தலைவரும் (Captain) ஆவார். நியூபவுண்ட்லாந்துத் தீவினை முதன்முதலில் உலக வரைபடத்தில் குறித்ததுடன் அமைதிப் பெருங்கடலில் தனது எச்.எம்.பார்க் என்டேவர் கப்பலில் மூன்று பயணங்களை மேற்கொண்டவர். அமைதிப் பெருங்கடலின் பல இடங்களையும், தீவுகளையும் கண்டறிந்தவர். ஆத்திரேலியா, ஹவாய் போன்ற தீவுகளை முதன் முதலில் கண்டுபிடித்த ஐரோப்பியர் ஆவார். பிறப்பு[மூலத்தைத் தொகு] ஜேம்ஸ் குக் 1728- ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் யார்க்செயரில் பிறந்தார். இவர் பதினாறு குழந்தைகள் கொண்ட ஒரு ஸ்காட்லாந்து உழவருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். அய்டான் நகரில் தனது பள்ளிக்கல்வியை பயின்ற குக், தனது பதினேழு வயதில் ஒரு கடையில் வேலை பார்க்க ஆரம்பித்தார். பதினெட்டு வயதில் படகு ஓட்டுனராக மாறினார். விட்பை (Whitby) துறைமுகத்தில் ஜான் வாக்கர் என்னும் நிலக்க...