BASHYAM IYENGAR HOISTED
INDIAN FLAG 1932 JANUARY 26
BASHYAM IYENGAR HOISTED
INDIAN FLAG 1932 JANUARY 26
SRINIVASA IYENGAR
ADVOCATE GENERAL
VS
BHARADHIYAR
மாதச் சம்பளம் ரூ.4333.60 இட்டிலியாக…
srinivasa-iyengar-150x150.jpg
1920ம் ஆண்டில் திருநெல்வேலி தாமிரவருணி ந்திக்கரையில் தமிழ் மாகாண அரசியல் மாநாடு கூடியது. அப்போதுதான் அட்வகேட்-ஜெனரல் பதவியை உதறியெறிந்து விட்டு வந்திருந்த எஸ். சீனிவாஸய்யங்கார்தலைமையில் இம்மாநாடு மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரித்துத் தீர்மானம் நிறைவேற்றியது…
சீனிவாஸவரதய்யங்காரும் பாரதி மருமான் சங்கரனும் மற்றும் இருவரும் மாநாட்டுக்குப் போய்விட்டு, பாரதியைக் காணக் கடையம் சென்றார்கள்.
bharathi_chellammalஇரவு பத்து மணிக்கு பாரதியின் வீட்டை அடைந்தார்கள். செல்லம்மாவும் குழந்தை சகுந்தலாவும் உறங்குகின்றனர்; பாரதி படுக்கையை விரித்து எதிரே ஒரு கைப்பெட்டியின் முன் உட்கார்ந்து ‘சுதேசமித்திரனுக்கு’ ஒரு விலாசம் எழுதிக் கொண்டிருந்தார். அருகே ஒரு முக்காலியில் ஹரிகேன் விளக்கு; பக்கத்தில் வெற்றிலைப் பெட்டி. கறுப்புக் கோட்டு, வால்விட்ட தலைப்பாகையுடன்தான் அந்த நேரத்திலும் விளங்குகிறார் பாரதி.
வந்தவர்கள் பாரதியை நமஸ்கரித்தனர்.
அரசியலைப் பற்றிய பேச்சு ஆரம்பித்தது. “நாடு எப்படியும் முன்னேறப் போகிறது. தீவிரமான தீர்மானங்கள் நிறைவேறியிருக்கின்றன; காந்தியடிகள் வழிகாட்டப் போகிறார்கள். எல்லோரும் சுகமடைய வேண்டும்” என்று பாரதி சொன்னார்….
இரவு 12.30 மணிக்கு எல்லோரும் உறங்கப் போனார்கள். காலையில் நண்பர்களுக்குச் செல்லம்மா சிற்றுண்டி அளித்தார். பாரதி காலைப் பத்திரிக்கை ‘மித்திர’னைப் பார்த்தார். அப்போது உள்ளூர் பிராமணரல்லாத அன்பர்கள் சிலர் வந்து பாரதியாருடன் உரையாடினார்கள். ஆரியர்-திராவிடர் பற்றிய பேச்சு. ‘அன்பர்களே ஆரியர்களுக்கு முன்னால் திராவிடர்கள், அவர்களுக்கு முன்னால் ஆதித் திராவிடர்கள். அதற்குமுன் இருந்தது மிருகங்கள், ஜீவராசிகள். அவை வாழ்ந்த இடத்தை வெட்டித் திருத்தி வீடு கட்டி, பயிர் செய்து நாம் வாழ்கின்றோம். அவை உரிமை கொண்டாடினால் நாம் அனைவரும் அவற்றிடம் விட்டுப் போக வேண்டியதுதான்’ என்று நகைத்தார் கவிஞர்.
– பக். 162 / சித்திர பாரதி / ரா.அ. பத்மநாபன் / காலச்சுவடு வெளியீடு.
இது பாரதியார் வாழ்க்கையின் இறுதிப்பகுதி. சட்டத்தால் முடக்கப்பட்டு, சம்பிரதாயத்தால் ஒதுக்கப்பட்டு, வறுமையால் தாக்கப்பட்ட நிலையில் அப்போது பாரதி இருந்தார். ஆனால் இந்த சமுதாயம் வேறுபாடு இல்லாத வளர்ச்சியடைய வேண்டும்; அறிவுத் தெளிவு, செல்வச் செழிப்பு தார்மீக உணர்வு ஆகியவை இந்த மண்ணில் பெருக வேண்டும் என்ற அவருடைய நிலைப்பாட்டில் மாற்றமுமில்லை. பாரதியின் நிலைமையையும் அவருடைய காலத்தில் தமிழ்நாடு இருந்த அவல நிலையையும் இப்போது பார்க்கலாம்.
