எம்ஜியாரும் அவரது நாஜிக்கட்சி போன்ற செயல்பாடும் - தமிழகத்தை குட்டி சுவராக்கிய எம்ஜியார்
எம்ஜியாரும் அவரது நாஜிக்கட்சி போன்ற செயல்பாடும் - தமிழகத்தை குட்டி சுவராக்கிய எம்ஜியார் எம்.ஜி.ஆரின் ஆட்சியை பொற்காலத்துக்கு ஒப்பிட்டும், ஜெயலலிதா அவரைப் போல் இல்லை என்றும் பலர் தற்போது விமர்சிப்பதைக் காண முடிகிறது. ஆனால், ஜெயலலிதாவின் தற்போதைய அனைத்து அரசியல் விகாரங்களுக்கும் பிதாமகராகவும் வழிகாட்டியாகவும் இருப்பவர் எம்ஜிஆரே! கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர். அதனை எந்த வகையிலும் கட்டுப்படுத்தவில்லை. மாறாக அனைத்து லஞ்ச லாவண்ய நடவடிக்கைகளுக்கும் ஒற்றைச்சாளர ஊற்றுக்கண்ணாக அவரே விளங்கினார். அவருக்குத் தெரியாமல் வேறு யாரும் அதில் “பங்குபெற” முடியாது என்ற பரிணாம நிலையே அவரது சாதனை! தனது திரைப்படங்களில் மதுவுக்கு எதிராக கடும் பிரச்சாரத்தை மேற்கொண்டவர் எம்ஜிஆர், மதுவிலக்கு என்பது ஓர் ஏமாற்று முழக்கம். இது மனச்சாட்சி உள்ளவர்களுக்கு தெரியும். மது இல்லாத தமிழகம் இருந்ததாக கூறுவது முற்றிலும் புரட்டு. சங்கத் தமிழ் நூல்களை உரத்துப் பேசும் சிலரே இப்படி ஒரு பொய்யைக் கட்டவிழ்ப்பதும், க...