Showing posts with label NOVEMBER 7. Show all posts
Showing posts with label NOVEMBER 7. Show all posts

Monday, 14 February 2022

JAMES ,COOK ,EXPLORER ,BORN, 1728 ,NOVEMBER 7, -1779 ,FEBRUARY1 779

 

JAMES COOK ,EXPLORER BORN 

1728 NOVEMBER 7 -1779 FEBRUARY1 779 FEBRUARY 



ஜேம்ஸ் குக் (James Cook, 7 நவம்பர் 1728 - 14 பெப்ரவரி 1779) இங்கிலாந்தைச் சேர்ந்த நாடுகாண் பயணி, பிரிட்டிஷ் ஆய்வாளர், மாலுமி, வரைபடங்கள் உருவாக்குனர் மற்றும் பிரிட்டிஷ் அரச கடற்படையின் (Royal navy) அணித்தலைவரும் (Captain) ஆவார். நியூபவுண்ட்லாந்துத் தீவினை முதன்முதலில் உலக வரைபடத்தில் குறித்ததுடன் அமைதிப் பெருங்கடலில் தனது எச்.எம்.பார்க் என்டேவர் கப்பலில் மூன்று பயணங்களை மேற்கொண்டவர். அமைதிப் பெருங்கடலின் பல இடங்களையும், தீவுகளையும் கண்டறிந்தவர். ஆத்திரேலியா, ஹவாய் போன்ற தீவுகளை முதன் முதலில் கண்டுபிடித்த ஐரோப்பியர் ஆவார்.

பிறப்பு

ஜேம்ஸ் குக் 1728- ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் யார்க்செயரில் பிறந்தார். இவர் பதினாறு குழந்தைகள் கொண்ட ஒரு ஸ்காட்லாந்து உழவருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். அய்டான் நகரில் தனது பள்ளிக்கல்வியை பயின்ற குக், தனது பதினேழு வயதில் ஒரு கடையில் வேலை பார்க்க ஆரம்பித்தார். பதினெட்டு வயதில் படகு ஓட்டுனராக மாறினார். விட்பை (Whitby) துறைமுகத்தில் ஜான் வாக்கர் என்னும் நிலக்கரியினை கப்பல் மூலம் ஏற்றுமதி செய்பவரிடம் பயிற்சி பெறுபவராக சேர்ந்தார்[1]. வாக்கரிடமிருந்து அடிப்படை கணித அறிவையும், திசையமைப்பு குறித்தனவற்றையும் குக் கற்றுத் தேர்ந்தார். தனது சொந்த முயற்சியில் அறிவியலையும் கற்றுத் தேர்ந்தார்.




திருமணம்

ஜேம்ஸ் குக் திசம்பர் 21, 1762 அன்று எலிசபத் பாட்ஸ் என்பவரை மணம் புரிந்துகொண்டார். இத்தம்பதியினருக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன. அவர்கள், ஜேம்ஸ் (1763–94), நாத்னெய்ல் (1764–80), எலிசபத் (1767–71), ஜோசப் (1768–68), ஜியாஜ் (1772–72) மற்றும் ஹக் (1776–93) ஆகியோராவர். கடைசி மகன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது இறந்து விட்டார். இவரின் குழந்தைகள் பற்றிய விடயங்கள் வெளியுலகு அறியாதவையாகும்.


பயணங்களும் கண்டுபிடிப்புகளும்

தனது முதற்பயணத்தின்போது 1770 இல் அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கரையினைக் கண்டார். இவரே அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கரையினைக் கண்ட முதல் ஐரோப்பியராவார். அப்பிரதேசத்தை நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டு இங்கிலாந்துக்குச் சொந்தமானதென உரிமை கோரினார். அவர் தன் வாழ்நாளில் இரு முறை உலகத்தை வலம் வந்துள்ளார். அன்டார்டிகா பகுதிகளிலும் தனது பயணத்தை மேற்கொண்டுள்ளார் குக். வட அமெரிக்காவிலும் பல தீவுகளை இவர் கண்டுபிடித்துள்ளார். தனது கடல் பயணங்களின்போது அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும், தான் பார்த்த இடங்களின் வரைபடங்களை வரையவும் நேரங்களைச் செலவு செய்துள்ளார். இவர் கண்டுபிடித்த இடங்களைப் பற்றியும் நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார்.

கண்டுபிடிப்புகளின் நோக்கம்

மிகப்பெரிய நீண்ட பயணங்களைக் குக் சில காரணங்களுக்காகவே ஓய்வு இல்லாமல் செய்தார்.




தெற்கு கண்டத்தில் உள்ள பகுதிகளைக் கண்டுபிடிப்பது,

வீனஸ் கிரகத்திற்கு வானியல் அளவீடுகள் செய்வது,

புதிய நிலங்களைக் கண்டறிவது,

பிரிட்டிஷ் அரசர் ஜார்ஜ் மூன்றாமவருக்கு நிலங்களைக் கையகப்படுத்துவது,

புதிய இராணுவத் தளங்கள் அமைக்க நல்ல இடங்கள் கண்டுபிடிப்பது,

பசிபிக் மற்றும் அட்லாண்டிக் இடையில் புதிய வழித்தடங்களைக் கண்டுபிடிப்பது ஆகியனவே அவரின் முக்கிய குறிக்கோள்கள் ஆகும்.


766 ஆம் ஆண்டு ராயல் சொசைட்டி பசிபிக் பெருங்கடலில் பயணம் செய்யக் குக்கை அழைத்தது. இப்பயணத்தின் நோக்கம் வீனஸ் கிரகத்திற்கு உண்டான தூரத்தினை அளவிடவும், புதிய ஆராய்ச்சிகள் செய்யவுமாக இருந்தது. 39 வயதில், லெப்டினன்ட் பதவிக்கு குக் உயர்த்தப்பட்டார். கடல் பயணத்தின்போது தளபதியாகவும் ஆக்கப்பட்டார் குக். இப்பயணம் இங்கிலாந்திலிருந்து ஆகத்து 26,1768 அன்று தொடங்கப்பட்டது. மேற்கு மார்க்கமாகச் சென்று பசுபிக் பெருங்கடல் வழியே டெஹீட்டி தீவை அடைந்தார். அங்கு வீனஸ் பற்றிய சில ஆராய்ச்சிகளைக் குக் மேற்கொண்டார். பின் பூமியை ஒரு முறை வலம் வந்த இவரது பயணம் 1771, ஜீலை 12 அன்று செயின்ட் ஹெலனாவில் வந்து முடிந்தது[2].


அவர் எச்.எம்.எஸ் எண்டெவரில் பயணம் மேற்கொண்டார். அவர் ஆகஸ்டு 26 ,1768 அன்று இங்கிலாந்து சென்றடைந்தார்.[3] குக் மற்றும் அவருடைய குழுவைச் சேர்ந்தவர்கள் கேப் ஹார்ன் எனும் பகுதியினை சுற்றிப்பார்த்துவிட்டு தங்கள் பயணத்தை மெற்கொண்டுள்ளனர். மேலும், அவர்கள் ஏப்ரல் 13, 1769 அன்று டஹிடி எனும் இடத்தை வந்தடைந்தனர். அந்த இடத்தில் தான் வெள்ளி (கோள்) கடப்பு பற்றிய ஆய்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது.[4] ஆனால் ஆராய்ச்சியின் முடிவுகள் எதிர்பார்த்த வகையில் வரவில்லை. தன்னுடைய முதல் ஆய்வு நிறைவு பெற்ற பின்பு தன்னுடைய கடற்படை அலுவலர்களால் கொடுக்கப்பட்ட இரண்டாவது கடற்பயணத்திற்கான சீல் செய்யப்பட்ட அந்த ஆணையைத் திறந்தார். அதில் தெற்கு பசுபிக் கண்டங்களின் தென்பகுதியில் உள்ள அறிகுறிகளை ஆராய்ச்சி செய்யும்படி இருந்தது.[5] பிறகு, குக் நியூசிலாந்து மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டார். 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் நாள் ஆத்திரேலியாவின் தென்கிழக்கு கடற்கரையை அவர் அடைந்தார். பின்பு அவர் மேற்கு நோக்கிப் பயணித்தார், இதன் மூலம் கிழக்கு கடற்கரையை எதிர்குக்கினுகொண்ட மல் ஐரோப்பியர் என்ற பெருமையைப்பெற்றார்.


இடைவேளை


குக்கின் பயணப்பாதை. முதல் பயணம் சிவப்பு நிறமிடப்பட்டுள்ளது, இரண்டாம் பயணம் பச்சை நிறமிடப்பட்டுள்ளது, மூன்றாம் பயணம் நீல நிறமிடப்பட்டுள்ளது. குக் இறந்த பின் அவரிடைன் படைவீரர்கள் சென்ற பகுதி விடுபட்ட நீலநிறமாக்கிய கோடுகள்.

