Friday 17 April 2020

ILAVARASI ,INDIAN ACTRESS BORN 1976 APRIL 17






ILAVARASI ,INDIAN ACTRESS BORN 1976 APRIL 17


இளவரசி ஒரு இந்திய நடிகை பிறந்த தேதி 17 APRIL 1976

இயற்பெயர் மஞ்சு. கொக்கரக்கோ என்ற படத்தில் அறிமுகமானார். ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்து வந்தார். ராதுவின் “ஒரு கொலை ராகம்” என்ற நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது கங்கை அமரன் நாடகம் பார்க்கச் சென்றிருந்தபோது நாடகத்தைப் பார்த்துவிட்டு “கொக்கரக்கோ” படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தலாமென்று நினைக்கிறேன் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார் இளவரசியின் தந்தையிடம். தாய், தந்தை இருவரும் சம்மதம் சொல்லிவிட்டார்கள். மஞ்சு என்ற பெயரை இளவரசி என்று மாற்றியவர் கங்கை அமரன் தான். இவருக்கு முன்னால் மஞ்சுளாவும் கன்னடத்தில் ஒரு மஞ்சுளாவும் இருந்ததனால் இந்த மஞ்சுவை இளவரசியாக்கினார் கங்கை அமரன்.

கொக்கரக்கோ படத்திற்குப்பின் நிறைய படங்களில் நடிக்க இவருக்கு சந்தர்ப்பங்கள் வந்தது. சின்னச்சின்ன வேஷங்கள் வேண்டாமென்று மறுத்துவிட்டார். நல்ல கதாபாத்திரங்களை மட்டுமே ஒப்புக்கொண்டார். உதாரணமாக சிறீதரின் “ஆலயதீபம்” நல்ல கதாபாத்திரம். அதுபோல் மண்ணுக்கேத்த பொண்ணு நல்ல கதாபாத்திரம். ஜீவநதியில் சிவகுமாருடன் நடித்தார். லட்சுமியுடன் அந்தஸ்து படத்திலும் பாக்கியராஜுடன் தாவணிக்கனவுகள் படத்திலும் நடித்தார்.இவருக்கு மிகவும் பிடித்த நடிகை சாவித்திரி. சிவகுமார்,சுரேஷ், பாண்டியன், மோகன் போன்ற சமகாலத்து பிரபலங்களுடன் நடித்துள்ளார். தற்போது சில சின்னத்திரைத் தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்துவருகிறார்.

இளவரசி ஒரு இந்திய நடிகை ஆவார். கங்கை அமரன் இயக்கி 1983ல் வெளிவந்த கொக்கரக்கோ திரைப்படத்தில் அறிமுகமானார்.[1] தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் கல்பனா எனவும் கன்னட திரையுலகில் மஞ்சுளா சர்மா எனவும் அறியப்படுகின்றார்.

1980களில் வெளிவந்த திரைப்படங்களில் முன்னணி பாத்திரங்களிலும் பின்னர் வெளிவந்த திரைப்படங்களில் துணைப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார். தமிழில் சம்சாரம் அது மின்சாரம், ஊமை விழிகள்[2] போன்ற படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகின்றார்.

இளவரசி நடித்த திரைப்படங்கள்
(இப்பட்டியல் முழுமையானதல்ல)

கொக்கரக்கோ
ஊருக்கு உபதேசம்
வேஷம்
மாப்பிள்ளை சிங்கம்
மண்ணுக்கேத்த பொண்ணு
தாவணிக் கனவுகள்
கரையை தொடாத அலைகள்
அந்தஸ்து
செயின் ஜெயபால்
சம்சாரம் அது மின்சாரம்
ஊமை விழிகள்
அவன்
தலையாட்டி பொம்மைகள்
ஓடங்கள்
ஜீவநதி
தாய்க்கு ஒரு தாலாட்டு
அடுத்த வீடு
கல்யாண கச்சேரி
எங்க வீட்டு ராமாயணம்
வசந்தி
பெண்மணி அவள் கண்மணி
ஊமைக்குயில்
ராசாத்தி கல்யாணம்
முந்தானை சபதம்
எதிர்காற்று
எங்க ஊரு ஆட்டுக்காரன்
அறுபது நாள் அறுபது நிமிடம்
மங்கள நாயகன்
முதல் மனைவி
ஹிட்லர் (மலையாளம்)
தில் (தெலுங்கு)
குங்குமச்சிமிழ்

No comments:

Post a Comment