Posts

Showing posts with the label INDIA`S FIRST

INDIA`S FIRST TALKIE MOVIE "ALAM ARAA "HINDI RELEASED MARCH 14,1931

Image
INDIA`S FIRST TALKIE MOVIE   "ALAM ARAA "HINDI RELEASED  MARCH 14,1931 இன்று கதையே இல்லாமல் திரைப்படங்கள் வருகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திரைப்படத்துறை குழந்தையாக இருந்தபோது, பேசும்மொழி படங்கள் கிடையாது. சத்தம் கிடையாது, மௌன படம் தான் பார்க்க வேண்டும். சைகையும், உடல் அசைவும், உதட்டு அசைவுகளும் அன்று கதையை பார்வையாளர்களுக்கு உணர்த்தின. அதன்பின் தொழில்நுட்ப வளர்ச்சியால் பேசும்மொழி படங்கள் வெளிவந்தன. 'தி ஜாஸ் சிங்கர்' என்கிற திரைப்படம் தான் உலகின் முதல் முழு நீள பேசும்படம். இந்தப்படம் வெளிவந்தது 1927 அக்டோபர் மாதம். அதற்கடுத்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் முதல் பேசும்படம் வெளியானது. அந்தப்படம் ஆலம் ஆரா. இந்தியில் தான் முதன் முதலாக இந்தப்படம் வெளிவந்தது. 1931 மார்ச் 14ந்தேதி இந்த திரைப்படம் வெளிவந்தது. இந்தப்படத்தை இம்பீரியல் பிலிம் கம்பெனி என்கிற நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் அர்தசிர் இரானி என்பவர் ஆவார். இந்த படத்தை இயக்கியவரும் இவரே. இப்படத்தின் கதை பார்ஸி மொழியில் எழுதப்பட்டது. கதையில் ஒரு மன்னர் அவருக்...