JOTHIKA,INDIAN ACTRESS BORN 1978 0CT 18
JOTHIKA,INDIAN ACTRESS BORN 1978 0CT 18 சூர்யா ஜோதிகா ஜோடி மிகப் பொருத்தமான ஜோடி என்று திரையுலகமும், ரசிகர்களும் அன்று முதல் இன்றுவரை பேசிக்கொண்டுதான் இருக்கின்றனர். கோலிவூட்டில் பலரும் அதிகளவில் முணுமுணுத்த காதல் ஜோடிகளின் பெயர் என்றால் அது சூர்யா ஜோதிகாதான். திரைப்படத்தில் முதன் முதலாக சூர்யாவுடன் ஜோடியாக நடித்த ஜோதிகா நிஜவாழ்க்கையிலும் அவருக்கு ஜோடியனார். மும்பையில் பிறந்த ஜோதிகா 'வாலி' படத்தில் அறிமுகமானாலும் இவர் கதாநாயகியாக நடித்தது சூர்யாவுடன் ' பூவெல்லாம் கேட்டுப்பார்' என்ற படத்தில். அதன் பிறகு சூர்யாவுடன் இணைந்து பட படங்களில் நடித்தார். இதேவேளையில், எந்த நடிகையையும் திருமணம் செய்ய மாட்டேன் என அம்மாவிற்கு சத்தியம் செய்துக் கொடுத்துவிட்டுதான் சூர்யா படம் நடிக்கவே வந்தார். தன்னுடைய முதல் படத்திலேயே ஜோதிகாவுடன் இணைந்து நடித்தார். ஆரம்பத்தில் தங்களுக்குள் வேலையத் தவிர வேறு எந்த உறவும் இல்லை எனக் கூறினார் சூர்யா. பிறகு இவர்கள் இருவரையும் பற்றி பத்திரிக்கைகள் எழுதி தள்ளவே இருவரும் இந்த கிசுகிசுக்களைப் பற்றி பேச ஆரம்பிக்க இந்தக் காதல் கதையும் ஆரம்பித்ததாம். இவர்களின்...