1904ஆம் ஆண்டில் சென்னைக்கு வந்தபோது பாரதியின் பொதுவாழ்க்கை துவங்கியது. அப்போது அவருக்கு வயது 22. பாரதியின் தோற்றம், குணம் மற்றும் செயல்பாடுகளைத் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட வரிகளைத் தருகிறேன்:
பாரதிக்கு உத்தம நண்பராக வாய்த்த எஸ். துரைசாமி ஐயர் பாரதியைப் பின்வருமாறு வர்ணிக்கிறார்: ‘அவருடைய முகம் மிகவும் வசீகரமாக இருக்கும், எப்போதும் உற்சாகம் நிறைந்திருப்பார். பேச்சில் தெளிவு இருக்கும். எதையும் பளிச்சென்று சொல்லி விடுவார். சூதுவாது தெரியாது. பிறர் பேச்சுத் துணையை ரஸிக்கும் ஸரஸி. நல்ல உணவு அருந்துவதில் விருப்பமுள்ளவர். அவர் உடலோ மிகப் பூஞ்சை. பலமே இல்லாத மெலிந்த தேகம். விளையாட்டாய்த் தள்ளினால்கூட விழுந்து விடுவார்….
சென்னைக்கு வந்த புதிதில் பாரதிக்கு அரசியல் ஈடுபாடே கிடையாது. தேசபக்தித் துடிப்பும் இல்லை. இந்திய சமூகம் திருந்த வேண்டும், விரைவில் திருந்த வேண்டும் என்ற கருத்துக்கொண்ட சமூக சீர்திருத்தவாதியாகவே அவர் விளங்கினார்…
பல ஜாதிகளைச் சேர்ந்த, பல மதங்களைச் சேர்ந்த பாரதி முதலிய இளைஞர்கள், தங்களுள் பிராமணரல்லாத ஒருவரைச் சமைக்கச் செய்து, அந்த உணவை விருந்தாக எல்லோரும் சேர்ந்து உண்டார்கள். டாக்டர் ஜெயராம் நாயுடுதான் சமையல் செய்தார். சென்னையில் இது பரபரப்பை உண்டாக்கியது…
– பக்.26 / சித்திர பாரதி / ரா.அ. பத்மநாபன் / காலச்சுவடு வெளியீடு
Sister Nivedita‘சாதி ஒழிப்பு’ என்ற சிந்தனை ஈ.வே.ரா.வுக்கு ஏற்படாத காலத்திலேயே பாரதியார் சமபந்தியை நடைமுறைப்படுத்தி இருக்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். சுதேசமித்திரன் நாளிதழில் துணையாசிரியராகப் பணிபுரிந்த பாரதி வங்கப் பிரிவினைக் கிளர்ச்சியின் போது அரசியலில் ஈடுபட்டார். காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்திற்குச் சென்றபோது சுவாமி விவேகாநந்தரின் சிஷ்யையான நிவேதிதா தேவியைக் கொல்கத்தாவில் சந்தித்தார்.
நாடெங்கும் தீவிரமாக வளர்ந்து வந்த தேசபக்தியை தமிழர் மனதிலும் இடம்பெறச் செய்ய வேண்டுமென்று விரும்பினார் பாரதி. அந்த நோக்கத்தில் உருவானது ‘இந்தியா’ வார இதழ் (1906). எம்.பி. திருமலாச்சாரி என்ற புரட்சி வீரர் இந்த இதழின் காரியாலய நிர்வாகஸ்தராக இருந்தார்.
தமிழ் பத்திரிகைகளில் முதல்முதலாகக் கருத்துப்படம் (Cartoon) வெளிவந்தது இந்தியாவில்தான். அதை உருவாக்கியவர் பாரதிதான்.
‘எலும்பும் தோலுமான இந்தியர்கள் பட்டினி கிடக்க, ஒரு கப்பலில் இந்திய கோதுமையை ஏற்றிச் செல்வதாக’ ஒரு கருத்துப்படம் ‘இந்தியா’வில் வெளியானது.
இந்தக் கருத்துப் படத்துக்காகவும் அரசியல் கட்டுரைகளுக்காகவும் 1908ல் பிரிட்டிஷ் அரசு ‘இந்தியா’ இதழ் மீது நடவடிக்கை எடுத்தது. பாரதி பாண்டிச்சேரிக்குச் சென்றார்.
1908 முதல் 1918 வரை பாரதி, பாண்டிச்சேரியில் தங்கியிருந்தார். அரவிந்தரோடு தொடர்பு, வ.வே.சு. ஐயரோடு நட்பு ஆகியவை அங்கே ஏற்பட்டது. ‘கண்ணன் பாட்டு’, ‘குயில் பாட்டு’, பாஞ்சாலி சபதம்’ போன்ற கவிதைகள் இந்தக் காலத்தில் வெளிவந்தன.
1918ல் பிரிட்டிஷ் இந்தியாவில் நுழைந்த பாரதி கடலூரில் கைது செய்யப்பட்டு 34 நாட்களுக்குப் பின் விடுதலையானார். அங்கிருந்து செல்லம்மாளின் ஊரான கடையத்திற்கு வந்தார்.
