RIBBON PRABHU ,BRITISH VICEROY BORN 1827 OCTOBER 24- 1909 JULY 9
RIBBON PRABHU ,BRITISH VICEROY BORN 1827 OCTOBER 24- 1909 JULY 9 · ரிப்பன் பிரபு காலம் : 1827 அக்டோபர் 24 - 1909 ஜூலை 9 பிரித்தானிய இந்தியாவின் வைசிராயாக 1880-1884 கால கட்டத்தில் பணிபுரிந்தார் ·ரிப்பன் பிரபு தல சுய ஆட்சி முறையைக் (உள்ளூர் மக்களாட்சி முறை) கொண்டு வந்தார் ·“உள்ளாட்சி முறையின் தந்தை’’ எனவும் அழைக்கப்படுகிறார் இல்பர்ட் மசோதா (Ilbert Bill) கொண்டுவந்தார். இந்த மசோதா மூலம் இந்திய மாஜிஸ்திரேட்டுகளும், நீதிபதிகளும் ஐரோப்பியர்களை விசாரித்து தண்டிக்கும் உரிமை பெற்றனர் · மிகச்சிறந்த கவர்னர் ஜெனெரல் எனவும் அழைக்கப்பட்டார் இல்பர்ட் மசோதா குறித்த சர்ச்சை (1884) இந்தியாவில் இருவேறு வகையான சட்டத்தை நீக்குவதற்கு ரிப்பன் முயற்சி எடுத்தார். இந்தியாவிலிருந்த சட்ட அமைப்பின்படி ஒரு ஐரோப்பியர் குறித்த வழக்கை ஐரோப்பிய நீதிபதி மட்டுமே விசாரிக்க முடியும். இந்திய நீதிபதி விசாரிக்க முடியாது. நீதிமன்றங்களில் பதவியிலிருந்த இந்திய நீதிபதிகளுக்கு இந்த சட்டப்பாகுபாடு பெருத்த அவமானத்தை அளிப்பதாக இருந்தது. சட்ட உறுப்பினரான சி.பி. இல்பர்ட் 1883ல் நீதித்துறையில்...