குக்கினுடைய இதழ்கள் அவருடைய வருகையாஇப் பற்றி எழுதின. விஞ்ஞான சமூக மக்களின் கதாநாயகனாக அவர் பார்க்கப்பட்டார். பொதுஜனங்களின் கதாநாயகனாக ஜோசப் பேங்க் என்பவர் பார்க்கப்பட்டார்.[6] குக்கினுடைய மகன் இவரது இரண்டாவது பயணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் தான் பிறந்தார்.[7]


இரண்டாவது பயணம்

மீகாமன் ஜேம்ஸ் குக்கின் இறப்பு (ஓவியம்)

Zoffany Death of Captain Cook.jpg

ஓவியர் ஜோஹான் ஸோஃப்பானி

ஆண்டு c. 1795

வகை எண்ணெய் ஓவியம்

பரிமாணம் 137.2 cm × 182.9 cm (54.0 in × 72.0 in)

இடம் தேசிய கடல்சார் அருங்காட்சியகம், லண்டன்

1771 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் முதல் பயணம் முடித்து வந்த உடனேயே ஜேம்ஸ் குக்கிற்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது [8][9] 1772 ஆம் ஆண்டில்


ராயல் சொசைட்டி சார்பாக அறிவியல் பயனத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இதன் நோக்கம் சிக்கலான பூமியின் தென்பகுதியினை ஆய்வு செய்வதாகும்.


மூன்றாம் பயணம்

கருத்துரு

இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமானது வட அமெரிக்காவின் மேல் உள்ள அத்திலாந்திக்குப் பெருங்கடல் மற்றும் பசிப்பிக் பெருங்கடல் இடையே புகழ்பெற்று விளங்கக் கூடிய வடமேற்கு பாதையைக் கண்டுபிடிப்பது ஆகும் . இதனைச் செயல்படுத்த குக்கிற்கு அவருடைய கடற்படை அலுவலர்களால் 1775 ஆம் ஆண்டில் அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது . ஆனால் 1745 ஆம் ஆண்டு வரை நீட்டிப்புச் செய்யப்பட்டது. அந்தப் பாதைகளைக் கண்டுபிடிப்பவர்களுக்கு £ 20,000 பரிசு அறிவிக்கப்பட்டது.[10] ஆரம்பத்தில் சார்லிஸ் கிளெர்கே தான் இந்தப் பயணத்தைத் தலைமை தாங்க வேண்டும் என்று விரும்பினார், ஓய்வு பெற்றிருந்த குக், ஓர் ஆலோசகராகச் செயல்பட்டார்.


குழு உறுப்பினர்கள்

வில்லியம் பேய்லி - வானியலாளாரக பணியாற்றினார்.

ராபர்ட் - தச்சர்

ஜான் லியார்ட் - மீகாமன்

டேவிட் நெல்சன் - தாவரவியல் சேகரிப்பாளர்

ஒமாய்- குக்கிற்கு பயனம் முடியும் வரையில் மொழிபெயர்ப்பாளராக இருந்தார்

டேவிட் சாம்வெல் - அறுவைச் சிகிச்சை

வில்லியம் டெய்லர் - உதவி மாலுமி (midshipman)

ஜேம்ஸ் ட்ரேவெனன் - உதவி மாலுமி (midshipman)

ஜான் வாட்ஸ் - உதவி மாலுமி (midshipman)

1776 ஆம் ஆண்டு குக் தனது மூன்றாவது பயணத்தினைத் தொடர்ந்தார். அந்தப் பயணத்தின்போது ஹவாய்த் தீவுவாசிகளுடனான சண்டையில் கொல்லப்பட்டார். ஜேம்ஸ்குக் இறந்ததால் அவரின் வீரர்கள் குக்கின் சடலத்துடன் பயணத்தின் பாதியில் நாடு திரும்பினர்.


கலானி ஒபு யு - கடத்தல் மற்றும் இறப்பு

ஜேம்ஸ் குக் கலானியை கடத்துதல்

Resolution and Discovery.jpg

ஹெச் எம் எஸ் டிஸ்கவரி

நாள் பெப்ரவரி 14, 1779

அமைவிடம் ஹவாய்

வகை பதிலடி கொடுப்பதற்காக கடத்துதல்

காரணம் திருடப்பட்ட பொருட்கள்

பங்கேற்றோர் கலானி ஒபு யு, மீகாமன் ஜேம்ஸ் குக்

உயிர்ச்சேதங்கள்

மீகாமன் ஜேம்ஸ் குக்

இறப்புகள் 5

காயமுற்றோர் 2

மீகாமன் ஜேம்ஸ் குக் 1779 ஹவாய் தீவின் ஆளும் தலைவரான கலானி ஒபு யு( Kalani'o'pu'u) வைகடத்தியது மற்றும் ஒரு திருடப்பட்ட நீண்ட படகு (லைட்போட்) க்கு பதிலாக அவரைக் காப்பாற்ற முடிவெடுத்து ஆகியவவை குக்கினுடைய இறுதிப் பயணத்தின் இறுதிப் பிழையாக அமைந்தது மட்டுமல்லாது அவருடைய இறப்பிற்கும் வழிவகுத்தது.

Sunday, 7 November 2021

VASANTHA KOKILAM DIED 1951 NOVEMBER 7

 



செல்லுலாய்ட் பெண்கள் -என்.சி. வசந்த கோகிலம் DIED 1951 NOVEMBER 7



எம்.எஸ்.சுப்புலட்சுமியைப் போன்றே எண்ணிக்கையில் மிகக் குறைந்த திரைப்படங்களில்மட்டுமே நடித்தவர். பின்னர் முழு நேரமும் இசையைத் தன் துணையாக வரித்துக் கொண்டவர்என்.சி. வசந்த கோகிலம். 1940 - 50 காலகட்டத்தில் உச்சம் தொட்ட குரலுக்குச் சொந்தக்காரர்.


சாஸ்திரீய இசையில் இவரது 78 ரெக்கார்டுகள் வெளிவந்துள்ளன. எவ்வளவுதான் திறமைகள் குவிந்திருந்தபோதும் குன்றின் மேலிட்ட விளக்கு போல ஒளிர வேண்டுமானால் அதற்கு ஓரளவுக்கு  வசதி - வாய்ப்புகளும் வேண்டியே இருக்கிறது.





கலைத்துறையே ஆனாலும் அதில் திறமையுள்ளவர்கள் மட்டுமே மிளிர முடியுமானாலும் அதிலும் பேதங்கள் இருக்கத்தானே செய்கின்றன. அதோடு அற்பாயுளில் ஒரு கலைஞர் மறைந்து விடும்போது வரலாறு அக் கலைஞரை எளிதாக மறந்தும் போய் விடுகிறது. அல்லது எப்போதோ ஒருமுறை நினைவுக்குக் கொண்டு வருகிறது.

எம்.எஸ்.சுப்புலட்சுமியை ‘எம்.எஸ். அம்மா’ என்று கொண்டாடுகிற அளவுக்கு என்.சி.வசந்த கோகிலத்தின் இனிய குரல் வளமும் பாடல்களும் ஏன் கொண்டாடப்படுவதில்லை? மிகக் குறுகிய காலமே பாடித் திரிந்து மறைந்து போன அந்த வசந்தத்தின் குயில் குறித்து இன்றைய தலைமுறைக்கு எந்த அளவுக்குத் தெரியும் என்பதும் பெரும் கேள்விக்குறிதான்.

எம்.எஸ்.சுப்புலட்சுமியையும் மிஞ்சிய குரலினிமை ‘பெண் குரல்கள் வாய்ப்பாட்டுக்கு ஏற்றவை அல்ல, காம்பீர்யம் மிக்க ஆண் குரல்களே பாடுவதற்கு ஏற்றவை’ என்பது எங்கள் தோழமைத் தந்தையும் மூத்த பத்திரிகையாளருமான சின்னக் குத்தூசி அவர்களின் தீர்மானகரமான கருத்து. அபூர்வமான, அதே நேரம் அபாரமான இசை ரசிகர் அவர்.

 வீணை, வயலின், புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகள் வாசிப்பதுதான் பெண்களுக்கு மிகப் பொருத்தம் என்பார் அவர். அந்தக் கருத்தில் எப்போதும் பிடிவாதமாகவும் இருப்பார். ராகங்கள் பற்றி இழை இழையாகப் பிரித்து விமர்சிப்பவர். எழுத்துப் பணி, நண்பர்கள் வருகை குறைந்திருக்கும் ஓய்வு நேரங்களில் பெரும்பாலும் இசையில் ஆழ்ந்து திளைப்பதும் சில நேரங்களில் பாடுவதும் அவரது பெரு விருப்பங்கள். இசை குறித்துப் பேசும்தோறும் தன்னை மறந்து அதில் லயித்து விடுபவர்.






அவரைச் சந்திக்கச் செல்லும் ஒவ்வொரு முறையும் இசை குறித்தும் இசைக் கலைஞர்கள் பற்றியும் நீண்ட நேரம் உரையாடுவோம். அற்புதமான பல இசைக்கலைஞர்களின் அதி அற்புதமான பாடல்கள் குறித்துப் பேசுவார். அவர் சொல்வதில் சில விஷயங்களில் எனக்கு மாற்றுக் கருத்து இருந்தபோதும் அவருடன் விவாதிக்க மாட்டேன். ஆனால், பெண் குரல்கள் பாடுவதற்கு ஏற்றவை அல்ல என்று அவர் தீவிரமாகப் பேசியபோது இந்த ‘விவாதிக்கா விரதம்’ ஒரு நாள் உடைந்து நொறுங்கித் தூள் தூளாகிப் போனது.