கடையத்தில் இருந்தபோதுதான் ஆரிய-திராவிட விவகாரம் குறித்து ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்டுள்ள அருமையான கருத்தை பாரதி தெரிவித்தார்.
விவசாயிகளின் துன்பத்தைச் சுட்டிக் காட்ட பாரதி வெளியிட்ட கருத்துப்படம்தான் அவரை பாண்டிச்சேரிக்கு அனுப்பிவைத்தது என்பதைப் பார்த்தோம்.
இனி, அவருடைய காலத்தில் விவசாயம், மற்றும் விவசாயிகளின் நிலைபற்றிப் பார்ப்போம். நீதிக்கட்சி ஆட்சியில் விவசாயிகளின் நிராதரவான நிலை மற்றும் இயந்திரத் தொழிலின் நிலைபற்றிப் பார்ப்போம். தமிழக விவசாயிகள் பட்ட கடன் கொடுமைக்கு 1937ல் ராஜாஜி தலைமையில் அமைந்த காங்கிரஸ் அரசால் முடிவு ஏற்பட்டது என்ற நல்ல சேதியை மட்டும் நான் முதலில் சொல்லிவிடுகிறேன்.
தேவ. பேரின்பன் மற்றும் கா.அ. மணிக்குமார் எழுதிய இரண்டு புத்தகங்களை எடுத்துக் கொள்வோம். தேவ. பேரின்பன் எழுதியது தமிழகத்தின் பொருளாதார வரலாறு இதை வெளியிட்டது நியு செஞ்சரி புக் ஹவுஸ். மணிக்குமாரின் நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் வான்முகிலன். நூலின் பெயர் 1930களில் தமிழகம். இது அலைகள் வெளியீட்டகத்தின் பதிப்பு.
முதலில் தேவ. பேரின்பன்.
1870களில் தமிழக வேளாண்மையில் நெருக்கடி ஏற்பட்டதோடு 1876-78 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சியும் பஞ்சமும் ஏற்பட்டது.
பிரிட்டிஷாரின் வரிக் கொடுமை, விவசாயிகளின் கடன் சுமை போன்ற கொடுமைகளோடு வறட்சியும் நோயும் ஏற்படுத்திய பாதிப்புகள் தமிழக மக்களைப் பெரும் துயரத்திற்கு ஆட்படுத்தியது. பசியும் நோயும் வறட்சியும் ஆற்றுப்படுகை அல்லாத மேட்டுநிலத் தமிழகத்தை அதிகமாக வாட்டியது….
1870களில் ரயில்வேக்களின் வளர்ச்சியும், வர்த்தகத்தின் வளர்ச்சியும் வேளாண்மைப் பொருளாதாரத்தில் புதிய மாற்றங்களை உருவாக்கியது. ஏகாதிபத்திய காலக்கட்டத்தில் ஐரோப்பிய மூலதனத்திற்குத் தேவைப்படும் மூலப்பொருட்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. சர்வதேச மார்க்கெட்டுக்கு பருத்தி, நிலக்கடலை, சர்க்கரை போன்றவை ஏற்றுமதிக்கான சரக்குகளாயின. தமிழக விவசாயத்தில் இந்த அவசியத்துக்கான பயிர் சாகுபடி மாற்றங்கள் ஏற்படத் துவங்கின…
டெல்டா பிரதேசத்து மிராசுகள் நிலத்தை பிறருக்குக் குத்தகைக்கு விட்டு அதில் வரும் வருவாயில் நகர வாழ்வுக்குச் சென்றனர்…
ஆற்றுப்படுகை அல்லாத தமிழகப் பகுதிகளில் பணப்பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்க உள்நாட்டுப் போரின் விளைவாக (1861) பிரிட்டனுக்கு பருத்திவரவு தடைப்பட்டது. இதனால் இந்தியா பருத்தி உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை காலனி ஆட்சியாளர் ஏற்படுத்தினர்.
கோவையிலும், திருநெல்வேலியிலும் பருத்தி சாகுபடி பரவலாகியது. வட ஆற்காடு, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் நிலக்கடலை பயிரிடப்பட்டது. தென் ஆற்காடு, தஞ்சை மாவட்டங்களில் கரும்பு பயிரிடப்பட்டது.
1930களில் மேட்டூர் அணை கட்டப்பட்டதோடு காவிரி பாசனப் பகுதி விரிவுபடுத்தப்பட்டது. இதே காலங்களில் கிணற்றுப் பாசனம் விரிவுபடுத்தப்பட்டது…
அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிந்ததும் (1865) பிரிட்டிஷார் மீண்டும் அமெரிக்காவிடமே பருத்தி வாங்கினார். இந்தியாவில் பயிரிடப்பட்ட பருத்திக்குச் சர்வதேச சந்தையில் இடமில்லாது போனதும் இந்தியாவிலேயே நூற்பாலைகள் தோன்ற ஆரம்பித்தன…
இனி, இந்தியாவின் தொழில்வளர்ச்சி பிரிட்டிஷ் அரசால் எப்படித் தடை செய்யப்பட்டது என்பதையும் அந்தக் கால கட்டத்தில் சென்னை மாகாணத்தில் நில உடைமை, விவசாயிகளின் கடன்சுமை மற்றும் நீதிக்கட்சியின் ஏழைகளுக்கு எதிர்ப்பான நிலை பற்றியும் கா.அ. மணிக்குமார் சொல்வதைக் கேட்கலாம்.
