Sunday 12 April 2020

TOP STAR OF TAMIL CINEMA WHO ?.......WHO?




TOP STAR OF TAMIL CINEMA
 WHO ?.......WHO?



தமிழ் சினிமாவைக் காப்பாற்றும் 30 ப்ளஸ் நாயகிகள்... யார், யார் எப்படி?!
.

தமிழ் சினிமா நடிகைகளின் வயதும் அவர்களின் திரை அனுபவமும்!

சினிமாத்துறையில் மற்றவர்களை ஒப்பிடும்போது ஹீரோயின்களுக்கு லைம்லைட் காலம் குறைவு என்பார்கள். ஆனால், அதை பொய்யாக்கி பலர் சாதனை புரிந்துவருகின்றனர். அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க தன் வயதிற்கும் அனுபவத்திற்கும் ஏற்ற கேரக்டர்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து அதில் அசத்துகின்றனர். கோலிவுட்டை பொறுத்தவரை ஒவ்வொரு வருடத்திற்கும் குறைந்தது ஆறேழு புதுமுக நடிகைகளாவது அறிமுகமாகிறார்கள். அவர்களுக்கும் போட்டியாக இருந்து என்றும் முன்னணி நடிகையாக இருப்பது சாதாரண காரியமல்ல. அப்படி கோலிவுட் நடிகைகளின் வயதும் அவர்களின் சினிமா அனுபவமும் பற்றி பார்க்கப் போகிறோம்.

`மாஸ்டர்' விஜய் மட்டுமல்ல, இவர்களும் கோலிவுட்டின் `வாத்திகள்'தான்!
Also Read
`மாஸ்டர்' விஜய் மட்டுமல்ல, இவர்களும் கோலிவுட்டின் `வாத்திகள்'தான்!

ஜோதிகா: 
.
1998-ல் 'டோலி சாஜாகே ரக்னா' என்ற இந்திப் படத்தில் அறிமுகமான ஜோதிகா, அதன்பின் இந்தி பக்கம் போகவேயில்லை. 'வாலி' மூலம் தமிழில் அறிமுகமானவருக்கு அடுத்தடுத்து ஏராளமான வாய்ப்புகள். விஜய், அஜித், சூர்யா, விக்ரம், மாதவன் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஜோதிகாதான் முதல் சாய்ஸ். ஜோதிகாவுக்கு தனி ரசிகர்கள் உருவாக ஆரம்பித்தனர். வருடத்தில் ஜோதிகாவுக்கு நான்கு படங்களாவது வெளியாகிவிடும். 2007-ல் 'மொழி', 'பச்சைக்கிளி முத்துச்சரம்', 'மணிகண்டா' இந்தப் படங்களில் நடித்தவர், திருமணமான பின் இடைவெளிவிட்டிருந்தார். பிறகு, 2015-ல் '36 வயதினிலே' மூலம் ரீ என்ட்ரி கொடுத்தவர், தனது செகண்ட் இன்னிங்ஸில் கலக்கி வருகிறார். 41 வயதான ஜோதிகா, தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸில் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. ஒரு ஹீரோயினுக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் இருக்கிறது என்றால் அது ஜோவுக்குதான். 22 வருடங்களாக இடையில் சில காலம் இடைவெளி எடுத்தக்கொண்டும் சினிமாவில் ஹீரோயினாகவே பயணிப்பது சாதாரண விஷயமல்ல. வாழ்த்துகள் ஜோதிகா!


