K.R.VIJAYA ,THE SILVER SCREEN SMILING QUEEN
K.R.VIJAYA ,THE SILVER SCREEN SMILING QUEEN ‘புன்னகை அரசி’ கே.ஆர்.விஜயா தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘புன்னகை அரசி’ என அன்போடு அழைக்கப்படும் கே. ஆர். விஜயா, கேரளா மாநிலம் திருச்சூரில் 1948 ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி பிறந்தவர். தந்தை ராமச்சந்திர ராவ் ஆந்திராவைச் சேர்ந்தவர். தாயார் கல்யாணி கேரளாவைச் சேர்ந்தவர். தந்தையும், தாயின் சகோதரரும் ராணுவத்தில் பணியாற்றியதால் மொழி பார்க்காமல் திருமணம் செய்து வைத்தார்களாம். இவர்களுக்கு மூத்த மகளாக பிறந்தவர் கே.ஆர்.விஜயா. இவருக்கு பெற்றொர்கள் வைத்த பெயர் ‘தெய்வநாயகி’. அந்திரா, கேரளா என இரண்டு இடங்களிலும் மாறி மாறி பெற்றோர்கள் வசித்ததால் படிப்பு பாதியிலேயே நின்றது. தந்தைக்கு நாடகத்தில் நடிக்கிற ஆர்வம் இருந்ததால், அவர் மேடை ஏற பழனிக்கு இடம் பெயர்ந்திருக்கிறார். அவரோடு இவரும் பதினோரு வயதிலிருந்தே நாடகங்களில் நடிப்பதில் அதிக ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். அப்போதே பாசமலர், பாவமன்னிப்பு போன்ற படங்களில் இடம் பெற்ற பாடல்களுக்குத்தான் பெரும்பாலும் அவரை ஆட வைப்பார்களாம். காசநோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக...