Posts

Showing posts with the label ANBU BALAM

ANBU BAALAM -KALYANASUNDARAM -SIVAKUMAR

Image
  ANBU BAALAM -KALYANASUNDARAM -SIVAKUMAR 'அன்பு பாலம்' கல்யாணசுந்தரம்..... ----------------------------------- தான் அணிந்திருக்கும் வேட்டி சட்டை தவிர தன் சொந்தம் என்று எதுவுமே வைத்துக் கொள்ளாத மனிதர். தன் உடம்பைக்கூட மருத்துவக் கல்லூரி பரிசோதனைக்கு எழுதி வைத்துவிட்ட அதிசயப் பிறவி "அன்பு பாலம்" கல்யாணசுந்தரம் அவர்கள். திருநெல்வேலி- நாங்குநேரி- மேலக்கருவேலங்குளம் பிறந்த ஊர். பால்வண்ணநாதர் -தாயம்மாளுக்கு 13 ஆண்டுகளுக்குப் பின் பிறந்த இரண்டாவது குழந்தை... பள்ளிப்படிப்பு முடிந்து சென்னை மாநிலக் கல்லூரியில் படிக்கிறார் . 1963 -ல் வட எல்லையில் சைனா போர் தொடுத்த நேரம். நேருஜி வேண்டுகோளை ஏற்று கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி 8.1/2 பவுனை முதல்வர் காமராஜரிடம் வழங்கிய இந்தியாவின் முதல் மாணவ நன்கொடையாளர்.. ஊரில் தன் பங்குக்குக் கிடைத்த 50 லட்சம் பெறுமானமுள்ள சொத்தில், வீட்டை குழந்தைகள் தொண்டு நிறுவனத்திற்கு தானம் செய்தார். நிலத்தை உழுதவர்களுக்கே கொடுத்து விட்டார். திருப்பனந்தாள் கல்லூரியில் நூலகராக வேலையில் சேர்ந்தார். மாதச் சம்பளமாக பெற்றதை, கடைசிவரை ஏழைக் குழந்தைகளுக்கு தானமாகக...