நான் அதற்கு மாறாகப் பல பெண் குரல்கள் பற்றியும் அவர்களின் பிரபலமான பாடல்களையும் குறிப்பிட்டு விவாதிப்பேன். குறிப்பாக எம்.எல்.வசந்தகுமாரி மற்றும் எம்.எஸ். சுப்புலட்சுமி பற்றி சிலாகித்துப் பேசுவேன். அத்தகைய நாட்களில் ஒருநாள் தன் பிடிவாதத்திலிருந்து கொஞ்சம் இறங்கி வந்தார். “எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசை மிகச் சிறப்பானதுதான். அதில் சந்தேகமில்லை. அவரது ‘காற்றினிலே வரும் கீதம்’ பாடல் இன்னைக்கும் நிக்குது. நாளைக்கும் நிக்கும். இசை இருக்கும் வரை நிக்கும். ஆனால், எம்.எஸ்.சுப்புலட்சுமியை விட மேலான, இனிமையான குரல் வளம் வசந்த கோகிலத்துக்கு உண்டு. அந்தம்மாஉடைய இசையும் பாடலும் அதை விடச் சிறப்பானது’ என்றார்.

அன்றைய உரையாடல் முழுவதும் வசந்த கோகிலம் மற்றும் அவருடைய பாடல்கள் குறித்ததாக இருந்தது. அவரின் ‘அந்த நாள் இனி வருமோ, சொல்லடி அம்பலப் பசுங்கிளியே’ என்ற பாடல் எவ்வளவு இனிமை வாய்ந்தது என்பதையும், சுத்தானந்த பாரதியாரின் அப்பாடல் இசைத்தட்டு அக்காலத்தில் எந்த அளவுக்குப் பிரபலமாக இருந்தது என்பது பற்றியும் நெக்குருகிப் பேசியதுடன், அப்பாடலின் சில வரிகளைப் பாடியும் காண்பித்தார்.

‘அப்படியானால் பெண்கள் பாடுவதற்கும் தகுதியானவர்கள் என்பதை ஒப்புக் கொள்றீங்கதானே சார்’ என்று அதையே நான் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தியதும், சிரித்தவாறே பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார். அவருடைய பரிந்துரையின் பேரில் அதன் பின் என்.சி. வசந்த கோகிலத்தின் பாடல்களைத் தேடித் தேடிக் கேட்டபொழுதுதான் அவருடைய குரலின் இனிமையையும் அபாரமான இசை ஞானத்தையும் குறைவற உணர முடிந்தது. எம் எஸ்.சுப்புலட்சுமி, என்.சி. வசந்தகோகிலம் இருவரில் யார் பாடுகிறார்கள் என்பதில் எளிய ரசிகர்களுக்கு அந்தக் காலத்தில் குழப்பம் இருந்ததும் மறுக்க முடியாத உண்மை. இருவரது பாடல்களையும் ஆழ்ந்து கேட்பவர்களால் மட்டுமே இதனை நன்கு உணர முடியும்; அவ்விருவர் குரல்களின் வேறுபாடும்  புரியும். அந்த வகையில் வசந்த கோகிலத்தின் இனிய குரலை எனக்கு அறிமுகப்படுத்தியவர் அய்யா சின்னக் குத்தூசி அவர்கள்தான்.

ஒருங்கிணையாத அபார இசை ஞானமும் நடிப்பும்  பாடத் தெரிந்தால் மட்டுமே நடிப்பதற்கு வாய்ப்பு என்றிருந்த காலத்தில் அபாரமான இசை
ஞானம் கொண்ட பலரும் திரைத்துறைக்குள் நுழைந்தாலும், நடிப்பிலும், இசையிலும் அனைவராலும் ஒருசேர ஜொலிக்க முடியவில்லை என்பதையும் திரை வரலாறு நன்கு வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறது.

அழகும் நடிப்பும் கூட அப்போது இரண்டாம் பட்சம்தான். ‘சகுந்தலை’, ‘உதயணன் வாசவதத்தா’ போன்ற படங்களில் ஜி.என்.பாலசுப்பிரமணியம் அருமையாகப் பாடியிருந்தாலும் நடிப்பு அவரை விட்டு சற்று விலகியே நின்றது. ஹொன்னப்ப பாகவதர், டி.ஆர்.ராஜகுமாரி நடித்த ‘சதி சுகன்யா’ படம் இப்போதும் தொலைக்காட்சிகளில் திரையிடப்படுகிறது.

ஹொன்னப்ப பாகவதரின் பாடலை ரசித்துக் கேட்கும் அளவு நடிப்பை ரசிக்க முடியவில்லை. மிக செயற்கையான நடிப்பையே பலரிடமும் காண முடிந்தது. எம்.எம்.தண்டபாணி தேசிகர், எம்.கே. தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, கே.ஆர்.ராமசாமி இவர்களில் கடைசி மூவர் மட்டுமே உச்சம் தொட்டவர்கள். மற்றொரு வெற்றியாளர் டி.ஆர்.மகாலிங்கம்.

பாகவதர் சிறை சென்றபோதும், அவருடைய மறைவுக்குப் பின்னரும் அவர் இல்லாத வெற்றிடத்தை நிறைவு செய்த பெருமைக்குச் சொந்தக்காரர். பெண்களில் எம்.எஸ்.சுப்புலட்சுமி, என்.சி.வசந்த கோகிலம், எம்.எல்.வசந்த குமாரி, பி.ஏ. பெரிய நாயகி இவர்கள் அனைவருமே நடிப்பதற்காக வந்தவர்கள்தான் என்றாலும், ஒரு கட்டத்தில் நடிப்பைக் கைவிட்டு இசைத்துறையில் மட்டும் முழுமையாகக் கவனம் குவித்து தமிழ் செவ்வியல் இசையில் தவிர்க்க முடியாத ஆளுமைகளாகக் காலம் கடந்தும் நிலைத்து நின்றவர்கள்.

பாடி நடித்துக் கொண்டிருந்த வேறு சில நடிகைகளும் கூட நடிப்பை மட்டுமே முதன்மைத் தொழிலாக ஏற்று, இரவல் குரலைப் பெற்றுப் பாடுபவர்களாக மாறினார்கள். இந்த வரிசையில் விதிவிலக்காக கே.பி.சுந்தராம்பாள், பி.பானுமதி மற்றும் எஸ்.வரலட்சுமி மூவரும் இறுதி வரையிலும் தங்கள் சொந்தக் குரலில் பாடியும் நடித்தும் வந்தவர்கள். இவர்கள் மூவருமே வித்தியாசமான குரலுக்குச் சொந்தக்காரர்களும் கூட.  

கேரளத்திலிருந்து செந்தமிழ் நாட்டுக்குப் பிரவேசம் வசந்த கோகிலம் 1919ல் கேரளத்தின் இரிஞ்ஞாலகுடாவில் பிறந்தவர். ஆனால் வளர்ந்ததெல்லாம் நாகப்பட்டினத்தில். அப்பா சந்திரசேகர அய்யர் ஒரு இசைக்கலைஞர். இவரது கடைக்குட்டி மகளான காமாட்சி, ஆம் !
அதுதான் வசந்த கோகிலத்தின் இயற்பெயர். திருவாரூர் வடம்போக்கித் தெருவில் 15 வயது வரை வாசம், அங்கு ஹரிகதை சொல்வதில் வல்லவரான ஜாலர் கோபாலய்யரிடம் சிறு வயதிலேயே சேர்ந்து முறைப்படி வாய்ப்பாட்டு பயின்றார்.

இயல்பிலேயே இசை ஞானமும் இனிமையான குரலும் வாய்க்கப் பெற்றிருந்ததால் வெகு விரைவில் சங்கீதம் அவர் குரலுக்குக் கட்டுப்பட்டது.
வசந்த கோகிலம் என்பதே இசைத் திறமையால் அவருக்கு வந்து சேர்ந்த பெயர்தான்! குயிலை ஒத்த இனிமையான குரல் வளம் பெற்றிருந்ததால் வைக்கப்பட்ட பெயர் அது. இறுதிவரை அப்பெயரே அவருக்கு நிலைத்தது. நாகப்பட்டினம் சந்திரசேகரய்யர் வசந்த கோகிலம்
என்பதே தலைப்பெழுத்தானது.

சென்னைப் பட்டணம் அளித்த ராஜபாட்டை

இசைத்துறையில் வெற்றி பெற விரும்புவோருக்கு அக்காலத்தில் சென்னை வாய்ப்புகளை வழங்கும் மேடையாக இருந்தது. சந்திர சேகரய்யரும் தனது மகளை அழைத்துக்கொண்டு 1936 ல் சென்னையை நோக்கிப் பயணமானார். வசந்த கோகிலம் சென்னையில் இசைப்பயிற்சிகள் மேற்கொண்டதுடன் கச்சேரிகளும் செய்தார். அவரது குரலினிமை தேனாகப் பரவி இசை ரசிகர்களை ஈர்த்தது. 1938ல் சென்னை மியூசிக் அகாடமியில் மைசூர் மகாராஜா தலைமையில் நடைபெற்ற இசைவிழாவில், ஓர் இசைப்போட்டி நடத்தப்பட்டது.

