Posts

Showing posts with the label GOD FATHER

MGR GOD FATHER

Image
MGR  GOD FATHER சென்னை மவுண்ட்ரோடு தபால்தந்தி அலுவலகம்! மாலை ஆறு மணி, நீண்ட வரிசை, அதில் வியர்வையால் நனைந்து, காய்ந்து விரைத்து நிற்கும் சட்டை, கோடு போட்ட உள் டவுசர் வெளியில் தெரிய மடித்துக் கட்டிய லுங்கி முகத்தில் சோகம், எப்படியும் மீட்டு விடலாம் என்ற நம்பிக்கை இழையோடும் கண்கள், பரபரப்புடன் ஒரு ரிக்‌ஷாகாரர். ஒரு வழியாய் மனதை திடப்படுத்திக் கொண்டு உள்டவுசர் பாக்கெட்டில் இருந்த ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், பத்து ரூபாய் என்று கசங்கி சுருண்டு கிடந்த நோட்டுகளை தந்திக் கவுண்டரில் அள்ளிப் போட்டுக் கொண்டே… ”இவ்வளவு தான்யா இன்னிக்கு ரிக்ஷா ஓட்டின கலெக்ஷன், இதை எடுத்துக்க” “யோவ் நீ என்ன இடம் மாறி வந்துட்டியா, நான் உன் ரிக்‌ஷா ஓனர் இல்ல…! “அய்ய…துட்டு உன்க்கில்லைபா…தந்தி கொடுக்க” “எந்த ஊருக்கு?” அமெரிக்காவிலுள்ள ப்ரூக்ளின் ஆஸ்பத்திரிக்கு” தலைவா கவலைப் படாதே... நாங்கள் உயிருடன் இருக்கும் வரை உன்னை எங்களிடமிருந்து பிரிக்க முடியாது” இதுக்கு எவ்வளவு காசு” “95 ரூபாய் ஆகுது” “இந்தா எடுத்துக்க.. அலுவலர் அந்த அழுக்கு நோட்டுகளை எண்ணிப் பார்த்து, 78 ரூபாய் தான் இருக்கிறது, இன்னும...

SYBIL KATHIGASU, மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு தமிழ்ப் பெண்மணி.

Image
SYBIL KATHIGASU,  மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு தமிழ்ப் பெண்மணி.  மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு தமிழ்ப் பெண்மணி. சிபில் கார்த்திகேசு (Sybil Kathigasu, 1899-1948) இரண்டாம் உலகப் போரின் போது பல நூறு சீனர்களின் உயிர்களைக் காப்பாற்றியவர். [1] ஜப்பானியப் படையினரை எதிர்த்துப் போராடியவர். மலேசியாவின் நட்பு படைகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர். இங்கிலாந்து மற்றும் காமன்வெல்த் நாடுகளின் இரண்டாவது உயரிய விருதான 'ஜார்ஜ் பதக்கம்' பெற்றவர். [2] மலேசியாவில் உள்ள சீனர் சமுகம் இவரை ஒரு தியாகி என்று போற்றுகின்றது. [3] ஈப்போ மாநகரின் முக்கிய சாலைக்கு இவருடைய பெயர் சூட்டப்பட்டு உள்ளது.[4] வரலாறு[தொகு] சிபில் கார்த்திகேசுவின் முழுமையான பெயர் சிபில் டெலி. இவர் இந்தோனேசியாவின் சுமத்திராவில் இருக்கும் மேடானில் 1899 ஆம் ஆண்டு பிறந்தவர். [5] இவருடைய தந்தையார் ஓர் ஆங்கிலேயர். ஒரு தோட்ட நிர்வாகி. சிபில் கார்த்திகேசுவின் தாயார் ஒரு தமிழர்.  சிபில் கார்த்திகேசு தேர்ச்சி பெற்ற ஒரு செவிலியலர் (தாதி). சீன மொழியில் இயல்பாகப் பேசக் கூடியவர். 1919 ஆம் ஆண்டு டாக்டர் ஏ.சி.கார்த்திகேசு என்பவர...