SRINIVAS, PLAYBACK SINGER BORN 1959 NOVEMBER 7
SRINIVAS, PLAYBACK SINGER BORN 1959 NOVEMBER 7 ஸ்ரீநிவாஸ் (பிறப்பு:நவம்பர் 7, 1959) தமிழ்,கன்னடம்,மலையாளம்,தெலுங்கு மொழிகளில் பாடும் ஓர் தென்னிந்திய திரைப்படப்பாடகர். முன்னணி இசையமைப்பாளர்களான இளையராஜா,தேவா,ஏ. ஆர். ரகுமான்,வித்யாசாகர் போன்றவர்களின் இசையில் தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் திரைப்பாடல்கள் பாடியுள்ளார்.வேதியியல் பொறியாளராக பத்தாண்டுகள் பணியாற்றிய பிறகு இசைத்துறையில் ஈடுபாடு காரணமாக உட்புகுந்து சாதனை படைத்தவர். வாழ்க்கை வரலாறு[மூலத்தைத் தொகு] ஸ்ரீநிவாஸ் தமிழ்நாட்டின் அம்பாசமுத்திரத்தில் துரைசாமி அய்யங்கார் மற்றும் இலட்சுமிக்கு பிறந்தவர். பின்னர் கேரளாவின் திருவனந்தபுரத்தில் வளர்ந்தார். அங்கு தமது அத்தை பத்மா நாராயணன் உந்துதலில் இசையில் நாட்டமும் பயிற்சியும் பெற்றார். வேதியியல் பொறியியல் பட்டப்படிப்பினை மும்பை பல்கலைக்கழகத்தின் கீழுள்ள வேதியியல் தொழில்நுட்பத் துறை (UDCT)யில் முடித்தார்.பத்தாண்டுகள் பொறியாளராகப் பணிபுரிந்தபிறகு தமது இசையார்வம் காரணமாக பணிவாழ்வில் மாற்றத்தை விரும்பினார். 1988ஆம் ஆண்டு இளையராஜாவிடம் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தும்...