அதில் கலந்துகொண்டு பாடியவர்களில் முதல் பரிசு வசந்த கோகிலத்துக்கே கிடைத்தது. இனிமையான அந்தக் குரலுக்கு அகாடமியே செவி சாய்த்தது என்றும் சொல்லலாம். H.M.V. ரெக்கார்ட் நிறுவனம் இவர் பாடல்களைத் தனிப் பாடல்களாகப் பதிவு செய்து, அந்த இசைத்தட்டுகள் அமோகமாக விற்பனை ஆயின. ஆரம்பமே அவருக்கு ராஜபாட்டையாக அமைந்தது.

அந்நாட்களில் மிகப் பிரபலமான இசைக் கலைஞர்களைத் தங்கள் இல்லத் திருமணக் கச்சேரிகளில் பாட வைப்பது ஒரு சமூக அந்தஸ்து மிக்க செயலாகப் பார்க்கப்பட்டது. அப்படித்தான் 1939ல் திருமலைராயன் பட்டினம் கனகசபை முதலியார் என்ற பெரும் செல்வந்தர் வீட்டுத் திருமணத்தில் கச்சேரி செய்யும் வாய்ப்பு கோகிலத்தைத் தேடி வந்தது. இக் கச்சேரியைக் கேட்டவர்கள் மூலம் சினிமாவில் பாடி நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த 18 வயது இசைக்குயில் அடுத்தடுத்த உயரங்களை நோக்கிப் பறந்து சென்றது.

திரையுலகு அளித்த கௌரவம்

1940ல் டிரினிடி தியேட்டர்ஸ் நிறுவனத்தார் ‘சந்திரகுப்த சாணக்யா’ என்ற படத்தைத் தயாரித்தனர். அப்படத்தில் மலையரசன் மகள் சாயாவாக, சந்திரகுப்தன் மேல் காதல் கொள்ளும் பெண்ணாக வசந்த கோகிலம் நடித்தார். ‘சதி லீலாவதி’ படத்தின் இயக்குநர் எல்லீஸ் ஆர்.டங்கனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இளம் வழக்கறிஞர் சி.கே.சச்சி என்ற சதாசிவம் இப்படத்தின் இயக்குநர். படம் ஓடியதோ இல்லையோ கோகிலத்தின் பாடல்கள் ரசிகர்களைச் சுண்டி இழுத்தன. இவரது குரலினிமையே அடுத்தடுத்து இவருக்குப் பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் அளித்தது.
 

1941 ல் ‘வேணு கானம்’ என்று ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் போடப்பட்டது. படத்தின் பெயரே கானமாக இருக்கும்போது பாடல்கள் மற்றும் இசையின் உத்தரவாதம் பற்றி கேட்க வேண்டுமா? அத்தனையும் கானாமிர்தம். கவிஞர் கம்பதாசன் பாடல்களுடன் கோபால கிருஷ்ண பாரதியின் மிகப் பிரசித்தி பெற்ற கீர்த்தனையான ‘எப்போ வருவாரோ’ என வசந்த கோகிலத்தின் குரலில் பாடல்கள் அனைத்தும் இனிமை சேர்க்க, படம் பெரு வெற்றி பெற்றது. அப்போதைய பிரபல இயக்குநர் முருகதாஸா படத்தை இயக்க, கதாநாயகன் வி.வி.சடகோபன்.

இவரும் இப்படம் மற்றும் ‘மதன காமராஜன்’, அதிசயம், நவயுவன் என மிகக் குறைந்த எண்ணிக்கையிலான படங்கள் தவிர்த்து வேறு படங்களில் தொடர்ந்து நடிக்கவில்லை. கோபால கிருஷ்ண பாரதியின் பெரும்பாலான பாடல்களையும் இவரே பாடியிருக்கிறார்.


1942ல் மீண்டும் சி.கே.சச்சியின் இயக்கத்தில் ‘கங்காவதார்’ என்றொரு படம், கங்கை வேடம் வசந்த கோகிலத்துக்கு. இந்தப் படமும் வெற்றியை எட்டியது. இயக்குநர் சச்சி என்ற சதாசிவமும் வசந்த கோகிலமும் இணைந்து வாழ்ந்ததாகவும் சில பழைய பத்திரிகைகள் தகவல்களைச் சொல்கின்றன. ஆனால், இவர்களின் இந்த வாழ்க்கை நீடித்து நிலைக்காமல் போனது கோகிலத்தின் அதிர்ஷ்டமா துரதிருஷ்டமா எனத் தெரியவில்லை.

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கையில் அவர் கணவர் சதாசிவம் அவரது உயர்வுக்கும் முன்னேற்றத்துக்கும் பின்னணியாக இருந்ததைப் போல, வசந்த கோகிலத்தின் வாழ்க்கையில் சச்சி என்ற சதாசிவம் ஒரு ஏணியாக மாறாமல் போனது வசந்த கோகிலத்துக்குப் பெரும் பின்னடைவே.

ஹரிதாஸின் பத்தினியும் நாரதர் வேடங்களும்  

1944ல் வெளிவந்து மூன்று தீபாவளிகளைக் கண்ட ‘ஹரிதாஸ்’ படத்தில் பாகவதரின் மனைவி பாத்திரம் கோகிலத்துக்கு. இதில் நடித்த அனைவருக்குமே இது ஒரு பிளாக் பஸ்டர் படம் என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமுமில்லை. பாகவதரின் குரலுக்கு இணையாக வசந்த கோகிலம் பாடிய ‘கதிரவன் உதயம் கண்டே’, ’எனது மனம் துள்ளி விளையாடுதே’, ‘எனது உயிர் நாதன்’, ‘கண்ணா வா’ என நான்கு பாடல்கள் உண்டு.

ஆனால், பாகவதரின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்ததைப் போல இவை அதிகம் அறியப்படவில்லை. இப்போதும் அந்தப் படத்தைப் பார்க்கும்போது அவரது குரலினிமை சொக்க வைக்கிறது. பாடல் மட்டுமல்லாமல் துடுக்குத்தனமாகப் பேசுவது, தாசி ரம்பா (டி.ஆர்.ராஜகுமாரி) வுக்கும் அவரது குழுவினருக்கும் பிரம்படி கொடுத்து வெளுப்பது என இவர் நடிப்பிலும் குறையேதும் வைக்கவில்லை.

1946ல் ‘குண்டலகேசி’ மற்றும் ‘வால்மீகி’

1950ல் ‘கிருஷ்ண விஜயம்’ என மூன்று படங்கள். ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசி கதைதான். கதாநாயகி கே.எல்.வி.வசந்தா, இரண்டாவது கதாநாயகி வேடம் கோகிலத்துக்கு. ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பான ’கிருஷ்ண விஜயம்’ மிகப் பெரிய வெற்றிப்படம்.

நந்தனார், கிருஷ்ணன், நாரதர் போன்ற ஆண் வேடங்களை எல்லாம் முறையே கே.பி.சுந்தராம்பாள் (நந்தனார்), எஸ்.டி.சுப்புலட்சுமி (உஷா பரிணயம்), எம்.எஸ்.சுப்பு லட்சுமி (சாவித்திரி), குமாரி ருக்மணி போன்ற அக்கால கதாநாயகிகளான உச்ச நட்சத்திரங்களே ஏற்று நடித்திருக்கிறார்கள்.


அதன் தொடர்ச்சியாக வசந்த கோகிலம் கிருஷ்ண விஜயம், வால்மீகி இரு படங்களிலும் நாரதர் வேடம் ஏற்று நடித்தார். இயக்கம் சுந்தர்லால் நட்கர்னி. பாடல்கள் அனைத்தும் பாபநாசம் சிவன் எழுதியவை. ’இசைச்சித்தர்’ சிதம்பரம் ஜெயராமன் இசையமைக்க பாடல் களுக்காகவே இப்படம் பல வாரங்கள் ஓடியிருக்கிறது. அதில், கோகிலம் பாடிய ‘கருணாநிதி மாதவா’ என்றொரு பாடல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் தயவால் வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பப்பட்ட ஒரு பாடல்.   

‘வால்மீகி’ என்ற படத்தையும் ஜூபிடர் பிக்சர்ஸ்தான் தயாரித்தது. இப்படத்திலும் நாரதர் வேடமே இவருக்கு வாய்த்தது. இப்படம் எம்.கே.தியாகராஜ பாகவதர் - யு.ஆர்.ஜீவரத்தினம் இணையாக நடிக்க உருவாக்கப்பட்டது. அந்த நேரத்தில் பாகவதர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிறை செல்ல நேர்ந்ததால், ஹொன்னப்ப பாகவதரைக் கதாநாயகனாக்கிப் படம் எடுத்து முடிக்கப்பட்டது.

