AYOTHIDASR - FOUGHT AGAINST RACISM PERIYAR`S PERIYAR BORN 1845 MAY 20 - MAY 4,1914
AYOTHIDASR - FOUGHT AGAINST RACISM PERIYAR`S PERIYAR BORN 1845 MAY 20 - MAY 4,1914 பெரியாருக்கெல்லாம் பெரியார் ஒரு பைசாத் தமிழன்: அயோத்திதாசப் பண்டிதர் நினைவு நாள். பெரியாருக்கெல்லாம் பெரியார் இவர்... அது 1892-ம் ஆண்டு வெயில் கக்க துவங்கிய ஏப்ரல் மாதம். சென்னை விக்டோரிய டவுன் ஹாலில் சென்னை மஹாஜன சபையின் கூட்டம் நடந்துக் கொண்டிருக்கிறது. அப்போது பரந்து விரிந்திரிந்த சென்னை மாகாணத்தின் அனைத்து ஜில்லாக்களிலிருந்தும் பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். மக்களின் பிரச்னைகளை வந்திருந்த பிரதிநிதிகளிடம் கேட்டு, விவாதித்து முக்கியமானவற்றை பிரிட்டிஷ் அரசிற்கு கோரிக்கையாக அனுப்புவது தான் அந்த கூட்டத்தின் நோக்கம். அந்த கூட்டம் நடந்த கூடம் முழுவதும் மேட்டுக்குடி மக்கள் நிறைந்து காணப்பட்டார்கள். அந்த கூட்டத்திற்கு நீலகிரியிலிருந்து நல்ல அடர் கருப்பு நிறத்தில் நடுவாந்திர உயரத்தில் ஒருவர் வருகிறார். சிலர் அவரை முகசுளிப்புடன் பார்க்கிறார்கள், பலர் அவரை உதாசினப்பார்வையில் சீண்டுகிறார்கள். தீர்க்கமான மனப்பாங்கு கொண்ட அவர், இது எதையும் பொருட்படுத்தவில்லை. தாம் வந்த நோக்கம் தான் அவர...