த்ரிஷா:
.
1999-ல் வெளியான 'ஜோடி' படத்தில் சிம்ரன் தோழியாக சினிமாவில் தோன்றியிருந்தாலும் 2002-ல் வெளியான 'மெளனம் பேசியதே'தான் த்ரிஷாவுக்கு ஹீரோயினாக அறிமுகப் படம். தமிழ், தெலுங்கு இந்த இரு மொழிகளில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வந்தார். இடையில் ஒரு இந்திப் படமும் ஒரு கன்னடப் படமும் நடித்திருந்தாலும் அந்த மொழிகளில் கவனம் செலுத்தவில்லை. அவ்வளவு ஏன் அவரின் முதல் மலையாளப் படமே 2018-ல் வெளியான 'ஹே ஜூட்'தான். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் என கோலிவுட்டின் முன்னணி நாயகர்கள் அனைவருடனும் நடித்துவிட்டார். அதேபோலதான் தெலுங்கிலும். த்ரிஷா நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட்! 36 வயதான இவர், 17 வருடங்களாக கோலிவுட் குயினாக இருந்து வருகிறார். இப்போதும் இளமை மாறாமல் அப்படியே இருப்பதன் சீக்ரெட் அவருக்கு மட்டுமே தெரியும். தற்போது 'பொன்னியின் செல்வன்', மோகன்லாலுடன் 'ராம்', 'ராங்கி' உள்ளிட்ட படங்கள் த்ரிஷாவின் வசமுள்ளன.


.
நயன்தாரா

எத்தனையோ ஹீரோயின்களை கோலிவுட் சந்தித்திருந்தாலும் நயன்தாராவைதான் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று கொண்டாடுகிறார்கள். 2003-ல் வெளியான 'மனசினாக்கரே'தான் நயன்தாராவின் அறிமுகப்படம். முதல் மூன்று படங்கள் மலையாளத்தில் நடித்தவருக்கு, கோலிவுட்டிலிருந்து ஆஃபர் வர அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார். தமிழில் இரண்டாவது படமே சூப்பர்ஸ்டாருக்கு ஜோடி. கோலிவுட்டில் வளர்ந்து வரும் சமயத்திலேயே டோலிவுட்டிலும் இருந்து வாய்ப்புகள் வரத் தொடங்கியது. 'யாரடி நீ மோகினி', 'பில்லா' என இவர் நடித்த படங்கள் எல்லாம் ஹிட்டாக தெலுங்கிலும் படு பிஸியாக இருந்தார். 'ஶ்ரீராமராஜ்யம்' படத்திற்குப் பிறகு, நடிக்கமாட்டேன் என்றவர், 'ராஜா ராணி' மூலம் ரீ என்ட்ரி கொடுக்க, அடுத்தடுத்து சின்னச்சின்ன படங்களாக நடித்துக்கொண்டிருந்தார். 'ஆரம்பம்', 'தனி ஒருவன்', 'பாஸ் (எ) பாஸ்கரன்' என ஹிட்டுகளை கொடுத்து வந்தவர், 'மாயா', 'டோரா', 'அறம்', 'கோலமாவு கோகிலா' என இப்போது தனக்கான ரூட்டை மாற்றி ஹீரோவுக்கு நிகராக மார்கெட்டை உயர்த்தினார். இது போன்ற படங்கள் நடித்துக்கொண்டிருந்தாலும் 'நானும் ரெளடிதான்', 'வேலைக்காரன்' போன்ற படங்களிலும் நடித்தார். 'விஸ்வாசம்', 'பிகில்', 'தர்பார்' என உச்ச நட்சத்திரங்களின் படங்களிலும் நடிக்கிறார். ஆனாலும் 'நெற்றிக்கண்', 'மூக்குத்தி அம்மன்' போன்ற படங்களில் நடிப்பதுதான் நயனின் ஸ்பெஷல். 35 வயதான நயன்தாரா, சினிமாவுக்கு வந்து 16 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.


தமன்னா:
.