ஆனால், மக்களிடம் தியாகராஜ பாகவதருக்கு இருந்த புகழும் கவர்ச்சியும் செல்வாக்கும் ஹொன்னப்ப பாகவதரிடம் இல்லாமல் போனதால் எதிர்பார்த்த வெற்றியைப் படம் ஈட்டித் தரவில்லை.


ஆரம்பத்திலேயே நின்று போன ஆண்டாள்

வசந்த கோகிலத்தின் இசைத்திறனுக்காகவே ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரின் கூட்டு நிறுவனமான ‘பிரகதி ஸ்டுடியோ’ ‘ஆண்டாள்’ என்ற படத்தை ஏராளமான பாடல்களுடன் தயாரிக்க முடிவு செய்து, அதன் ஆரம்பக் கட்ட வேலைகளும் முழு மூச்சாய்த் தொடங்கப்பட்டன. ‘ஹிந்து’ ஆங்கில நாளேட்டில் கலரில் விளம்பரம் செய்து பிரமாதப்படுத்தினார்கள். இந்த விளம்பரம் பற்றியே அப்போது பல பத்திரிகைகளும் செய்திகளை வெளியிட்டன.

ஆனால், துரதிருஷ்டவசமாக பிரகதி ஸ்டுடியோ பங்குதாரர்கள் பிரிய நேர்ந்ததில் இந்தப் படத் தயாரிப்புப் பணி  பாதியிலேயே நிறுத்தப்பட்டு, மந்தைவெளிப்பாக்கத்தில் இருந்த பிரகதி ஸ்டுடியோவும் விற்கப்பட்டது. அதன் பின்னர் வடபழனியில் தோல் பதனிடும் தொழிற்சாலை நடத்தி வந்த இஸ்லாமியர் ஒருவரிடமிருந்து  இடம் வாங்கி ஸ்டுடியோ ஆரம்பித்து நடத்தும் வேலைகளில் செட்டியார் மும்முரமாய் இறங்கியதால் இப்
படம் கைவிடப்பட்டது. திட்டமிட்டபடி ‘ஆண்டாள்’ படம் தயாரிக்கப்பட்டு வெளி வந்திருந்தால், குறைந்தபட்சம் 15 அல்லது 16 பாடல்களுடன் வசந்த கோகிலம் புகழின் உச்சிக்கே போயிருப்பார். ஆனால், காலமும் நேரமும் அவருக்கு ஒத்துழைக்கவில்லை, உறுதுணையாகவும் இல்லை.

சந்திரகுப்த சாணக்யா, வேணு கானம், கங்காவதார், ஹரிதாஸ், குண்டலகேசி, வால்மீகி, கிருஷ்ண விஜயம் என 7 படங்களில் மட்டுமே என்.சி.வசந்த கோகிலம் நடித்துள்ளார். 1940ல் தொடங்கிய திரைப் பயணம் 1950ல் முடிவுக்கு வந்தது.  

முழு நேர இசைக்கலைஞராக மட்டுமே சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பம், தோல்வியால் மேற்கொண்டு திரையுலக வாழ்வைத் தொடர விரும்பாத கோகிலம், தன் திறமைகள் அனைத்தையும் கர்நாடக இசையிலேயே செலுத்த ஆரம்பித்தார். கச்சேரிகள், இசைத்தட்டுகள் என
அத்துறையில் பிஸியானார்.

1945ல் கும்பகோணத்தில் நடைபெற்ற கலை முன்னேற்ற மாநாட்டில் கலந்து கொண்டு பாடியவருக்கு ‘மதுரகீத வாணி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. வழங்கியவர் இசைமேதை டைகர் வரதாச்சாரியார். சென்னை தமிழிசைச் சங்கம், நெல்லை சங்கீத சபா என்று தொடர்ச்சியாகக் கச்சேரிகள். 1942லிருந்து தன் இறுதிக் காலமான 1951 வரை ஒவ்வோராண்டும் தவறாமல் திருவையாறு தியாகராஜ ஆராதனை விழாக்களிலும் பங்கேற்றுப் பாடி வந்திருக்கிறார்.

‘ஏன் பள்ளி கொண்டீரய்யா?’, ‘நீ தய ராதா’, ‘குயிலோசை கேட்குதம்மா’, ‘அருள் புரிவாய்’, ‘நித்திரையில் வந்து நெஞ்சில் இடம் கொண்ட உத்தமன் யாரோடி தோழி’, போன்ற பாடல்களை இனிமை கொஞ்சும் இளமை மாறாத அவரின் குரலில் இப்போது கேட்டாலும் மனம் மயங்குகிறது. யுடியூப் என்னும் அமுதசுரபி இந்தப் புதையல்களை எல்லாம் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.

மதுரையிலிருந்து எம்.எஸ். சுப்புலட்சுமியை சென்னைக்கு அழைத்து வந்து, அவரது குரல் உலகம் முழுவதும் பரவி புகழடையச் செய்ததில் சதாசிவத்துக்கும் அவரது செல்வாக்குக்கும் பெரும் பங்கு உண்டு.

ஆனால், அதே காலத்தில் அவரை விடச் சிறப்பான குரல் வளமும் இசை நுட்பங்களும் கொண்டிருந்த வசந்த கோகிலத்துக்கு வாய்ப்புகள் கிடைத்திருந்தாலும் கூட, இசையில் அவரது சாதனைகள் தொடர்ந்தாலும் மிகச் சிறு வயதிலேயே காச நோய்த் தாக்குதலுக்கு ஆளானார். சிகிச்சைகள் பலனளிக்காமல் வசந்த கோகிலம் என்ற மேதைமை மிக்க இசைக்குயில் 32 வயதில் 1951ல் உலகைத் துறந்து பறந்து போனது.


 இளம் வயதிலேயே பெரும் வெற்றி பெற்ற கலை ஆளுமைகளைக் காலதேவன் இரக்கமில்லாமல் கொள்ளை கொண்டு போவது மிகவும் துயரமானது. மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், இசைச் சக்கரவர்த்தி எஸ்.ஜி.கிட்டப்பா மற்றும் முதல் இரு மொழி (கன்னடம், தமிழ்) நட்சத்திரமாகப் பிரகாசித்த அஸ்வத்தம்மா போன்று வசந்த கோகிலமும் மிக இளம் வயதிலேயே மறைந்தார்.

ஆனால் இவரின் குரல் என்றும் இசைவானில் ரீங்கரித்துக்கொண்டே இருக்கும். தான் சம்பாதித்த சொத்துக்களை எல்லாம் காசநோய் மருத்துவமனைக்கே வசந்த கோகிலம் எழுதிக் கொடுத்து விட்டார் என்பது ஆறுதலளிக்கும் செய்தி.

சவுந்­த­ர­ரா­ஜ­னுக்கு ஒரு மரி­யாதை. அவ­ரு­டைய குரல் இனி­மை­யை­யும் பாட்­டை­யும் கேட்டு ஒரு மயக்­கம், ஆச்­ச­ரி­யம். இவர் பாடும் படத்­தில் நாமும் பாடப்­போ­கி­றோம் என்ற பிர­மிப்பு.

வசந்­த­கோ­கி­லத்­திற்கு ஏறக்­கு­றைய எம்.எஸ்.சுப்­பு­லட்­சு­மி­யைப் போன்ற சாரீ­ரம். மேல் ஸ்தாயிக்கு ராக்­கெட்டு போல் சென்று மேல் ‘கா’விலோ அல்­லது ‘மா’விலோ அவர் கார்வை கொடுத்து நிற்­கும்­போது சவந்­த­ர­ரா­ஜ­னுக்கு மெய்­சி­லிர்க்­கும். குயி­லைப் போன்ற இனி­மை­யும், ஓடும் நதி­யைப் போன்ற வேக­மும், உணர்ச்­சிப்­பெ­ருக்­கும் வசந்­த­கோ­கி­லத்­தின் பாட்­டில் பொங்கி வரும்.

‘கிருஷ்ண விஜ­ய’த்­தில்  ‘பொறு­மைக் கட­லா­கிய பூமா­தேவி’ என்று தொடங்­கும் பாடலை எழுதி, பல வசீ­க­ர­மான ராகங்­க­ளில் அமைத்­தார் பாப­நா­சம் சிவன்.   அதற்­குத் தகுந்த பின்­னணி இசையை எஸ்.எம். சுப்­பையா நாயுடு தயார் செய்­தார். பாடலை பாப­நா­சம் சிவ­னி­டம் கற்று ஒத்­திகை பார்த்­தார் வசந்­த­கோ­கி­லம். அவர் பாடிய போது ஒலிப்­ப­தி­வா­ளர் கோவிந்­த­சா­மிக்கு சந்­தோ­ஷம் தாங்­க­வில்லை...வசந்­த­கோ­கி­ லத்­தின் நாதம், மின்­னல் வெள்­ளம் போல் காற்­றில் வந்து பிலி­மில் பதி­வா­ன­போது பாத­ர­சத்­தைக் கையில் அள்­ளு­வ­து­போல் இருந்­தது அவ­ருக்கு. கண்­ணன் பிறப்­புக்கு இட்­டுச் செல்­லும் சம்­ப­வங்­களை நல்ல பாரம்­ப­ரி­ய­மான இசை­யில் உன்­ன­த­மான குர­லில் பதிவு செய்­து­விட்ட திருப்தி நட்­கர்­னி­யின் முகத்­தில் தெரிந்­தது.

