SLAVERY IN FRONT OF
CHRISTIANITY AND MUSLIMS
அரேபியாவில் அடிமைத்தனம் ஏற்றுக்கொள்ளப் பட்ட ஒன்று. ஏழாம் நூற்றாண்டில் நபி(ஸல்) அவர்கள் காலத்திற்கு முன்பிருந்தே இருக்கிறது. ஆனால் திருக்குரானும், நபி(ஸல்)அவர்களின் பொன்மொழிகளும் அடிமைத்தனத்தைத் தடுத்து அடிமைகளை விடுதலை செய்யும் ஆர்வத்தை தூண் டின. அடிமைகளை விடுதலை செய்து விட மனிதனுக்கு பரிந்துரைக்கிறது என்று பலர் பொய்யுரைக்கின்றனர் அரேபியாவில் குறிப்பாக பெண் அடிமைகள் மதிப்புடன் நடத்தப்பட்டனர் என்றும் சொல்லமுடியாது .
இசுலாம் சமயத்தின் முக்கிய நீதி அமைப்புகள் அடிமைத்தனத்தை முற்காலத்தில் ஏற்றுக்கொண்டன.[1] முகமதுவும் அவரோடு உடனிருந்தவர்களும் அடிமைகளை வாங்கி விற்றனர். சிலரை விடுதலையும் செய்தனர்.[1] 19 நூற்றாண்டின் இறுதியில் இஸ்லாமிய சிந்தனை அடிமைத்தனம் இஸ்லாமிற்கு உடன்படாத செயற்பாடு என திரும்பியது. சவூதி அரேபியாவின் en:Wahhabi இதை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஒரு காலத்தில் நாடோடிகளாகவும், அடிமைகளாகவும் இருந்த “மம்லுக்” இனத்தவர்கள் இஸ்லாமிய இராணுவத்தில் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்கள் சரியான சந்தர்ப்பத் தில் தனது எஜமான கலீஃபாக்களை மதிக்காமல் தாங்களே கைப்பற்றிய பகுதிக்கு ஆட்சியாளர்கள் ஆனார்கள்.
இதனால் அரேபியப் பகுதியில் அடிமைகளை இராணு வத்தில் சேர்ப்பது குறைந்தது. ஆனால் கிறிஸ்தவ நாடுகளில் ஆண், பெண் அடி மைகள் மிகவும் மோசமாக கையாளப்பட்டனர். தவ்ராத் மற்றும் பைபிள் அடிமை களைப்பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. வட ஐரோப்பாவில் ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களிலும், அரசபைகளிலும் அடிமைகளை உரிமை கொண்டாடுவதைப் பற்றி விவாதங்கள் நடந்தன. ஆனால் மேற்கு ஐரோப்பாவில் அடிமைகள் மெது வாக குறைந்து போய் சுய பொறுப்பாளிகளாய் ஆகிப்போனார்கள்.
அடிமைகள் எஜமானர்களின் விலைமதிப்பில்லாத சொத்தாவார்கள். பதினெட்டாம் நூற்றாண்டில் பாபிலான் அரசு ஹம்முராபி என்ற (CODE OF HAMMURABI) சட்டத்தையே இயற்றி இருந்தது. மனிதவரலாற்றில் முதன்முத லாக புராதன கிரேக்கர்கள் தான் அடிமைகளை வைத்திருந்ததாக சரித்திரம் பதிவு செய்து வைத்திருக்கிறது. கிரேக்கர்கள் தங்கள் அடிமைகளை போரில் வென்றெடு த்தவர்கள் என்றும், சுயமாக சிந்தித்து வேலை செய்பவர்கள் என்றும், அதேசமயத் தில் தங்கள் எஜமானனுக்கு கட்டுப்பட்டவர்கள் என்றும் சட்டமியற்றி வைத்திருந் தார்கள்.
ஏதென்ஸில் அடிமைகள் மதம் மாறக்கூடாது. ஆனால் அவர்களின் நிலைமை வேலைகளைப் பொறுத்து மாற்றப்படும். எதிர்பாராமல் ஏதென்ஸின் அடிமைகள் பெரும்பாலும் சுரங்கங்களில் பணிபுரிவதால், நிறைய அடிமைகள் இறந்து போய் விடுவார்கள். ஏதென்ஸ் அரசே 300 வில்லெறியக்கூடிய ஸைத்திய அடிமைகளை காவலர் படையில் வைத்திருந்தனர். அவர்கள் அடிமைகளாய் இருந்தாலும் கொஞ்சம் கௌரவமாக இருந்தனர் என்றும் சொல்லமுடியாது .
வீடுகளில் பணிபுரியும் ஏதென்ஸ் அடிமைகளின் எதிர்காலம் அவர்களின் எஜமானர்களுடனான உறவைப் பொறுத்தது. பெண் அடி மைகள் எஜமானர்களின் குழந்தைகளைப் பராமரிப்பதால் அவர்களுக்கு சற்று நெருக்கம் கிடைக்கப் பெறுவார்கள். ஆண்கள் வீட்டு நிர்வாகம் மற்றும் எடுபிடி வேலைகளைச் செய்வார்கள். அப்படியே அவர்களின் எஜமானர்கள் விடுதலை அளித்தாலும் மாற்று எஜமானிடம் வேலைசெய்த காரணத்தால், கௌரவக் குறைச்சலாக கருதி வேறுயாரும் அவர்களை வேலைக்குச் சேர்ப்பதில்லை. அதனால் ஏதென்ஸின் ஆண் அடிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக எல்லா வேலைகளையும் கற்றுக்கொண்டார்கள்.
ரோம் நாட்டின் அடிமைகளும் பல வேலைகளைக்கற்று அரசு அலுவலகங்களில் பணியிடம் பெற்றார்கள். சுரங் கங்களிலும், வயல்களிலும் சங்கிலிக் கூட்டமாக வேலை செய்தனர். பொழுது போக்கில் கிளாடியேட்டர் என்னும் வீர விளையாட்டில் ஈடுபடுத்தப்பட்டனர். ரோம அடிமைகளில் ஸ்பார்டகஸ் (SPARTACUS) என்பவர்கள் மிகவும் புகழ் பெற்றார்கள்.
பதினைந்தாம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் முதல் முறையாக துணை சஹாரா ஆப்பிரிக்காவில் அடிமைகள் கப்பலைக் கொண்டு வந்தார்கள். இந்தப்பகுதி கடலில் சஹாராவிலிருந்து மெடிட்டரேனிய னுக்கு அடிமை வியாபாரத்திற்கு பெரிதும் உதவியது. இதனால் போர்ச்சுகீசியர் கள் புதிய அடிமை வியாபார சந்தையைத் துவக்கினார்கள். இந்த புதிய அடிமை சரக்கு வியாபாரத்திற்கு இயற்கையும் பெரிதும் உதவியது. வால்கானிக் வெர்டி தீவுகள் பெரிய பாறைகளுடன் கப்பல் போக்குவரத்துக்கு மிகவும் ஆபத்தாக இருந் தது. இதனால் போர்ச்சுகீசியர்கள் இந்த சூடு மிகுந்த தீவை அடிமைச்சந்தைக்குத் தேர்ந்தெடுத்தனர்.
மேற்கு ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு சஹாரா கடல் வழியைப் பயன்படுத்தினர். போர்ச்சுகீசியர்கள் 1460 ல் வால்கானிக் வெர்டி தீவுக்கு வந்தார்கள். 1466 ல் குறுகிய காலத்தில் அடிமை வியாபாரத்தில் புதிய உலகசந்தையைத் துவங்கி பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கண் டார்கள். கினியா நாட்டின் கரையோரத்திலும் போர்ச்சுகீசியர்கள் அடிமைச்சந்தை யைத் துவங்கி அடிமை வியாபாரத்தில் தனி இடத்தைப் பெற்றனர். கினியாவில் துணிகளைக் கொடுத்துவிட்டு அடிமைகளைப் பெற்றுச்செல்வார்கள்.
பதினெட்டாம் நூற்றாண்டுகளில் இந்த அபாயகரமான அடிமைக் கடத்தலில் பிரிட்டிஷ் கப்பல்கள் பெரிதும் ஈடுபட்டன. அவர்கள் கடல் பயணத்தை வீணாக்குவதில்லை. இதைப்பல காரணங்களுக்காக பயணிக்கும் கப்பலில் அடிமைகளைக் கடத்திச் செல்வதை ‘முக்கோண வியாபாரம்’ (TRIANGULAR TRADE) என்று அழைத்தனர். இந்த முக்கோண வியாபாரம் கப்பல் உரிமையாளருக்கு பொருளாதார ரீதியில் லாபம் அளித்ததால் அட்லாண்டிக்கின் கடல் வழி அடிமை கடத்தலுக்கு மிகவும் பயன்பட்டது. லிவர்பூல் மற்றும் பிரிஸ்டால் துறைமுகத்தி லிருந்து மேற்கு ஆப்பிரிக்காவுக்கு வெடிப்பொருள்கள், மதுவகைகள், பருத்தி துணிகள், உலோகங்கள் மற்றும் மணிகளை ஏற்றிச்செல்லும்.
கினியாவில் இந்த பொருட்களுக்காக வியாபாரிகள் ஆவலுடன் காத்திருப்பார்கள். அவர்கள் ஆப்பிரிக் காவின் உட்பகுதியில் பிடிக்கப்பட்ட அடிமைகளை பொருட்களுக்காக மாற்றிக் கொள்வார்கள். வியாபாரப் பொருட்கள் கைமாறியவுடன் அடிமைகள் ஆபத்தான மற்றும் பரிதாபமான முறையில் கப்பலில் ஏற்றப் (அடைக்க) படுவார்கள். இந்த அபாயகரமான பயணத்தில் ஆறு அடிமைகளில் ஒரு அடிமை மேற்கிந்திய தீவு களை கப்பல் அடையும் முன் இறந்துவிடுவார். இறுதியாக கப்பல் அமெரிக்க அடிமைச் சந்தையை வந்து அடையும்.
ஆச்சரியப்படாதீர்கள் இப்படியாக ஏறக்குறைய 1.5 கோடி அடிமைகள் அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் இறக்குமதி செய்யப் பட்டிருக்கிறார்கள். அரேபியர்கள் அடிமைகளை எதற்காக எப்படி உபயோகப்படுத் தினார்கள் என்பதையும் இஸ்லாம் அதை எதிர்த்ததும் அனைவரும் அறிந்தது. ஆனால், இன்று மனித உரிமைகளைப்பற்றியும், நேட்டோ என்ற கூட்டுப்படை அமைத்து உலக சமாதானம் என்று ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா, துருக்கி என இஸ்லாமிய நாடுகளை குறிவைத்து ரத்தத்தில் குளிக்க வைக்கும் அமெரிக்காவும், ஐரோப்பாவும் எப்படி அடிமைகளைப் பயன்படுத்தினார்கள் என் பதை அறிந்தால் நெஞ்சம் பதைக்கும்.
இந்த அடிமை வியாபாரம் முதன்முதலில் வெளி உலகத்திற்கு அஃப்ரா பெஹ்ன் என்பவர் “ஓரூனோகோ”(OROONOKO) என்ற நாவலில், ஒரு ஆப்பிரிக்க இளவரசனும்,அவன் காதலியும் ஆங்கிலேயர்களால் அடிமை களாக சுரினாமுக்கு கடத்தப்படுகிறார்கள். அவர்கள் படும் வேதனையில் இந்த கப்பலில் கடத்தும் முறையையும் எழுதி இருந்தார். இதன் பிறகு உலகம் முழுவ தும் வழக்கம் போல் கண்டனக்குரல்கள் எழுந்தன. பிரிட்டனில் புகழ்பெற்ற “பாஸ் டன் மஸ்ஸாக்கர்” நிகழ்ந்தது. இதற்கு பிரிட்டிஷாரின் குண்டுக்கு பலியான முதல் அடிமை ‘க்ரிஸ்பஸ் அட்டுக்ஸ்’ என்பவராவார். தங்கள் நாடுகளை வளப்படுத்திக் கொண்டு வழக்கப்போல் ஐரோப்பாவும், அமெரிக்காவும் அடிமைத்தனம் ஒழிய வேண்டி அமைதிக்குழு அமைத்தும், மாநாடுகள் நடத்தியும் ஒரு நூற்றாண்டு களுக்கும் மேலாகப் பேசிப்பேசி அடிமைத்தனத்தை அழித்தார்கள்.
எந்தெந்த நாடுகளில் கூடி என்னென்ன பேசினார்கள் என்பதெல்லாம் தூக்கம் வர வழைக் கும் சமாசாரங்கள். அமெரிக்க உள்நாட்டுப்போரின் போது சுமார் 40 லட்சம் அடி மைகள் விடுதலை செய்யப்பட் டார்கள். சில ஆயிரம் பேர் தங்கள் அடிமைக் கதைகளை பின்வரும் சந்ததிக்கு நாட்குறிப்பு, கடிதங்கள், ஒலிப்பதிவு மற்றும் வாய்மூலம் பதிவு செய்து வைத்தார்கள்.
No comments:
Post a Comment