2005-ல் வெளியான ஒரு இந்திப் படத்தில் அறிமுகமான தமன்னா, டோலிவுட் பக்கம் வர அவரை கோலிவுட் தன்வசப்படுத்திக்கொண்டது. முதல் நான்கு வருடங்கள் தடுமாற்றம் இருந்தாலும் 2009-தான் தமன்னா என்ற பெயர் தமிழகத்திற்கு நன்கு அறிமுகமானது. காரணம், அந்த வருடம் 'படிக்காதவன்', 'அயன்', 'கண்டேன் காதலை' என அடுத்தடுத்து படங்கள் வெளியானது. பின், 'பையா', 'சுறா', 'சிறுத்தை' என முன்னணி நடிகை பட்டியலில் தமன்னாவின் பெயர் இடம்பெற்றது. அதேபோல தெலுங்கிலும் 'பத்ரிநாத்', 'ரச்சா', 'ரிபெல்' என அங்கேயும் முத்திரை பதித்தார். இவரின் பெரிய ப்ளஸ்ஸாக பார்க்கப்படுவது இளம் ஹீரோக்களுடனும் நடிப்பார், அதே சமயம் உச்ச நடிகர்களுடனும் நடிப்பார். அதானாலேயே அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்தன. மும்பை பெண் என்றாலும் அவ்வப்போது மட்டுமே பாலிவுட்டில் தலை காட்டி வரும் இவருக்கு 30 வயது. சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் நிறைவடைந்துவிட்ட நிலையிலும் இன்றும் லைம் லைட்டில் ஹீரோயினாக ஜொலிக்கும் நாயகியாக இருக்கிறார். 'போலே சுடியான்' எனும் இந்திப் படம், 'சீத்திமார்' எனும் தெலுங்கு படம், தமிழில் ஒரு வெப் சீரிஸ் என தமன்னா ஆல்வேஸ் பிஸி!

அனுஷ்கா:
.
அனுஷ்கா யோகா டீச்சராக இருந்து நடிகையானவர் என்பது அனைவருக்கும் தெரியும். இவரின் அறிமுகப்படம் 2005-ல் வெளியான 'சூப்பர்'. அதன்பின், தெலுங்கில் அடுத்தடுத்து நடித்துக்கொண்டிருந்தார். 'விக்ரமார்குடு' ('சிறுத்தை' ஒரிஜினல் வெர்ஷன்), 'டான்' உள்ளிட்ட படங்கள் ஹிட்டாக தமிழில் சுந்தர்.சி இயக்கிய 'ரெண்டு' படத்தில் அறிமுகப்படுத்தினார். இருந்தும் கோலிவுட் ரசிகர்களுக்கு இவர் நன்கு பரிட்சயமானது 'அருந்ததி'யில்தான். அதன்பின், தமிழில் 'வேட்டைக்காரன்', 'சிங்கம்' சீரிஸ், 'தெய்வத்திருமகள்', 'என்னை அறிந்தால்' என முன்னணி நாயகியாக வலம் வந்தார். 'அருந்ததி'க்கு எந்தளவுக்கு வரவேற்பு கிடைத்ததோ அதைவிட பல மடங்கு அதிகமாக 'பாகுபலி'யின் இவர் நடித்த தேவசேனை கேரக்டருக்கு கிடைத்தது. உடல் எடையை குறைப்பதற்காக சில காலம் சினிமாவுக்கு இடைவெளிவிட்டு வந்தவர் அவ்வப்போது கேமியோ ரோலில் தோன்றுவார். தற்போது, இவர் நடிப்பில் உருவான 'நிசப்தம்' படம் வெளியாகக் காத்திருக்கிறது. தவிர, கெளதம் மேனன் இயக்கும் 'வேட்டையாடு விளையாடு 2' படத்திற்கும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. 38 வயதான இவர் சினிமாத்துறைக்கு வந்து 15 ஆண்டுகள் நிறைவடைய இருக்கிறது.

சமந்தா :
.

