Posts

Showing posts with the label AMIRDESWARAR

AMIRDESWARAR TEMPLE ,IN KARNATAKA

Image
AMIRDESWARAR TEMPLE ,IN KARNATAKA அமிர்தேஸ்வரர் கோயில்.. இக்கோயில்,கர்நாடக மாநிலத்தில் உள்ள அமிர்தபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. ஒரு அகன்ற திறந்த மண்டபத்துடன்கூடிய இக் கோயில் போசளர் கட்டிடக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தென்னந் தோப்புக்களுக்கு மத்தியில் அமைந்துள்ள இக் கோயிலின், ஒரேயளவு இடைவெளிகளில் செதுக்கப்பட்டுள்ள வட்டவடிவச் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய பழைய மதில் இன்றும் உள்ளது. இக்கோயில் ஒரு விமானத்துடன் கூடியது. இது மூடப்பட்ட சிறிய மண்டபம் ஒன்றினூடாகத் திறந்த பெரிய மண்டபத்துடன் இணைக்கப்பட்டள்ளது. நடுத்தர அளவினதாகிய இக் கட்டிடம், மண்டப அமைப்பிலும் அளவிலும், பேளவாடியில் உள்ள விஜயநகரக் கோயிலுடன் ஒப்பிடத் தக்கதாக உள்ளது. திறந்த மண்டபம் 29 தூண் இடைவெளிகளையும், மூடிய பண்டபம் 9 தூண் இடைவெளிகளையும் கொண்டுள்ளன. இச் சிறிய மண்டபத்தின் ஒரு பக்கத்தில் அருகில் அமைந்துள்ள இன்னொரு சிறு கோயிலுக்குச் செல்வதற்கான வாயில் மண்டபம் ஒன்றும் உள்ளது. கோயில் கருவறை சதுர வடிவானது. சிற்ப வேலைப்பாடுகளால் அழகூட்டப்பட்ட பழைய விமானம் இன்றும் உள்ளது. சுவரின் அடிப்பகுதி பழைய ஹோய்சாலப் பாணியில் ...