கண்­ணன் பிறந்­த­வு­டன், சிறை­யி­லே யே நார­தர் ஒரு துதி பாடு­வ­தா­கக் காட்சி அமைத்­தி­ருந்­தார்

நட்­கர்னி.

‘கரு­ணா­நிதே மாதவா, ஜெய கல்­யாண குண மாதவா ...’ என்று  நாமா­வ­ளி­யா­கப் பாடலை

எழு­தி­னார் பாப­நா­சம் சிவன். ஏ.எஸ்.ஏ. சாமி­யின் இயக்­கத்­தில் உரு­வாகி வந்த ஜூபி­ட­ரின் ‘விஜ­ய­கு­மா­ரி’­­யின் இசை­ய­மைப்­பில் பணி­யாற்றி வந்தமுதல் வாய்ப்பு கிடைக்க டி.எம்.எஸ்., பட்டபாடு!

 ராயல் டாக்­கீஸ் பங்­க­ளா­வில் தங்கி திரைப்­பட வாய்ப்­பு­களை டி.எம்.சவுந்­த­ர­ரா­ஜன் எதிர்­பார்த்­தி­ருந்த போது, ராயல் டாக்­கீ­ஸின் ஒரு ஆஸ்­தான இயக்­கு­ந­ராக இருந்­த­வர் திரு. சுந்­தர்­ராவ் நட்­கர்னி.

நட்­கர்­னியை அணு­கி­னால் தனக்­குப் பாடும் வாய்ப்பு கிடைக்­கும் என்று  சவுந்­த­ர­ரா­ஜ­னுக்கு உள்­ளூற ஒரு பொறி தட்­டி­யது. சென்­டி­ரல் ஸ்டூடி­யோ­விற்­குச் சென்று அவ­ருக்கு ‘வணக்­கம்’ சொல்­வ­தையே ஒரு வேலை­யா­கக் கொண்­டி­ருந்­தார்.

மவு­னப்­ப­டக் காலத்­தி­லேயே திரை உல­கில் நுழைந்த மைசூர்­கா­ர­ரான நட்­கர்னி, தியா­க­ராஜ பாக­வ­த­ரும் டி.ஆர்.ராஜ­கு­மா­ரி­யும் நடித்த ‘ஹரி­தாஸ்’ திரைப்­ப­டத்­தின் மூலம் வெற்­றி­யின் சிக­ரத்தை அடைந்­தி­ருந்­தார்.

கோவை சென்­டி­ரல் ஸ்டூடி­யோ­வில், ராயல் டாக்­கீ­ஸுக்­காக ‘சுதர்­சன்’, ஜூபி­டர் பிலிம்ஸ் சார்­பில் ‘வால்­மீகி’, ‘கிருஷ்ண விஜ­யம்’ போன்ற படங்­களை அவர் இயக்­கிக்­கொண்­டி­ருந்­தார்.

 சென்­டி­ரல் ஸ்டூடியோ வளா­கத்­தி­லேயே நட்­கர்­னிக்கு வீடு அளிக்­கப்­பட்­டி­ருந்­தது. வீட்­டில் நட்­கர்­னி­யின் மனை­வி­யும் அவ­ரு­டைய இளம் பிள்ளை மோக­னும் இருந்­தார்­கள்.

மோகன் தத்­தித் தத்தி  தமிழ் பேசு­வ­தைக் கேட்க ஆனந்­த­மாக இருந்­தது சவுந்­த­ர­ரா­ஜ­னுக்கு. நட்­கர்னி படப்­பி­டிப்­பில் மூழ்­கி­யி­ருப்­பார். வீட்­டில் மோக­னுக்­குப் பல கதை­களை சவுந்­த­ர­ரா­ஜன் சொல்­லிக்­கொண்­டி­ருந்­தார். சத்­தி­ய­வான் சாவித்­திரி கதை­யும்,

பல்­வேறு தவ­று­க­ளுக்கு எமன் கொடுக்­கும் தண்­ட­னை­க­ளை­யும் சவுந்­த­ர­ரா­ஜன் விஸ்­தா­ர­மா­கச் சொல்ல, கண்­கொட்­டா­மல் கேட்­டுக்­கொண்­டி­ருப்­பான் மோகன்.

சில நாட்­கள் இட்லி, தோசைக்கு மோக­னின் அம்மா மாவ­ரைக்­கும் போது, ‘அண்ணி! நீங்க வேற வேலை பாருங்க...நான் அரைச்­சுத் தர்­றேன்’  என்று சவுந்­த­ர­ரா­ஜன்  கோதா­வில் இறங்­கு­வது உண்டு.

‘‘பூப்­போல மாவு அரைச்­சி­ருக்­கியே,’’ என்று பாராட்­டு­வார் நட்­கர்­னி­யின் மனைவி.

‘‘அம்மா... நான் வறு­மை­யில் வளர்ந்­த­வன். எங்­கம்­மா­விற்கு இப்­படி எத்­த­னையோ உத­வி­கள் பண்­ணி­யி­ருக்­கேன். அந்­தப் பழக்­கத்­திலே என்­னால செய்ய முடி­யுது,’’ என்று டி.எம்.சவுந்­த­ர­ரா­ஜன் பதில் சொல்­வார்.

வெறும் பாராட்­டோடு விட­மாட்­டார் நட்­கர்­னி­யின் மனைவி. அடுத்த நாள் அவர்­கள் வீட்­டுக்கு டி.எம்.சவுந்­த­ர­ரா­ஜன் போகும் போது இட்லி, தோசை என்று சூடான பல­கா­ரம் கிடைக்­கும்.

இட்­லியை கிள்ளி சட்­னி­யில் தொட்டு வாயில் இடு­வ­தற்கு முன் சவுந்­த­ர­ரா­ஜன் தனது உள்­ளக்­க­ருத்தை வெளி­யி­டு­வார். ‘‘நான் நல்லா பாடு­வேன். ஐயா ‘கிருஷ்ண விஜ­யம்’னு ஒரு படம் எடுத்­துக்­கிட்­டி­ருக்­காரு. அவர்­தான் டைரக்ட் பண்­றாரு. அதிேல பாட­ற­துக்கு மியூ­சிக் டைரக்­டர் சுப்­பையா அண்­ணன்­கிட்ட சொன்­னா­ருன்னா  எனக்கு ஒரு சான்ஸ் கிடைக்­கும். நீங்­க­தான் ஐயா­கிட்ட சொல்­ல­ணும்மா’’.

இதைத் தொடர்ந்து, நட்­கர்­னி­யின் மனைவி

டி.எம்.சவுந்­த­ர­ரா­ஜ­னுக்கு சிபா­ரிசு செய்ய ஆரம்­பித்­து­விட்­டார்.

இதற்­குள், டி.எம்.சவுந்­த­ர­ரா­ஜன் சொன்ன புரா­ணக் கதை­களை மோகன் தனது மழலை மொழி­யில் நட்­கர்­னிக்கே சொல்­லத் தொடங்­கி­விட்­டான்!

ஹொன்­னப்பா பாக­வ­தர் ‘வால்­மீகி’ படத்­திற்­கா­கப் பாடிய பாடல்­களை ஒரு நாள் கம்­பெனி வீட்­டில் போட்­டுப் பார்த்­துக் கொண்­டி­ருந்­தார்­கள்.

‘ஸ்ரீவை­குண்­ட­பதே’ என்று தொடங்கி, ஒன்­பது ராகங்­க­ளில் ராமா­ய­ணக் கதை முழங்­கிக்­கொண்­டி ­ருந்­தது. பின்­னர்,  ‘பக­வான் அவ­த­ரிப்­பார்’ என்று ஹொன்­னப்­பா­வின் குரல் கர­ஹ­ரப்­பி­ரியா ராகத்­தைக் கணீ­ரென்று இழைத்­துக் கொண்­டி­ருந்­தது.

அப்­போது நட்­கர்னி சுப்­பையா நாயு­டு­வி­டம் சொன்­னார், ‘‘டி.எம். சவுந்­த­ர­ரா­ஜன் நல்லா பாடு­றாரு. அவ­ருக்கு ரெண்டு பாட்­டுக் கொடுங்க’’.

‘‘நீங்க சொன்னா கொடுத்­தி­ட­லாம்,’’  என்று

சுப்­பை­யா­வும் சொல்­லி­விட்­டார்.