சென்னை பெண்ணாக இருந்தாலும் அறிமுகமானது 'யே மாயா சேசாவே' ('விண்ணைத்தாண்டி வருவாயா') எனும் தெலுங்கு படத்தில். தற்போது அந்த மாநில மருமகளாகவே மாறிவிட்டார். தமிழ், தெலுங்கு என பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் சரிசமமாக நடித்து வந்தார், வருகிறார். 32 வயதான சமந்தாவுக்கு திரைத்துறையில் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 'நான் ஈ', 'நீதானே என் பொன்வசந்தம்', 'தெறி', 'சீத்தம்மா வாக்கெட்லோ சிரிமல்ல செட்டு', 'மனம்' என இரு மொழிகளிலும் இவரது படங்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கும். நிறைய ஹீரோயின் சென்ட்ரிக் கதைகள் சமந்தாவிடம் வருகின்றன. திருமணமான பிறகும், தான் எப்படியோ அதே போல சினிமாவில் இயங்கி வருகிறார். டோலிவுட்டின் ஜெஸ்ஸி, நித்யா, ஜானு என சமந்தா ஏற்ற பல கதாபாத்திரங்கள் க்ளாசிக்! தற்போது விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் 'காத்து வாக்குல ரெண்டு காதல்', அஷ்வின் சரவணன் இயக்கும் த்ரில்லர் படம் ஆகியவை சமந்தா வசமுள்ளன. தவிர, 'தி ஃபேமிலி மேன்' வெப் சீரிஸின் இரண்டாவது சீசனில் நடித்து முடித்துள்ளார்.

காஜல் அகர்வால்: 
.
2007-ல் 'லக்‌ஷ்மி கல்யாணம்' எனும் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான காஜல் அகர்வாலுக்கு தற்போது 34 வயது. தமிழில் 'பொம்மலாட்டம்'தான் அவருக்கு முதல் படம். ஆனால், முதலில் வெளியானது 'பழனி'. தமிழில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ்... தெலுங்கில் சிரஞ்சீவி, பவன் கல்யாண், மகேஷ்பாபு, ராம் சரண், அல்லு அர்ஜுன்... என அனைத்து முன்னணி நாயகர்களுடனும் நடித்துவிட்டார். இந்தியிலும் 'சிங்ஹம்', 'ஸ்பெஷல் 26' என இவர் நடித்த படங்கள் ஹிட்டாகியிருக்கின்றன. இந்தியைக் காட்டிலும் தெலுங்கு, தமிழ்தான் காஜலின் ஃபேவரைட். தற்போது கமல்ஹாசனுடன் 'இந்தியன் 2', சிரஞ்சீவியுடன் 'ஆச்சார்யா', துல்கர் சல்மானுடன் 'ஹே சினாமிகா', தெலுங்கு - ஆங்கிலம் பைலிங்குவல் படமான 'மொசகுல்லா'வும் இவர் வசமுள்ளன. 13 வருடங்களாக திரைத்துறையில் ஹீரோயினாக பயணித்து வருகிறார்.

டாப்ஸி: 
.
தென்னிந்திய சினிமாவில் இருந்து போய் பாலிவுட்டில் இருப்பவர்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார், டாப்ஸி. 32 வயதான இவர் அறிமுகமானது 2010-ல் வெளியான தெலுங்கு படத்தில். பிறகு, 'ஆடுகளம்' அவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் வாங்கிக்கொடுத்தது. பிறகு, தெலுங்கில் இளம் ஹீரோக்களின் படத்தில் நடித்துக்கொண்டிருந்தவருக்கு பாலிவுட் ஆஃபர் வர, அதனை கச்சிதமாக பிடித்துக்கொண்டு அசத்தி வருகிறார். இந்திக்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் டாப்ஸி தமிழ், தெலுங்கில் வரும் கதைகள் அவருக்கு பிடிக்கும் பட்சத்தில் ஓகே சொல்கிறார். இந்தியில் 'பிங்க்', 'முல்க்', 'காஸி அட்டாக்', 'மன்மர்ஸியான்', 'பத்லா' 'தப்பட்' தமிழில் 'கேம் ஓவர்' என ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டுகிறார். பாலிவுட்டில் டாப்ஸிக்கான மார்கெட் வேற லெவலில் இருக்கிறது. தற்போது 'சபாஷ் மித்து', 'ஹசீன் தில்ரூபா', 'லூப் லப்பேட்டா' என அடுத்தடுத்து லைன் அப்பில் இருக்கின்றன.

