Posts

Showing posts with the label SIVAJI

SIVAJI GANESAN `S MARRIAGE

Image
  SIVAJI GANESAN `S MARRIAGE சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்" நாடகம் 3 மணி நேரம் நடந்த நாடகத்தை, தந்தை பெரியார் கடைசி வரை இருந்து பார்த்தார், `யாரோ ஒரு சின்னப்பையன் சிவாஜியாக நடித்தானே, அவன் யார்?" என்று கேட்டார். சிவாஜிகணேசனை பெரியார் முன் கொண்டுபோய் நிறுத்தி, ``இந்தப் பையன்தான். பெயர் கணேசன்" என்று அறிமுகம் செய்து வைத்தனர். சிவாஜியாக ரொம்ப நன்றாக நடித்தாய்! இன்று முதல் நீ கணேசன் அல்ல; சிவாஜி!" என்று பெரியார் வாழ்த்தினார். பெரியாரின் இந்த வாழ்த்து பெரிய பட்டமாக அமைந்து விட்டது. அதுவரை ``வி.சி.கணேசன்" என்று அழைக்கப்பட்டவர், அன்று முதல் ``சிவாஜி கணேசன்" ஆனார். திண்டுக்கல்லில் இருந்து பெங்களூர் சென்றுவிட்டு, வேலூர் சக்தி நாடகசபா முகாமிட்டது. அப்போது ``நூர்ஜஹான்" என்ற நாடகத்தில், நூர்ஜஹானாக சிவாஜி நடித்தார். நேஷனல் பிக்சர்ஸ்" பி.ஏ.பெருமாள், இந்த நாடகத்தைப் பார்த்தார். சிவாஜியின் நடிப்பு அவரை வெகுவாகக் கவர்ந்தது. எதிர்காலத்தில் மிகப்பெரிய நடிகராக சிவாஜி வருவார்" என்று நினைத்தார் பி.ஏ.பெருமாள்பராசக்தி கதையை படமாகத் தயாரிக்க வேண்டும். அதில் சிவாஜி கணேசன...

VASANTHA MALIGAI -DIALOGUE SIVAJI GANESAN

Image
  VASANTHA MALIGAI - DIALOGUE SIVAJI GANESAN நாம் எவ்வளவோ வசனங்கள் ரசித்திருப்போம். ஆனால் ! இந்த காதல் காவிய கவிதை நடைக்கு இணையேது ! ... (இந்த வசனம் படமாக்குவதற்கு பத்து நிமிடம் இருக்கும் போது  பாலமுருகனால் எழுதப்பட்டது  சிவாஜிக்கு மனப்பாடம் செய்ய ஐந்தே நிமிடம் ) ஆனந்த்: லதா… இந்த இதயம் இருக்கே அதை ஒருத்தருக்கு கொடுக்காத வரைக்கும் விசாலமாயிருக்கும். கொடுத்ததுக்கு அப்புறம் ரொம்ப சுருங்கிப் போய்விடும். அடுத்தவங்களுக்கு கொடுக்க சம்மதிக்காது. லதா: அப்படி என்றால் உங்கள் இதயம்…! ஆனந்த்: அதை ஒரு தேவதைக்கு அர்ப்பணித்து விட்டேன். அந்த அன்பு தெய்வம் குடியிருக்கும் கோயிலை நீ பார்க்க வர்றீயா? லதா: பார்க்கிறேன்.. ஆனந்த்: வா.. பார்.. பார்  என் காதல் தேவதைக்கு நான் கட்டியிருக்கும் இந்த ஆலயத்தை பார்!  உள்ளத்திலே படர்ந்திருக்கும் முல்லைக் கொடிக்கு நான் அமைத்திருக்கும் இந்த பந்தலைப்பார்!  என் இதய சாம்ராஜ்ஜிய தலைவியின் ஆட்சி ஆரம்பமாகப்போகும் அன்பு மாளிகையைப் பார்!  என் கண்களைத் திறந்து விட்ட காதல் தெய்வம் காலமெல்லாம் களித்திருக்க நான் கட்டிய வசந்த மண்டபத்தை பார்!  வ...

MUTHAL MARIYATHAI -MOVIE HAPPENINGS BHARATHIRAJA - SIVAJI GANESAN -RADHA

Image
  MUTHAL MARIYATHAI -MOVIE HAPPENINGS BHARATHIRAJA - SIVAJI GANESAN -RADHA ‘நீயும் தோற்கலை; நானும் தோற்கலைன்னு சொன்னார் சிவாஜி சார்!’ - பாரதிராஜாவின் ‘முதல் மரியாதை’ அனுபவங்கள் நன்றி : இந்து தமிழ் திசை செய்திப்பிரிவு ‘முதல் மரியாதை’ படத்தைப் பார்த்துவிட்டு, ‘டேய் நீயும் தோற்கலை, நானும் தோற்கலை. உலகத்தரம் வாய்ந்த படத்தைக் கொடுத்திருக்கேடா’ என்று சிவாஜி சார் மனமுவந்து பாராட்டினார்’ என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்தார். இயக்குநர் பாரதிராஜா, ‘என் இனிய தமிழ் மக்களே’ என்ற தலைப்பில் இணையதளச் சேனல் நடத்தி வருகிறார். அதில் தன் வாழ்க்கை அனுபவங்களையும் திரையுலக அனுபவங்களையும் மனம் திறந்து பகிர்ந்து வருகிறார். நடிகர்திலகம் சிவாஜியை வைத்து பாரதிராஜா ‘முதல் மரியாதை’ படத்தை இயக்கினார். இந்தப் படம் குறித்தும் சிவாஜி குறித்தும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். அதில் பாரதிராஜா கூறியிருப்பதாவது : ‘’நான் ரசித்த சிவாஜி சார், நான் சினிமாவுக்கு ஆசைப்பட்டு வருவதற்குக் காரணமாக இருந்த சிவாஜி சார், அவரை நான் இயக்குகிறேன். அவர் எப்படி நடிக்கவேண்டும் என்று நான் சொல்லி நடிக்க வைத்தேன் என்பதையெல்லாம் நான் என் வா...