SARDAR VALLABHAI PATEL ,THE MAN WHO CONSOLITATE 565 STATES WITHIN 2 YEARS BORN 1875 OCTOBER 31
SARDAR VALLABHAI PATEL ,THE MAN WHO CONSOLITATE 565 STATES WITHIN 2 YEARS BORN 1875 OCTOBER 31 "சர்தார் வல்லபபாய் படேல் தன் குடும்பத்திற்காக எதையும் செய்ததில்லை; அவரது குடும்பத்தாரும் "படேல் எங்களுக்கே சொந்தம்' என்று உரிமை கொண்டாடியதில்லை' என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார். சுதந்திரத்துக்குப் பின் தேசத்தை ஒருங்கிணைத்தவரும், நாட்டின் முதல் மத்திய உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபபாய் படேலின் 141-ஆவது பிறந்த தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி தில்லியில் படேலின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: நம்மிடையே உள்ள பிரிவுகள் மீது மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருந்தாலோ, ஒற்றுமை உணர்வுடன் வாழா விட்டாலோ, இந்தியாவைப் போன்ற வேறுபாடுகள் நிறைந்த நாட்டை நடத்திச் செல்ல முடியாது. ஒற்றுமையைப் பற்றி பேசும்போது ஒரு விஷயம் தெளிவாகிறது. நானோ பாஜகவைச் சேர்ந்தவன். சர்தார் படேலோ, காங்கிரûஸச் சேர்ந்தவர். ஆனாலும் நாம் அவரது பிறந்த தினத்தை அதே உற்சாகத்துடன் கொண்டாடுகிறோம். சர்தா...