Posts

Showing posts from April, 2020

HOW KOHINOOR DIAMOND WENT OUT OF INDIA

Image
.கோஹினூர் வைரம் இந்தியாவை விட்டு வெளியேறியது எப்படி? ஜஃபர் சையத் . 1739ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி மாலை நேரம். டெல்லியிலும், ஷாஜகானபாதிலும், செங்கோட்டையிலும் மிகப் பெரிய உற்சாக கொண்டாட்டம் நடைபெற்றது. ஏழைகளுக்கு உணவு, உடை என பலவிதமான பொருட்களும் தானமாக வழங்கப்பட்டன. மதத்துறவிகளுக்கு காணிக்கைகள் வழங்கப்பட்டன. அதையடுத்து கோஹினூர் வைரம் அபகரிக்கப்பட்டது.  தலைப்பாகையை மாற்றி சகோதரனாக ஏற்றுக் கொள்ளும் சடங்கை சாக்காக வைத்து, நாதிர் ஷா, முகம்மது ஷா ரங்கீலாவிடம் இருந்து கோஹினூர் வைரத்தை கைப்பற்றியதாக கூறப்படுகிறது  டெல்லி அரசவையில் இரானிய பேரரசர், நாதிர் ஷாவின் முன் அமர்ந்திருக்கிறார் முகலாய பேரரசர் முகம்மது ஷா ரங்கீலா. முகலாய அரசரின் தலையில் ராஜ கிரீடம் இல்லை. அதை நாதிர் ஷா இரண்டு மாதங்களுக்கு முன்பு பறித்துவிட்டார். 56 நாட்களுக்குப் பிறகு டெல்லியில் இருந்து இரானுக்கு திரும்ப முடிவு செய்த நாதிர் ஷா, இந்துஸ்தானின் ஆட்சிப் பொறுப்பை முகம்மது ஷாவிடம் ஒப்படைக்க விரும்புகிறார்.பல நூற்றாண்டுகளாக முகலாயர்கள் சேர்த்து வைத்த செல்வங்களை கைப்பற்றிய நாதிர் ஷா, நகரில் இருந்த ச...