Posts

Showing posts with the label " ஜமுனா "

JAMUNA ,SOUTHERN NARGHIS BORN 1936 AUGUST 30

Image
JAMUNA ,SOUTHERN NARGHIS  BORN 1936 AUGUST 30 தென்னாட்டு நர்கீஸ் ,ஆந்திர நடிகை  " ஜமுனா " புராணப் படங்களின் ஆதிக்கம் குறையாத ஐம்பதுகளில் தெலுங்கு சினிமாவை சீர்திருத்த சினிமாவாக மாற்றிக்காட்டிய சினிமா சிற்பிகளில் முக்கியமானவர் கரிகாபட்டி ராஜா  ராவ். புகழ்பெற்ற மருத்துவராகவும் இருந்த இவர், நாடகம், சினிமா இரண்டையும் சீர்திருத்தக் கருவியாகக் கையாண்டவர்.  இவரது பெருமைமிகு அறிமுகம்தான் 'ஆந்திராவின் நர்கீஸ்' என்று புகழப்படும் ஜமுனா. தெலுங்கு சினிமாவின் காவிய கால சு+ப்பர் ஸ்டார்கள் என்.டி.ஆர்., அக்னிநேனி நாகேஷ்வர ராவில் தொடங்கி அறுபதுகளின் முன்னணிக் கதாநாயகர் அத்தனை பேருடனும் சுமார் 200 தெலுங்குப் படங்களில் நடித்தவர். தமிழில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் நடித்திருந்தாலும்  சிவாஜி ,எம்ஜியார் ,ஜெய்சங்கர்   வரையிலும்  ஜோடி சேர்ந்து தமிழ் ரசிகர்களை ஈர்த்த காந்தக் கண்களுக்குச் சொந்தக்காரர். தெலுங்கு, தமிழ் மொழிகளைக் கடந்து இந்திப் பட உலகிலும் வெற்றிக்கொடி நாட்டிய கன்னடத்துப் பெண். ஜமுனாவின் தந்தை சீனிவாச ராவ் ஆந்திராவின்...