Posts

Showing posts with the label அம்பேத்கர்

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்!

Image
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்! அடக்கப்பட்ட மக்களின் அரிமா இந்தியாவின் தனித்தன்மை என்று பார்ப்பனர்களால் பெருமையாகவும், சமூக விஞ்ஞானிகளால் பெருங்கொடுமையாகவும், அநீதியாகவும் சுட்டிக் காட்டப்படுவது தான் வர்ணாஸ்ரமத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஜாதிமுறை. புத்தர் தொடங்கி இன்றைய காலம் வரை வர்ணாஸ்ரமத்திற்கும், ஜாதிக்கும் எதிரான போராட்டம் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தின் பக்கங்களில் இவரின் பங்களிப்பு ஒரு புரட்சியின் வீச்சு. ஆரிய சனாதனத்தையும், அது அமர்ந்திருந்த அதிகாரப் பீடத்தையும் ஆட்டம் காணச் செய்த பேரிடி!  அடிமை வாழ்வைத் தகர்க்க, அரசியல் அதிகாரத்தைப் பெற வேண்டியதன் அவசியத்தை இந்திய மண் எங்கும் பரப்பிய பெரு நெருப்பு! மாபெரும் திறமைசாலிகள் என பூணூல் படர்ந்த தங்கள் முதுகைத் தாங்களே தட்டிக் கொள்ளும் பார்ப்பனக் கூட்டத்திற்கிடையில், தன் தனிப்பெரும் ஆற்றலால் இந்திய அரசியல் சாசனத்தை வடித்த சிற்பி! ஓரளவுக்கேனும் மனித உரிமைக்கும், கருத்துரிமைக்கும் இந்திய அரசியல் சட்டம் வாய்ப்புத் தருகிறதெனில் அது அவரின் பங்களிப்பால் மட்டுமே சாத்தியமாயிற்று! தானே வட...