MUKESH AMBANI ,THE PIONEER
BORN 1957 APRIL 19
முகேசு அம்பானி (19 ஆம் தேதி,ஏப்ரல் மாதம் 1957 ஆம் ஆண்டு பிறந்தவர்) ஒரு இந்திய தொழில் அதிபர் ஆவார். இவர் பார்ச்சூன் குளோபல் 500[4] பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் மிக பெரிய தனியார் துறை நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்[5] லிமிட்டெட்டின் கூடுதல் பங்குகளை உடைய தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி (நிர்வாக இயக்குநர்) பதவிகளை வகிப்பவரும் ஆவார். இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனமான ஆர்.ஐ.எல் அதன் பங்குச் சந்தை மதிப்பு மற்றும் விற்பனை அளவில் மதிப்புமிக்க நிறுவனமாக விளங்குகிறது.[6] இவர் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் தனக்கு சொந்தமாக 44.7% பங்கை கொண்டுள்ளார் மேலும் உலகின் மிக பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் இயக்குபவர் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு துறை[7] உரிமையாளர் ஆவார். முகேசுவின் இளைய சகோதரரான அனில் அம்பானி ரிலையன்ஸ் குழுமதின் தலைவர் ஆவார். அம்பானி குடும்பம் இந்தியாவிலேயே பணக்கார குடும்பமாகும் மேலும் உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் இடம்பெற்றிறுக்கிறார், இவர்கள் தங்கள் செல்வத்தை ஒட்டு மொத்தமாக ரிலையன்ஸ் இந்திய குழுமத்தின் நிறுவுனரான திருபாய் அம்பானி அவர்களிடமிருந்து வாரிசாக பெற்றனர்.[8]
2010 ல் ஃபோர்ப்ஸ் அமெரிக்க இதழ் வெளியிடும் முக்கியமான 68 நபர்கள் பட்டியலில் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்கள் மத்தியில் இவர் இடம் பெற்றார்[9],மேலும் 2012 ல் இவர் ஆசியாவில்[10] இரண்டாவது பணக்கார மனிதராகவும், உலகில் 19 வது பணக்கார மனிதராகவும் இடம்பெற்ற இவரது தனிப்பட்ட சொத்தின் மதிப்பு அமெரிக்க டாலர் ($) 22.3 பில்லியன் ஆகும். 2007 ல் இந்திய பங்கு சந்தையில் ஏற்படட மதிப்புயர்வு காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்ததால் ரிலையன்ஸ் குழு நிறுவனங்களின் மதிப்பும் உயர்ந்தது. இதன் காரணமாக இவர் உலகின் அதி பணக்கார மனிதராக அறியப்பட்டார்.[11][12][13]
இவர் அமெரிக்க கார்ப்பரேஷன் வங்கியின் இயக்குநர்கள் குழுவில் ஒரு உறுப்பினராவார், மற்றும் சர்வதேச வெளியுறவு ஆலோசனை குழுவின் தற்போதைய உறுப்பினராகவும் உள்ளார்.
2012 ல் உலகின் 2 வது பணக்கார விளையாட்டு உரிமையாளராக[14] முகேசு அம்பானியை ஃபோர்ப்ஸ் அமெரிக்க இதழ் பட்டியலிட்டது. பணக்கார விளையாட்டு உரிமையாளர்களின் பட்டியலின் படி இவர் செல்சீ மற்றும் ஏசி மிலனை காட்டிலும் பணக்காரராக அறியப்படுகிறார். அம்பானி இந்திய பிரீமியர் லீக் உள்நாட்டு கிரிக்கெட் கிளபின் மும்பை இந்தியன்ஸ் அனியின் உரிமையாளர் ஆவார்.[15]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
முகேசு அம்பானி, திருபாய் அம்பானியின் மூத்த மகனாவார், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிற்பகுதியில் நிறுவுனராவார்.[16] இவருக்கு அனில் என்று ஒரு சகோதரனும், தீப்தீ சல்கோன்கர் மற்றும் நீனா கோத்தாரி என்ற இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.[17]
அம்பானியின் குடும்பம் 1970 வரை மும்பை புலீஸ்வரில் உள்ள இரண்டு படுக்கையறை கொண்ட குடியிருப்பில் வசித்து வந்தது.[18] திருபாய் அம்பானி பின்னர் கொலாபா உள்ள 'ஸீ வின்ட்' என்றழைக்கப்படும் 14-மாடிகள் கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கினார் சமீப காலம் வரை முகேசு மற்றும் அனில் அவர்கள், அவர்களின் குடும்பங்களுடன் இங்கு வெவ்வேறு தளங்களில் வசித்து வந்தனர்.[19]
முகேசு அம்பானி தனது ஆரம்ப கல்வியை மும்பையில் உள்ள அபே மொரிச்சா பள்ளியிலும் தனது இரசாயன பொறியியல் பட்டப்படிப்பை தற்பொழுது இன்ஸ்டிடுட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி, மும்பை என்று அழைக்கப்படும் யுடிசிடீயிலும் முடிததார். இவர் பல்கலைக்கழக தேர்வில் ஆறாவது இடத்தை பிடித்தார்.[20] முகேசு பின்னர் இசுடான்ஃபர்ட் பல்கலைக்கழகம் அல்லது ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகதில் எம்பிஏ எனப்படும் இரண்டு ஆண்டு திட்ட படிப்பில் சேர்ந்தார் ஆனால் ஒரு ஆண்டு நிறைவடைந்தவுடன் 1980இல் படிப்பைக் கைவிட்டார்.[21] இந்திரா காந்தியி்ன் நிர்வாகம் 1980 இன் முற்பகுதியில் PFY (பாலியஸ்டர் இழை நூல்) உற்பத்தியில் தனியார் துறைகளை ஊக்குவித்தது. திருபாய் அம்பானி அவர்கள் பாலியஸ்டர் இழை நூல்( PFY) உற்பத்தி செயயும் ஆலை அமைக்க உரிமம் கேட்டு விண்ணப்பித்திருந்தார். டாடா, பிர்லா மற்றும் 43 இதர போட்டியளர்களுக்கு மத்தியில் திருபாய் அம்பானி அவர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது.[22] பாலியஸ்டர் இழை நூல் உற்பத்தி (PFY) ஆலையின் உருவாக்கத்தில் உதவுவதற்காக திருபாய், அவரது மூத்த மகன் முகேசுவை இசுடான்ஃபர்ட் பல்கலைக்கழகத்தின் எம்.பி.ஏ படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு அழைத்துவந்தார். முகேஷ் அம்பானி, அவருடைய தந்தைக்கு உதவுவதற்காகவும் ரிலயன்ஸ்சின் ஒருங்கிணைந்த நெசவு தொழிலிருந்து பாலியஸ்டர் இழைகள் மற்றும் 1981 இல் தொடங்கிய பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையி்ன் ஆரம்பத்திற்காகவும் தனது படிப்பை பாதியிலேயே கைவிட்டார்.[23]
தொழில்
இவர் 1981இல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசில் சேர்ந்தார்.[24] இவரது பயணம் ஒருங்கிணைந்த ரிலையன்ஸ் இன் ஆரம்ப நிலையான நெசவு தொழிலிருந்து பாலியஸ்டர் இழைகள் உற்பத்தியில் தொடங்கி மேலும் பெட்ரோ கெமிக்கல், பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆராய்ச்சியாக தொடர்ந்து விரிவடைந்தது.[25]
அம்பானி, உலகின் மிகப்பெரிய மற்றும் பல பாகங்களை கொண்ட தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப முயற்சிகளை கொண்ட ரிலையன்ஸ் இன்ஃபோகாம் லிமிடெட்டை (தற்பொழுது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட்) நிறுவினார்.[26]
உலகின் மிகப்பெரிய அடித்தள பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் இந்தியாவின் ஜாம்நகரில் உள்ளது. இதன் தற்போதைய சுத்திகரிப்பு திறன் ஒரு நாளைக்கு 660,000 பீப்பாய்கள் (வருடத்திற்கு 33 மில்லியன் டன்கள்) மேலும் இதனுடன் ஒருங்கிணைக்கப்பட்ட பெட்ரோகெமிக்கல், மின் உற்பத்தி, துறைமுகம் மற்றும் இவைகளின் தொடர்புடைய உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளின் நிர்வாகத்தை இயக்குபவராகவும் மற்றும் வழிவகுத்து நடத்தி செல்பவராகவும் அம்பானி உள்ளார்.[27]
வாரிய உறுப்பினரகங்கள்
தலைவர், நிர்வாக இயக்குநர், நிதி செயற்குழுவின் தலைவர், மற்றும் ஊழியர்களின் பங்குதொகையின் இழப்பீட்டு செயற்குழுவின் உறுப்பினர்,ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட்
முன்னாள் தலைவர்,இந்தியன் பெட்ரோகெமிக்கல்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்
முன்னாள் துணை தலைவர்,ரிலையன்ஸ் பெட்ரோலியம்
வாரியத் தலைவர்,ரிலையன்ஸ் பெட்ரோலியம்
தலைவர்,தணிக்கை குழு தலைவர்,ரிலையன்ஸ் சில்லறை வியாபார லிமிடெட்
தலைவர்,ரிலையன்ஸ் ஆய்வு மற்றும் உற்பத்தி டிஎம்சிசி
இயக்குனர், கடன் செயற்குழு உறுப்பினர்,மற்றும் இழப்பீடு & அனுகூலங்களின் செயற்குழு உறுப்பினர், அமெரிக்க கார்பரேசன் வங்கி
அனில் அம்பானி சிறைக்கு செல்வதைத் தவிர்க்க பணம் தந்து உதவிய அண்ணன் முகேஷ் அம்பானி
19 மார்ச் 2019
.
தனது தம்பி அனில் அம்பானியின் கடன் தொகையை செலுத்தி, அவர் சிறை தண்டனையை தவிர்க்க உதவியுள்ளார் இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி.
தொலைத் தொடர்பு பெரு நிறுவனமான எரிக்சனோடு, ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனம் உருவாக்கிய ஒப்பந்தம் ஒன்று முறிந்த பின்னர் அது தொடர்பான குற்றச்சாட்டை அனில் அம்பானி எதிர்கொண்டார்.
எரிக்சன் நிறுவனத்திற்கு 5.5 பில்லியன் ரூபாய் வழங்க வேண்டியதை நீதிமன்ற காலக்கெடு முடிவதற்கு முன்னால், ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்தால் கொடுக்க முடியவில்லை.
தனது சகோதரர் அனில் அம்பானிக்கு முகேஷ் அம்பானி உதவியிருப்பது இவ்விரு சகோதரர்களுக்கு இடையில் நிலவி வந்த நீண்டகால சண்டைகளின் புதிய திருப்பமாக வந்துள்ளது.
ரஃபேல் ஒப்பந்தத்தில் அம்பானியின் ரிலையன்ஸ் உள்ளே வந்த கதை
முகேஷ் அம்பானியின் மகன் யாரை திருமணம் செய்கிறார்?
நீதிமன்றம் உத்தரவிட்டபடி கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதிக்குள் எரிக்சன் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்த ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனம் தவறிவிட்டது.
அனில் அம்பானி நீதிமன்ற ஆணையை அவமதித்த குற்றத்தை உறுதி செய்த நீதிமன்றம், இன்னும் நான்கு வாரங்களில் பணத்தை செலுத்த வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், சிறை தண்டணை பெற வேண்டியிருக்கும் என்று கூறிவிட்டது.
கடந்த திங்கள்கிழமை கடன் செலுத்தப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனம் தெரிவித்தது.
.
அனில் அம்பானி
என்னுடைய மரியாதைக்குரிய அண்ணன் முகேஷுக்கும், அண்ணி நிட்டாவுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள். என்னுடைய இந்த இக்கட்டான நிலையில், சரியான நேரத்தில் உதவியிருப்பதன் மூலம் எமது குடும்ப மதிப்பீடுகளுக்கு உண்மையாக இருப்பதன் முக்கியத்துவத்தை அவர்கள் காட்டியுள்ளனர்" என்று அனில் அம்பானி தெரிவித்திருக்கிறார்.
சாதாரணமாக வாழ்க்கையைத் தொடங்கி பெரும் தொழில் அதிபராக மாறிய முகேஷ், அணில் சகோதரர்களின் தந்தை திருபாய் அம்பானி, 2002ம் ஆண்டு உயில் எதுவும் எழுதாமல் இறந்துவிட்டார். இதையடுத்து, அண்ணன் - தம்பி இடையே தந்தையின் தொழில்களை நடத்துவது தொடர்பாக சண்டை ஏற்பட்டது. நீண்டகாலமாக இவர்களிடையே உறவு கெட்டுக்கிடந்தது.
2005ம் ஆண்டு ஏழு மாத கால குடும்ப சண்டைக்கு பின்னர் ரிலையன்ஸ் நிறுவனத்தை அண்ணன் தம்பி இருவரும் பங்கு பிரித்துக்கொண்டனர்.
எரிவாயு ஆதாயங்கள் தொடர்பாக கடந்த காலத்தில் நீதிமன்றப் படியேறி இருவரும் சொத்துத் தகராறில் ஈடுபட்டனர்.
முகேஷ் அம்பானி 54 பில்லியன் டாலருக்கு மேலான மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக புளூம்பர்க் தெரிவிக்கிறது.
அனில் அம்பானியை அதிர வைத்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு
.
பெட்ரோலிய நிறுவனம் முதல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வரை நடத்திவரும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமம் இந்தியாவின் பெரும் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.
இதற்கு மாறாக, அணில் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 300 மில்லியன் டாலர் மட்டுமே என்று புளூம்பெர்க் மதிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டு முகேஷ் அம்பானி மகள் இஷா அம்பானிக்கு நடைபெற்ற மிகவும் ஆடம்பரமான திருமணம் தலைப்பு செய்திகளில் இடம்பெற்றது. அமெரிக்க பாடகர் பயோன்ஸின் இசை நிகழ்ச்சி அப்போது நடத்தப்பட்டது.
.
No comments:
Post a Comment