VENGEANCE -SHORT STORY
பழிதீர்ப்பவன் சிறுகதை : ஆன்டன் செகாவ் தமிழில் : மா. புகழேந்தி தனது மனைவியைக் கையும் களவுமாகப் பிடித்த சிறிது நேரத்தில் பியோடோர் பியோடோரோவித்ச் சிகேவ், துப்பாக்கிகள் விற்கும் ஷ்முக் அண் கோ வில், கைத்துப்பாக்கி ஒன்றை வாங்க நின்று கொண்டிருந்தான். அவனது வெளித்தோற்றம், ஆத்திரம் , சோகம் கலந்த கலவையாகவும் மாற்றமுடியாத உறுதி கொண்டவனாகவும் காட்டியது. “என்ன செய்ய வேணும்னு எனக்குத் தெரியும்”, தனக்குள் சொல்லிக்கொண்டான். “குடும்பத்தின் புனிதம் கேட்டு விட்டது, குலப்பெருமை சேற்றில் விழுந்து விட்டது. கெட்டவர்கள் வெற்றியடைகிறார்கள். அதனால் மரியாதைக்குரிய குடிமகனான நான் அவர்களைப் பழிவாங்கியே தீர வேண்டும். முதலில் அவளைக் கொல்லவேண்டும் பிற்பாடு அவளது காதலனை அப்புறம் என்னையே.” அவன் இதுவரை எந்தக் கைத்துப்பாக்கியையும் வைத்திருக்கவில்லை, யாரையும் கொன்றதில்லை. ஆனால் அவனது கொந்தளிக்கும் மனநிலை கற்பனையில் பார்வையாளர்களின் கூட்டத்துக்கு நடுவே, பிணப் பரிசோதனைக்காக ரத்தம் தோய்ந்த மண்டை உடைந்த மூன்று உடல்கள் தெரிந்தது. அந்தக் கடை ஊழியன், ஓர் உற்சாகமான பிரெஞ்சுக்காரன், தொப்பையுடனும் வெண்ணிறக் க...