1908ல் உதகமணடலத்தில் நடைபெற்ற தொழில்துறை மாநாட்டில் மதராஸ் வர்த்தக சபையின் பிரதிநிதியாகப் பங்கேற்ற சிம்சன், மாகாணத்தின் தொழில்மயமாக்க தொழில்துறை இயக்குனர் சேட்டர்டன் எடுத்துவந்த முன்முயற்சிகளை ஆட்சேபித்தார்.
பின்னி, ஹார்வே போன்ற ஐரோப்பிய நிறுவனங்களோடும் இங்கிலாந்திலிருந்து இறக்குமதியான பொருட்களோடும் போட்டியிட வேண்டிய நிலைமை இந்திய முதலீட்டாளர்களுக்கு இருந்தது.
ஐரோப்பிய வர்த்தகத்தை ஆதரிப்பவர்கள் அரசிடம் முறையிட்டு தமிழகத்தில் தொழில்துறை முன்னேற்றத்தைத் தடை செய்யும்படி கோரிக்கை வைத்தனர். மதராஸ் அரசும் அவர்கள் கேட்டபடி 1910ல் உத்தரவு வழங்கியது.
சென்னை மாகாணத்தில் இருந்த தேயிலை மற்றும் காபி தோட்டங்களும் சில பருத்தி ஆலைகளும், சில இயந்திரத் தயாரிப்பு நிறுவனங்களும், அரிசி ஆலைகளும், பருத்தி பிரித்தெடுக்கும் ஆலைகளும் இங்கிலாந்து வியாபாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன.
1921ம் வருடக் கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகையில் 71 சதவீதம் பேர் விவசாயத்தில் ஈடுபட்டனர். சென்னை மாகாணத்தின் சராசரி நில உடைமை அளவு சிறியது. தொழில் நுட்பத்தைக் கடைப்பிடிப்பதை இது சாத்தியமற்றதாக்கியது. மூன்று விதமான நில உடைமை முறை மதராஸ் மாகாணத்தில் நடைமுறையில் இருந்தது. 1. ரயத்வாரி, 2.ஜமீன்தாரி, 3. இனாம்.
ரயத்வாரி முறைப்படி ஒவ்வொரு பயிரிடப்பட்ட நிலத்தின் வருவாயையும் அரசாங்கம் கணக்கிட்டது. இந்தக் கணக்கீடு முப்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப்பட்டது. நிலத்தில் தனிஉடைமை என்பதை ரயத்வாரி முறை அறிமுகப்படுத்தியது. ரயத்வாரி பகுதியில் பயிரிடுவோர் உழவர் என அழைக்கப்பட்டனர்.
ஜமீன்தாரி முறையில் ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு ஜமீன்தார்கள் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தினார்கள். அதற்குப் பதிலாக அவர்களுக்கு பண்ணை மீதான உரிமை அளிக்கப்பட்டது. மாகாணத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இந்த நில உடைமை முறையின் கீழ் இருந்தது. மாகாணத்தில் 1500 ஜமீன்தார்கள் இருந்தனர். ஜமீன்தாரி முறையில் பயிரிடுவோர் குத்தகைக்காரர் என்று அழைக்கப்பட்டனர்.
முந்தைய அரசாங்கங்களால் அளிக்கப்பட்டவையே இனாம் அல்லது மானிய நிலங்கள். மதரீதியான சேவைகளுக்காகவும் அரசாங்க சேவைகளுக்காகவும் இனாம்கள் அளிக்கப்பட்டன.
விவசாயி நிலவரியை செலுத்திய பிறகு மிஞ்சியது அநேகமாக எதுவுமேயில்லை. சென்னை மாகாணத்தின் முதன்மையான பிரச்னையாக இருந்தது. விவசாயிகளின் கடன்சுமைதான் என்றாலும் அரசாங்கம் அதைக் கண்டு கொள்ளவில்லை.
இந்தியாவின் விவசாயத்தைப் பற்றி எதுவும் அறிந்திராத ஆங்கிலேய அதிகாரிகள் விவசாயத் துறையில் இருந்தனர். மாகாணத்தின் விவசாய நடைமுறைகள், பயிர்கள் மற்றும் பயிரிடும் காலம் போன்ற அடிப்படையான கேள்விகளுக்குக்கூட பதிலளிக்க முடியாதவராக சென்னை அரசாங்க விவசாயத் துறைத் தலைவர் இருந்ததைக் கண்டு இந்திய விவசாயத்தின் மீதான ராயல் கமிஷன் திடுக்கிட்டது.
இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபத்தாறு வருடங்களில் தமிழ் நாடு ஏழு வருடங்கள் பஞ்சத்தை அனுபவித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் மாதம் ரூ. 4333-60 சம்பளம் பெற்றுவந்த சென்னை மாகாண நீதிக்கட்சி அமைச்சர்களைத் தமிழர்கள் வெறுத்தார்கள்.
விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் குறைப்பதற்காக நில வருவாயைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்கிற தீர்மானத்தை தேசியவாதிகள் சட்டசபையில் கொண்டு வந்தனர். எல்லாக் கட்சிப் பிரதிநிதிகளும் அதற்கு ஆதரவாகப் பேசி வாக்களித்த போது நீதிக்கட்சியினர் அதற்கு எதிராக வாக்களித்தனர்.
ஜமீன்தாரி நில உடைமை முறையை ஒழிப்பதற்கான இயக்கங்களுக்கு சில காங்கிரஸ்காரர்கள் தலைமை ஏற்றனர்.
‘இந்த மாகாணத்தில் பிளேக் நோய் போல நீதிக்கட்சி மக்களை வேதனைப்படுத்தி அவர்களது இதயத்தில் நிரந்தரக் கசப்புணர்வை விதைத்துள்ளது’ என்று விவசாயிகளின் பத்திரிகை எழுதியது.
விவசாயிகளின் நலனில் நீதிக்கட்சி அக்கறை காட்டாததின் காரணம் என்ன? விவசாயிகளின் கடனைப்பற்றி அவர்கள் கவலைப்படாததின் பின்னணி என்ன? என்று கேட்பவர்களுக்கு நீதிக்கட்சியின் தலைவர்கள் பட்டியலைப் படித்துக் காட்டுகிறேன்.
பனகல் அரசர், பொப்பிலி ராஜா, செல்லப்பள்ளி குமார ராஜா, தெலப்ரோல் ஜமீன்தார், வெங்கடகிரி ராஜா, இளவரசநேந்தல் ஜமீன்தார், ஊத்துக்குளி ஜமீன்தார், சிங்கம்பட்டி ஜமீன்தார், தோதப்ப நாயக்கனூர் ஜமீன்தார், குருவிகுளம் ஜமீன்தார், புதுக்கோட்டை ராஜகுமார் ஆகியோர் நீதிக்கட்சியின் முன்னணித் தலைவர்கள்.
1917ல் நடந்த சென்னை மாகாண நீதிக்கட்சி மாநாட்டுக்கு வந்த பிரபலஸ்தர்கள் இதோ: சர்.பி. தியாகராய செட்டியார் (பிரபல வியாபாரி), சர்.பி.டி. ராஜன் (நிலப்பிரபு), குமாரராஜா முத்தையா செட்டியார் (வட்டித் தொழில்), ராவ்பகதூர் ஆர். வேங்கடரத்னம் நாயுடு, சர்.கே.வி. ரெட்டி, ராவ்சாஹிப் வெங்கடரத்தினம் நாயுடு, ராவ்பகதூர் சூரிய நாராயணமூர்த்தி நாயுடு, சர்.ஏ.பி. பாத்ரோ, மேடை தளவாய் திருமலையப்ப முதலியார் (நிலப்பிரபு), திவான் பகதூர் கோபதி நாராயண செட்டியார், சர்.ஏ. ராமசாமி முதலியார், திவான் பகதூர் சிவஞானம் பிள்ளை, திவான் பகதூர் குமாரசாமி ரெட்டியார், சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், பட்டிவீரன்பட்டி சவுந்திரபாண்டிய நாடார் (நிலப்பிரபு).
இவர்களெல்லாம் வட்டி கொடுக்கும் வாய்ப்பில்லாதவர்கள்; விவசாயிகளின் கண்ணீரையும் கடனையும் பற்றி அறியாத உயரத்தில் வாழ்ந்தவர்கள்; வளைத்துப் போட்ட வயல்கள் போதாது என்று அரசியலில் ஈடுபட்டு மாதம் ரூ.4333-60 அரசுச் சம்பளமாக பெற்றுக் கொண்டவர்கள். ஏழ்மையும் வறுமையும் அவர்கள் பார்த்த நாடகங்களில் மட்டும்தான் இருந்திருக்கும்.
kamarajarஒன்பது வருடங்கள் தமிழக முதல்வராக இருந்தவர் காமராஜர். பிறகு ஸ்தாபன காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர் வாடகை வீட்டில்தான் குடியிருந்தார். அந்த வீட்டின் படத்தை போஸ்டரில் போட்டு (1971) ‘சோலை நடுவே வாழும் சோஷலிசப் பிதா’ என்று தி.மு.க. கேலி செய்தது. தி.மு.க, சாமானியர்களின் கட்சி என்கிறார் தமிழக முதல்வர். சாமான்யர்களின் முன்னோர்கள் பெற்ற மாதச் சம்பளம்தான் ரூ. 4333-60.