நித்யா மேனன் : 
.
32 வயதான நித்யா மேனன், கன்னடத்தில் 2006-ல் அறிமுகமாகியிருக்கிறார். பிறகு, மலையாளத்தில் செம பிஸி! முதல் படமே மோகன்லாலுடன். 2011-ல் தெலுங்கிலும் தமிழிலும் அறிமுகமானார். இந்த இரு மொழிகளில் நடித்துக்கொண்டிருந்தாலும் மலையாளத்தில் நடிக்கத் தவறவில்லை. நித்யா மேனனை பொறுத்தவரை பெரிய படம், சின்னப் படம் என்றெல்லாம் கிடையாது. விஜய், சுதீப் போன்ற பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் நடிப்பார், இளம் நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடிப்பார். தவிர, ஹீரோயின் சென்ட்ரிக் படங்களும். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் நித்யா மேனன் நன்கு பரிட்சயம்.

ஐஸ்வர்யா ராஜேஷ்: 

.
சிட்டி, வில்லேஜ் என எந்தக் கேரக்டர் கொடுத்தாலும் அசத்தக் கூடிய நடிகை. வயது, 30. இவர் நிறைய படங்களில் சின்னச்சின்ன கேரக்டர்களில் நடித்திருந்தாலும் அனைவருக்கும் பரிட்சயமாக்கியது 'ரம்மி', 'பண்ணையாரும் பத்மினியும்', 'காக்கா முட்டை' உள்ளிட்ட படங்கள். தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் நடிகை. பெரிய இயக்குநர்கள் பலரும் இவரின் நடிப்பை பாராட்டுகின்றனர். தனக்கான டஸ்கி டோன் நிறத்தை பாசிட்டிவாக மாற்றி பலருக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளிலும் ஐஸ்வர்யா கலக்கி வருகிறார். ஹீரோயினாக என்று எடுத்துக்கொண்டால் எட்டு வருடங்களாக சினிமாத்துறையில் இருக்கிறார். இரண்டு குழந்தைகளுக்கு அம்மா, விளையாட்டு வீராங்கனை, சிட்டி கேர்ள் என அனைத்திருக்கும் தயாராக இருக்கும் இவர் கோலிவுட்டின் அசத்தல் நாயகி.

ப்ரியா பவானிஷங்கர்:
.
.
ப்ரியா பவானி ஷங்கர், தமிழ் சினிமாவில் தற்போது கவனம் ஈர்க்கும் நடிகை. வயது, 30. இளம் நடிகர்களின் படத்திற்கு ஹீரோயின் தேட வேண்டும் என்றால் முதலில் இவரைத்தான் அணுகுகிறார்களாம். தமிழ் பேசத் தெரிந்த ஹீரோயின்கள் மிகவும் குறைவு, தமிழ் பேசும் ஹீரோயின்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது போன்ற கருத்திற்கு முற்றுப்புள்ளியாய் வந்தவர். இந்தக் கதைக்கு தமிழ் பேசத்தெரிந்திருக்க வேண்டும் என்று நினைக்கும் இயக்குநர்களுக்கு செய்தி வாசிப்பாளரே கிடைத்துவிட்டார். 2017-ல் வெளியான 'மேயாத மான்'தான் இவரின் சினிமா என்ட்ரி. ஆனால், இந்த மூன்று வருடங்களில் அவரின் வளர்ச்சி பாராட்டத்தக்கது. தற்போது, 'குருதி ஆட்டம்', 'களத்தில் சந்திப்போம்', 'கசட தபற', 'வான்', 'இந்தியன் 2', 'பொம்மை' மற்றும் பெயரிடப்படாத சில படங்கள் என மேடம் செம பிஸி!

No comments:

Post a Comment