சுப்­பை­யா­வி­டம் அப்­போது துரு­துரு என்­றொரு உத­வி­யா­ளர் இருந்­தார். அவர் ஆர்­மோ­னி­யம் வாசிப்­ப­வர். பாட்டை சுப்­பையா நாயுடு சொல்­லிக்­கொ­டுத்­து­விட்­டுப் போய்­வி­டு­வார். பாட­கர்­க­ளுக்கு அந்த உத­வி­யா­ளர் ஆர்­மோ­னி­யத்­தில் பாடலை வாசித்­துக் காண்­பிப்­பார். இந்த வேலை முடிந்­த­வு­டன்  உடனே தன் சொந்த வேலைக்­குத் திரும்­பி­வி­டு­வார். இது இவ­ரு­டைய சுபா­வமோ என்று நினைப்­பார் டி.எம்.சவுந்­த­ர­ரா­ஜன்!

ரிக்­கார்­டிங் ஹாலுக்கு ஒரு பக்­கத்­தில் திரை போட்­டி­ருப்­பார்­கள். அது­தான் ஒத்­திகை செய்­கிற இடம். சில நேரங்­க­ளில் அங்கு சென்று பார்த்­தால் அந்த இளை­ஞர் ஆர்­மோ­னி­யத்­தில் இந்­திப் பாடல்­களை வாசித்­த­படி பாடிக் கொண்­டி­ருப்­பார்! எப்­ப­டி­யா­வது வெற்றி அடை­ய­வேண்­டும் என்ற தாகத்­து­டன், தன் லட்­சி­யத்­தி­லும் பயிற்­சி­யி­லும் குறி­யாக இருந்த அந்த இளை­ஞ­ரின் பெயர் எம்.எஸ். விஸ்­வ­நா­தன் என்­றார்­கள்.

ஜூபி­டர் பிக்­சர்­ஸார் எடுத்­துக்­கொண்­டி­ருந்த படங்­க­ளில் ‘கிருஷ்ண விஜ­யம்’ மிக­வே­க­மாக வளர்ந்­தது. தந்­தி­ரக் காட்­சி­க­ளும், வித­வி­த­மான பாடல்­க­ளும் நட­னங்­க­ளும் நிறைந்த  பதி­னைந்­தரை ரீல் படம் அது. குழந்­தைக் கண்­ண­னின் கதை­யை­யும்,  பின்­னர் நிகழ்ந்த ராதை­யு­ட­னான காதல் லீலை­க­ளை­யும் அதைத் தொடர்ந்த கம்ஸ சாணூர அரக்­கர்­க­ளின் சம்­ஹா­ரத்­தை­யும் பட­மாக்கி வந்­தார்­கள். திரைக்­கதை,  படத்­தொ­குப்பு, இயக்­கம் ஆகி­யவை எல்­லாம் நட்­கர்­னி­யின்  பொறுப்­பி­லி­ருந்­தன.

 மூன்று நீண்ட ராக­மா­லி­கை­கள் உட்­பட, படத்­தில் 15 பாடல்­கள் இடம்­பெ­ற­வி­ருந்­தன.  பால­கி­ருஷ்­ண­னாக ஏ.எல்.ராக­வன் மற்­றும் மூன்று  ‘மாஸ்­டர்’ நடி­கர்­கள் நடித்­தார்­கள். கிருஷ்­ண­னாக நர­சிம்ம பாரதி,   நார­த­ராக, கர்­நா­டக சங்­கீத மேதை டைகர் வர­தாச்­சா­ரி­யா

­ரி­டம் மது­ர­கீ­த­வாணி பட்­டம் வாங்­கிய என்.சி. வசந்­த­கோ­கி­லம், பாடல்­க­ளுக்­குப் பாப­நா­சம் சிவன், சுந்­தர வாத்­தி­யார், காமாட்­சி­சுந்­த­ரம், பூமி­பா­ல­க­ தாஸ்,    இசைக்கு எஸ்.எம்.

சுப்­பையா நாயுடு, சி.எஸ்.ஜெய­ரா­மன், நட­னத்­திற்கு லலிதா, பத்­மினி என்று பல பிர­ப­லக் கலை­ஞர்­க­ளின் கூட்­டு­ற­வால் பல ஜன­ரஞ்­சக அம்­சங்­கள் நிறைந்த பட­மாக ‘கிருஷ்ண விஜ­யம்’ உரு­வாகி வந்­தது.

நார­தர் வேடத்தை வசந்­த­கோ­கி­லம் ஏற்­றி­ருந்­தார். சுந்­தர்­ராவ் நட்­கர்­னி­யின் இயக்­கத்­தில் அமோக வெற்­றி­ய­டைந்த ‘ஹரி­தா’­­ஸில் பாக­வ­த­ரின் ஜோடி­யாக நடித்­த­வர் ஆயிற்றே அவர்! பாக­வ­த­ரு­டன் நடித்த வசந்­த­கோ­கி­லத்­தைப் பார்க்­கும் போது  சிதம்­ப­ரம் ஜெய­ரா­மன், இந்­தப் பாட­லுக்கு அமீர் கல்­யாணி என்ற அழ­கான ராகத்­தில் மெட்­ட­மைத்­தார். மெட்டை மிகச் சுல­ப­மா­கப் புரிந்­து­கொண்­டா­லும் நன்­றாக பயிற்சி செய்­த­பின் பதிவு செய்­தார் வசந்­த­கோ­கி­லம்.

வசந்­த­கோ­கி­லத்­தின் குர­லைப் பயன்­ப­டுத்தி கண்­ணன் கதை­யு­டன் தொடர்­பு­டைய மூன்று பாடல்­களை வாங்­கி­விட்ட நட்­கர்னி...மிக அழ­கான இன்­னொரு பாடல் கட்­டத்தை திரைக்­க­தை­யில் கற்­பனை செய்­தார். கண்­ண­னின் விஷ­ம ங்­கள் தாள­மு­டி­யா­மல் கோபி­யர்­கள் யசோ­தை­யி­டம் வந்து முறை­யி­டும் காட்சி அது.‘என்­னடி அநி­யா­யம் இது? ஏனென்று கேட்­ப­தில்­லையா?’ என்று ஒவ்­வொரு கோபி­கை­யாக வந்து முறை­யி­டும் பாடல் கன­கச்­சி­த­மாக அமைந்­து­விட்­டது.

இந்­தப் பாட­லில் முக்­கிய கோபி­கை­க­ளாக நடிக்­கப்­போ­கும் லலிதா, பத்­மி­னி­யி­ட­மி­ருந்து நல்ல அபி­ந­யங்­களை வாங்கி விட­வேண்­டும்... நடன அமைப்­பா­ளர்­க­ளான குமா­ரி­ட­மும், தங்­க­ரா­ஜி­ட­மும் இந்­தப் பாட­லைக் குறித்து விவா­திக்க வேண்­டும் என்று மன­தில் குறித்­துக் கொண்­டி­ருந்­தார் நட்­கர்னி.

வளர்ந்த கிருஷ்­ண­னாக, அதா­வது ராதா­கி­ருஷ்­ண­னாக நர­சிம்ம பாரதி நடிக்­க­வி­ருந்­தார். நர­சிம்­ம­பா­ரதி பாடு­வ­தாக அமைந்த பாடல்­களை சவுந்­த­ர­ரா­ஜ­னுக்­குத் தர­லாம் என்று நட்­கர்­னி­யும் எஸ்.எஸ்.சுப்­பை­யா­யும் முடிவு செய்­தி­ருந்­தார்­கள். மகா­பெ­ரிய இசை­வா­ணர்­க­ளு­டன் தயா­ரிப்­பில் ஈடு­பட்­டி­ருக்­கும் நட்­கர்­னிக்கு நமக்­குக் கொடுத்த வாக்கு நினை­வில் இருக்­குமா?  எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு இடையே சவுந்­த­ர­ரா­ஜ­னுக்கு பய­மும் இருந்­தது. வசந்­த­கோ­கி­லம் போன்ற உன்­ன­த­மான பாட­கி­கள் பங்­கு­பெ­றும் படத்­தில் நமக்­கும் வாய்ப்பு கிடைத்து நாம் பரி­ம­ளிக்­க­வும் வேண்­டுமே என்ற அச்­ச­மும் இதில் கலந்­தி­ருந்­தது.

சவுந்­த­ர­ரா­ஜ­னின் குர­லும் பாணி­யும் தியா­க­ராஜ பாக­வ­தரை ஒத்­தி­ருந்­த­தால், பாக­வ­தர் பாட­லொன்­றின் மெட்­டி­லேயே, பழைய பாட­லின் வரி­க­ளின் சாய­லி­லேயே பாடல்  அமைந்­தால் நன்­றாக இரு­க­கும் என்­பது  நட்­கர்­னி­யின் எண்­ணம். அந்­தப் பாட­லில் பல தந்­தி­ரக்­காட்­சி­கள் அமைத்து அசத்­த­வேண்­டும் என்று நட்­கர்னி முடி­வு­செய்­தி­ருந்­தார்.

பிறகு, ‘ராதே உனக்­குக் கோபம் ஆகா­தடி’ என்று தியா­க­ராஜ பாக­வ­தர் பாடி ஹிட்­டான ‘சிந்­தா­ம­ணி’ப் படப்­பா­டலை, ‘ ராதே நீ என்­னை­விட்டு ஓடா­தேடி’ என்று சற்று மாற்றி எழுதி, சவுந்­த­ர­ரா­ஜன் குர­லில் பதிவு செய்­தார்­கள்.

