CHIDAMBARAM PILLAI AND BHARATHIDASAN + VETRILAI
CHIDAMBARAM PILLAI AND BHARATHIDASAN + VETRILAI வ.உ.சி. 150. நினைவலைகள் ( பதிவு எண். 3/150) பாவேந்தரின் புரட்சி வரிகளில் பெரியவர் மானவீரன் சிதம்பரன் மகாகவி பாரதிக்கும் பெரியவர் வ.உ.சி.க்கும் இருந்த நெருங்கிய தொடர்பு புரட்சி கவிஞர் பாரதிதாசனுக்கும் பெரியவருக்கும் ஏற்படவில்லை. ஆனால் பெரியவருடைய மிகச் சிறந்த சீடராக விளங்கிய மானமிகு வீரர் மாடசாமி பிள்ளைக்கும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கும் மிக நெருங்கிய உறவு இருந்துள்ளது. கலெக்டர் ஆஷ் கொலையுண்ட பிறகு மாடசாமி தப்பித்து புதுச்சேரி வந்து தஞ்சமடைந்த வேளையில் பாரதியின் ஆணைக்கிணங்க மாடசாமிபிள்ளைக்கு இசுலாமியர் தோற்றத்தில் மாடசாமி பிள்ளையை மாறு வேடமணிந்து கடலூரிலிருந்து கட்டுமரத்தில் பாரதிதாசன் மாடசாமி பிள்ளையை நடு இரவில் அழைத்துச் சென்று பத்திரமாக சைகோன் செல்லும் கப்பலில் ஏற்றிவிட்டவர் பாரதிதாசன். பின்பு மறுநாள் இரவே பாரதிதாசன் கரை வந்து சேருகிறார். இதனை பாரதிதாசன் கீழ்க் கண்டவாறு கவிதையில் குறிப்பிடுவார். “திலகர் செய்த உரிமைக் கிளர்ச்சியால் கொலை முதற் பற்பல குற்றம் சுமந்த மாசிலா மனத்து மாடசாமியும் அன்புறு பாரதி, அரவிந்தர் ம...