ரூ. 4333-60 மாதச் சம்பளம் பெரிதா என்று சிலர் சந்தேகப்படலாம். கொரியர் கம்பெனியில் வேலை செய்யும் இளைஞர் இன்று இதைத்தானே சம்பாதிக்கிறார் என்று கேள்வி எழுப்பலாம்.
ஐயா, இந்தச் சம்பளம் பெறப்பட்டது, 1930 இல் என்பதை நினைவுபடுத்துகிறேன். அப்போது ஆரம்பப் பள்ளி ஆசிரியரின் மாதச் சம்பளம் ரூ.12.00; பவுன் விலை ரூ.13.00; எட்டு கிலோ அரிசி விலை ரூ.1.00; 64 இட்லிகளின் விலை ரூ.1.00 என்ற விவரங்களைக் கொடுக்கிறேன்.
மற்றபடி, மாதம் ரூ.4333-60 ஊதியம் பெற்றுக் கொண்ட நீதிக்கட்சி அமைச்சர்கள் எத்தனை இட்லி சாப்பிட்டிருப்பார்கள் என்பதை உங்கள் யூகத்திற்கு விட்டுவிடுகிறேன்.
மேற்கோள் மேடை:
எகிப்து, கம்போடியா பருத்திப் பயிர் வந்ததன் மூலம் நாட்டின் செல்வநிலை பெரிதும் உயர்ந்திருக்கிறது. மேலும் உயர்வடையக் கூடிய குறிகளும் காணப்படுகின்றன.
– கோடிக்கணக்கான இந்திய விவசாயிகள் பருத்திப் பயிருக்கு விலை கிடைக்காமல் பரிதவித்த 1917ல் பி.டி. தியாகராயர் ஆற்றிய உரை / பெஜவாடா நீதிக்கட்சி மாநாடு.
வ.உ.சி.150 நினைவலைகள் (பதிவு எண். 10/150)
DIFFICULTIES IN CHENNAI SRINIVASA IYENGAR
VS
CHIDAMBARANAARசென்னை தந்த துயர வாழ்வு
பெரியவர் வ.உ.சி.க்கு தெரிந்த நல்ல தொழில் வக்கீல் தொழிலே. வெள்ளையர் அரசாங்கம் நீதிமன்றங்களுக்குச் சென்று வழக்காட முடியாதபடிக்கு வக்கீல் சன்னத்தை (உரிமம்) பறித்து விட்டது. சென்னையில் வீட்டுக் கடனை அடைக்க பல தொழில்கள் செய்ய முயன்றார். அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது.
தெரியாத தொழில்கள் எல்லாம் செய்து பார்த்தார். சிந்தாதரிப் பேட்டையில் நெய்கடை வியாபாரம் செய்துள்ளார். பின்பு மளிகைக் கடை வைத்துப் பார்த்தார். அதுவும் கை கூட வில்லை. மண்ணெண்ணெய் கடை வைத்துப் பார்த்தார். அதுவும் போணியாக வில்லை. மண்ணெண்ணெய் கடை வைப்பதற்காக ரூபாய் பத்து கடன் வாங்கி அதற்காக பிராம்சரி நோட்டும் எழுதிக் கொடுத்துள்ளார். அந்தக் கடையும் உருப்படியாகவில்லை.
தொழிற்சங்க நண்பர்களான வி.சக்கரைச் செட்டியார், கஜபதி செட்டியார் போன்றோர் முன்வந்து அவர்களாகவே அரிசிக் கடையைப் பிடித்து தந்து அரிசி மூட்டைகளும் வாங்கித் தந்து வியாபரம் செய்ய உதவினார்கள். கப்பல் வணிகத்தைச் சிறப்பாக நடத்திய பெரியவருக்கு அரிசிக் கடையை லாபகரமாக நடத்த முடியவில்லை. கடையை நண்பர்களிடமே திருப்பிக் கொடுத்து விட்டார்.