ஆனால் பாக­வ­தர் பாடி­ய­தற்­கும் டி.எம்.எஸ். பாடி­ய­தற்­கும் ஒரு வித்­தி­யா­சம் இருந்­தது. பாக­வ­தர் தன்­னு­டைய குர­லின் வாகிற்கு ஏற்ப நாலு கட்டை சுரு­தி­யில் பாடி­யி­ருந்­தார். அவ­ரை­விட பேஸ் குரல் கொண்ட சவுந்­த­ர­ரா­ஜன் இரண்­டரை கட்­டை­யில் பாடி­னார். பாடலை கேட்­ட­வர்­கள் பாக­வ­த­ரைக் காணோமே என்­றார்­கள்.   படப்­பி­டிப்­பும் முடிந்­து­ விட்­டது. என்ன செய்­வது? படத்­தைப் போட்­டுப் பார்த்து, இரண்­ட­ரைக் கட்­டைக்கு மத்­தி­யம சுரு­தி­யான ஐந்­த­ரைக் கட்­டை­யில் பாடலை  சவுந்­த­ர­ரா­ஜன் பாட, மீண்­டும் பதிவு செய்­தார்­கள். ‘‘இப்­போது பாக­த­வர் வந்­து­விட்­டார்,’’ என்­றார்­கள் எல்­லோ­ரும்!

இந்த வகை­யில் தன்­னு­டைய முன்­னோ­டிப் பாட­க­ரான பாக­வ­தரை நினை­வு­ப­டுத்­தி­ய­படி

சவுந்­த­ர­ரா­ஜன் சினி­மா ­விற்­குள் நுழைந்­தார். ஒரு கண்­ணன்

பாடு­வ­தா­க­வும், நான்கு வேறு கண்­ணன்­கள் வெவ்­வேறு வாத்­தி­யங்­கள் வாசிப்­ப­தா­க­வும் தந்­தி­ரக்­காட்சி முறை­யில் டி.எம்.எஸ். பாடிய முதல் பாடல் வெளி ­வந்­தது. வரப்­போ­கும் டி.எம்.எஸ்.யுகத்­திற்கு இந்­தப் பாடல் ஒரு கட்­டி­ய­மாக அமைந்­தது.


என். சி. வசந்தகோகிலம் என அழைக்கப்படும் நாகப்பட்டினம் சந்திரசேகரன் வசந்தகோகிலம் (1919 - 7 நவம்பர் 1951) கருநாடக இசைக் கலைஞரும், பாடகியும், நடிகையும் ஆவார். இந்திய விடுதலைக்குப் பின்னர் கவியோகி சுத்தானந்த பாரதியாரின் பாடல்களைப் பிரபலமாக்கியவர். இவர் 1951 இல் காச நோய் வாய்ப்பட்டு இறந்தார்.[1]


ஆரம்ப வாழ்க்கை[தொகு]

வசந்தகோகிலம் கொச்சியில் இரிஞ்ஞாலகுடா (இன்றைய கேரளாவில்) சந்திரசேகர ஐயர் என்பவருக்குப் பிறந்தார். இவரது இயற்பெயர் காமாட்சி ஆகும். இவரது குடும்பம் நாகப்பட்டினத்திற்குக் குடிபெயர்ந்தது. நாகப்பட்டினம் 'ஜால்ரா' கோபால ஐயர் என்பவரிடம் இசைப் பயிற்சி பெற்றார். 1936 இல் இவரது குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்தது. சென்னையில் கச்சேரிகளில் பாடத் தொடங்கினார். சென்னை இசைக் கல்லூரியில் 1938 இல் அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் தலைமையில் நடந்த ஆண்டு விழாவில் பாடி முதல் பரிசைப் பெற்றார்.[1]

இசையுலகில்[தொகு]

வசந்தகோகிலம் பல தமிழ்ப் பாடல்களைப் பாடிப் புகழ் பெற்றார். சென்னையில் தமிழ் இசைச் சங்கம்நெல்லை சங்கீத சபை ஆகியவற்றில் தொடர்ச்சியாகப் பாடி வந்தார். இவரது கருநாடக, மெல்லிசைப் பாடல்கள் பல இசைத்தட்டுகளாக வெளிவந்துள்ளன.

பிரபல பாடகர் டைகர் வரதாச்சாரியார் இவருக்கு "மதுரகீத வாணி" என்ற பட்டம் சூட்டினார்.

திரைப்படங்களில்[தொகு]

வசந்தகோகிலம் தமிழ்த் திரைப்படங்களில் பாடியும், நடித்தும் உள்ளார். 1940 இல் சி. கே. சக்தியில் இயக்கத்தில் வெளிவந்த சந்திரகுப்த சாணக்யா படத்தில் சாயா இளவரசியாக நடித்தார். தொடர்ந்து வேணுகானம் (1941), கங்காவதார் (1942), ஹரிதாஸ் (1944), வால்மீகி (1946), குண்டலகேசி (1946), கிருஷ்ண விஜயம் (1950) ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.


  • ஏன் பள்ளி கொண்டீர் ஐயா
  • தந்தை தாய் இருந்தால் உமக்கிந்த
  • நித்திரையில் வந்து நெஞ்சில் இடம்
  • ஆனந்த நடனம் ஆடினாள்
  • ஆசை கொண்டேன் வண்டே
  • அந்த நாள் இனி வருமோ
  • பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்

குடும்பம்[தொகு]

இவரது தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கவில்லை. இவரது இசை வாழ்க்கையை விரும்பாத கணவர் இவரை விட்டுப் பிரிந்து விட்டார்.[1] கடைசிக் காலத்தில் இவர் வழக்கறிஞரும், திரைப்படத் தயாரிப்பாளருமான சி. கே. சதாசிவன் (சி. கே. சச்சி) என்பவருடன் குடும்பம் நடத்தினார். காச நோயால் பாதிக்கப்பட்டு சென்னை கோபாலபுரத்தில் இருந்த அவரது வீட்டில் 1951 நவம்பர் 7 மாலை தனது 32வது அகவையில் காலமானார்.[1]



ஆண்டுதிரைப்படம்பாடல்இசையமைப்பு
1940வேணுகானம்1. புண்ணிய தினமின்றே சிறீ கண்ணன் பிறந்த புண்ணிய தினம்
2. எப்போ வருவானோ எந்தன் கலி தீர
3. இன்பம் இன்பம் ஜகமெங்கும்
ஜி. கோவிந்தராஜுலு நாயுடு
1942கங்காவதார்1. பாங்கான சோலை அலங்காரம்
2. கலைவாணி அருள் புரிவாய்
3. ஆனந்த அள்வில்லா மிக ஆனந்தம்
4. இதுவென்ன வேதனை
5. ஆனந்த மாயா வானுலகிதே
6. காவின் மனோகரா காட்சியின் மாண்பே[2]
1944அரிதாஸ்1. கதிரவன் உதயம் கண்டு கமலங்கள் முகம் மலரும்
2. கண்ணா வா மணி வண்ணா வா
3. எனது மனம் துள்ளி விளையாடுதே
4. எனது உயிர் நாதன்
5. தொட்டதற்கெல்லாம் தப்பெடுத்தால் (பாகவதருடன்)
ஜி. ராமநாதன்
1946வால்மீகி1. சுந்தரானந்த வைகுண்ட ஹரே முகுந்தா
2. புவி மீது தவ ஞானியே
3. ஜெய ஜெய புவனபதே
4. பொய்தவழும் மாயப்புவி
பாபநாசம் சிவன்
1947குண்டலகேசிஎஸ். எம். சுப்பையா நாயுடுஜி. ராமநாதன்
1950கிருஷ்ண விஜயம்1. நவநீத கண்ணனே
2. கருணாநிதே மாதவா
3. பொறுமைக் கடலாகிய பூமாதேவி
எஸ். எம். சுப்பையா நாயுடுசி. எஸ். ஜெயராமன்

Saturday, 4 September 2021

NIHARIKA KAREER PUNJABI ACTRESS BORN 1989 NOVEMBER 7

 

NIHARIKA KAREER PUNJABI ACTRESS

 BORN 1989 NOVEMBER 7




Name : Niharika Kareer


Date of Birth  7 November 1989  


Place of Birth : Delhi – India 




Punjabi Film :-  


(i) Oye Hoye Pyar Ho Gaya -  2013  




**** Niharika Kareer *****


***** Niharika Kareer was born into a Punjabi family. 





***** She graduated from Delhi University. 


***** She practised fashion design, 


***** but her interest in acting developed 


***** when she got chance to be a part of a reality show


*****  She received many offers to act in serials 


***** but decided to finish her education 


***** and then moved to Mumbai







*****  ***** *****




***** Niharika Kareer appeared in the reality 


***** show MTV Splitsvilla. 


***** Her video, "Jugni furr", by Jasmeet, was a hit.




***** ***** ***** 




***** Niharika Kareer made her Punjabi film 


***** debut in 2013 opposite singer Sharry Mann 


***** in Oye Hoye Pyar Ho Gaya, 


***** directed by Aditya Sood