LAKSHMI PRABHA ,TAMIL ACTRESS CHARECTER ROLE ARTIST BORN DECEMBER 4,1927
LAKSHMI PRABHA ,TAMIL ACTRESS CHARECTER ROLE ARTIST BORN DECEMBER 4,1927 அன்றைய ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் வில்லன் நாகேந்திர ராவை சிரிப்பால் மயக்கும் வில்லியாகவும், 1950-இல் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற ‘திகம்பர சாமியார்’ படத்தில் வக்கீல் சட்டநாதன் [டி.பாலசுப்பிரமணியம்] ஜோடியாகவும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர், லட்சுமி பிரபா. கதாநாயகியாகவும், குணச்சித்திர நடிகையாகவும் வில்லி கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவர் நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலுவின் மனைவி எம்.சரோஜாவின் உடன் பிறந்த மூத்த சகோதரி ஆவார். திருமணத்திற்குப் பின்பே இவர் நடிக்க வந்தார். பட அதிபர் சுப்பிரமணியம் தான் ’கீதகாந்தி’ என்ற படத்தில் அறிமுகம் செய்தார். தமிழ்த் திரைப்படங்களில் இவர் பங்கு கொஞ்சமே என்றாலும் பண்பட்ட நடிப்பால் அன்றைய ரசிகர்கள் நெஞ்சம் நிறைந்தவராகத்தான் இவர் திகழ்ந்தார். ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவும் லட்சுமி பிரபாவும் நெருங்கிய தோழிகள். சந்தியாவுக்கு ஒரு படம் கிடைக்கிறதென்றால் அதில் இவருக்கேற்ற கதாபாத்திரம் இருக்குமேயென்றால் அந்தப் படத்தில் இவருக்கு நிச்சயம் சிபாரிசு ...