1917-18 வாக்கில் பஞ்சம் வந்த போது பிரிட்டீஷ் சர்க்கார் தினமும் 5000 நபர்களுக்கு ரூபாய்க்கு நான்கு படி அரிசி நியாய விலைக் கடை மூலம் அளித்தது. அச் சமயம் தண்டபாணி பிள்ளை தனது பங்களா வீட்டை அரிசி கடையாக மாற்றி வ.உ.சி.க்கு அரிசிக் கடையில் வேலையும் அளித்தவர். அவருக்கான வேலை அரிசியை கொண்டு வரவும், விற்பனை செய்து தருவதுமான வேலை. இதற்கு சம்பளமாக தினமும் தன் வீட்டுக்கு ரூபாய்க்கு 4 படி அரிசியும் மாதம் ரூபாய் 100/- ம் சம்பளம் பெற்றுச் செல்வது வழக்கம். இந்த அரிசி கடையில் வேலை செய்வதை பிரீட்டீஷ் அரசாங்கத்திற்கு தெரிய வந்து வ.உ.சி.க்கு வேலை அளிக்கப்பட்ட காரணத்துக்காக தண்டபாணி பிள்ளையின் அரிசிகடையின் உரிமத்தையும் சேர்த்து ரத்து செய்து மூடிவிட்டார்கள். இதனால் அப்பகுதி தொழிலாளர்களுக்கு கிடைக்கவேண்டிய அரிசியும் கிடைக்காமல் அவர்களது வாயிலும் மண்ணைப் போட்டு விட்டது பிரிட்டீஸ் அரசாங்கம்.
அச் சமயம் தமிழ்நாடு காங்கிரசின் மிகப் பெரிய தலைவராக இருந்தவர் சீனிவாச அய்யங்கார். பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு அரசியல் ஆசான். இவர். சென்னையின் மிகப் பிரபலமான வக்கீலாக இருந்தவர். திக்கற்ற நிலையில் இருந்த பெரியவர் வ.உ.சி.க்கு தொடர்ந்து வேலை தேடிய படலத்தில் இருந்தார். இந்த நிலையில் தனக்குத் தெரிந்த வக்கீல் வேலையை சீனிவாச அய்யங்காரிடம் கேட்டால் தருவார் என்ற நம்பிக்கையில் அவரிடம் போய் வேலை கேட்கப் போகிறார்.
மிகுந்த நம்பிக்கையுடன் சென்ற பெரியவர் வ.உ.சி.யை வரவேற்றார் சீனிவாச அய்யங்கார்.
வாங்கோ… வாங்கோ என்று மகிழ்ச்சி பொங்கிட வரவேற்ற அய்யங்கார் காபி கொடுத்து உபசரித்தார். பின்னர்
வராதவர் வந்திருக்கிறீர்களே…. ஏதாவது விசேசமா என்று விசாரிக்கிறார் அய்யங்கார்.
சற்று தயக்கத்துடன் பெரியவர் “ உங்களிடம் ஒரு வேலை தேடி வந்தேன் என்கிறார்.
“வேலையா… என்னிடமா? உங்களுக்குப் போய் நான் வேலை தர முடியுமா? என்கிறார் சீனிவாச அய்யங்கார்.
“எனக்குத் தெரிந்த தொழில் வக்கீல் தொழில்தான். அந்த தொழிலை நான் செய்ய முடியாமல் அரசாங்கம் தடை விதித்து விட்டது. நீங்கள் இப்போது சிறந்த வக்கீலாக இருக்கிறீர்கள். உங்களுக்கு ஏராளமான வழக்குகள் கிடைத்திருகின்றன. உங்களிடம் வரும் வழக்குகளுக்கான கேஸ் கட்டுகளை என்னிடம் கொடுங்கள். நீங்கள் கோர்ட்டில் வாதாட வசதியாக சட்ட ரீதியான விசயங்களை தயாரித்து தருகிறேன். இப்பணிக்காக மாதம் ஒரு தொகையை கொடுத்தால் எனக்கு பேருதவியாக இருக்கும் என்றார் பெரியவர் வ.உ.சி.
சீனிவாச அய்யங்காருக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் தர்ம சங்கடத்தில் கொஞ்ச இருங்கோ பிள்ளைவாள், இதோ நொடியில் வந்துவிடுகிறேன் என்று சொல்லி விட்டு மாடிப்படிக்குப் போனார்.
மாடியிலிருந்து இறங்கி வந்த போது, அய்யங்கார் கையில் ஒரு கவர் இருந்தது. அதில் ரூபாய் நோட்டுக் கட்டு ஒன்றும் இருந்தது.
“பிள்ளைவாள்… நீங்க ரொம்பவும் பெரியவாள். உங்களுக்கு நான் வேலை கொடுப்பது என்பது என்னால் நினைத்து பார்க்க முடியாத காரியம். என்னாலே முடிந்த உதவி இது. இதை நீங்கள் பெற்றுக் கொண்டால் நான் ரொம்பவும் சந்தோசப்படுவேன் என்றார்.
அந்தப் பணத்தை கையால் தொடவே இல்லை பெரியவர் வ.உ.சி.
ரொம்ப நன்றிங்க. நான் உங்களிடம் வேலை தேடித்தான் வந்தேன். வேலை செய்து சம்பாதித்துதான் எனக்குப் பழக்கம். யாசகம் வாங்கிப் பழக்கமில்லை என்று உணர்ச்சிப் பொங்கிட கூறிவிட்டு , வக்கீல் சீனிவாச அய்யங்காரிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டு விட்டார்.
வறுமையிலும் செம்மையாக தனது வாழ்வினை அடையாளப்படுத்தியவர் பெரியவர் வ.உ,.சி.
ஒரு மனிதனுக்கு அடுக்கடுக்காய் துன்பம் நேர்கையில் மனம் பக்குவப்பட்டு ஞானியாகிறான். பெரியவருடைய வாழ்க்கை 1908 ஆம் ஆண்டில் இருந்து சிறை வாழ்வையும் முடித்து வந்த பிறகும் கூட சென்னையில் அவர் பட்ட வாழ்வின் துயரங்கள் இராமச்சந்திர கவிராயரின் தனிப்பாடலான
”ஆவீன மழை பொழிய இல்லம் வீழ” என்ற தனிப்பாடல் என் மனதில் எதிரொலிக்கிறது.
சென்ற வாரம் பெரியவர் சென்ற அதே சீனிவாச அய்யங்காரின் வீட்டைத் தேடி ஆழ்வார்பேட்டை அம்புஜம்மாள் வீதியில் அமைந்துள்ள காந்தி அமைதி நிறுவன அலுவலகம் சென்று அலுவலக இயக்குனரிடம் விசாரித்தோம்.
மேற்குறித்த விசயங்களைப் பற்றி பேசினேன். அதற்கு இந்த நிகழ்வு நீங்க சொல்லித்தான் எங்களுக்கே தெரிய வருகிறது என்று கூறி விட்டு கப்பல் விட்ட வ.உ.சி..க்கு இப்படியான துன்பங்களா! எல்லாம் நாம் மறந்து விட்டோமே என்று சொல்லி அவரும் கண்கலங்கி விட்டார்.
மூலம்: சின்ன குத்தூசி. எத்தனை மனிதர்கள். விகடன் பிரசுரம்.
என். தண்டபாணி பிள்ளை. சில சுவையான குறிப்புகள்! வ.உ.சி.யைப் பற்றி… நாரதர் இதழ்.
படம்: எஸ். சீனிவாச அய்யங்கார்
(தேச பக்தனாக இருந்தது பாவமா?.
இந்த தேச நலனையே தன் மூச்சாகக் கொண்ட ஒரே காரணத்திற்காக ஒரு மாமனிதனின் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா?.நினைக்கவே மனம் பதறுகிறது.மனம் கொதிக்கிறது.அவர் அனுபவித்ததில் சிறு பகுதியே இது. ஆனாலும் கடைசி வரை தேசாபிமானத்தைப் போல தன்மானத்தையும் விட்டுக் கொடுக்காத பெரியவர்.)
சேஷாத்திரி ஸ்ரீனிவாச ஐயங்கார் (S. Srinivasa Iyengar) சி.ஐ.இ. (செப்டம்பர் 11, 1874 - மே 19, 1941) என அழைக்கப்படும் ஸ்ரீனிவாச ஐயங்கார், ஒரு இந்திய வழக்கறிஞராகவும், சுதந்திர போராட்ட வீரராகவும் இந்திய தேசிய காங்கிரஸின் அரசியல்வாதியாகவும் இருந்தார். ஐயங்கார் 1916 முதல் 1920 வரை சென்னை மாகாணத்தின் வழக்கறிஞர்-ஜெனரலாக இருந்தார். 1912 முதல் 1920 வரை சென்னை மாகாணத்தின் சட்ட உறுப்பினரும் 1923 முதல் 1930 வரை இந்திய தேசிய காங்கிரஸின் ஸ்வராஜியக் கட்சியின் தலைவராகவும் இருந்தார். ஸ்ரீனிவாச ஐயங்கார் புகழ்பெற்ற முதல் இந்திய வழக்கறிஞரான சர். வேம்பகும் பாஷ்யம் ஐயங்காரின் மருமகன் ஆவார். வழக்கறிஞர் ஜெனரல் சர் வேம்பகும் பாஷ்யம் ஐயங்காரைப் பின்பற்றுபவர்கள் அவரைத் தென்னிந்திய சிங்கம் என்று அழைத்தனர்.
சென்னை மாகாணத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஸ்ரீனிவாச ஐயங்கார் பிறந்தார். அவர் சட்டத்தில் பட்டம் பெற்றார் மற்றும் ஒரு வழக்கறிஞராகப் பயிற்சி பெற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 1916 இல் வழக்கறிஞர்-ஜெனரல் ஆக பதவி உயர்வு பெற்றார். அவர் பார் கவுன்சில் உறுப்பினராக பணியாற்றினார் மற்றும் ஆளுநரின் நிறைவேற்றுக் குழுவின் சட்ட உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அவர் தனது வழக்கறிஞர் ஜெனரல் பதவியை, ஆளுநர் நிறைவேற்றுக்குழுவின் அவரது இருக்கையை ராஜினாமா செய்து சி.ஐ.இ. க்குத் திரும்பினார்.
1920 ஆம் ஆண்டு ஜலியன்வாலா பாக் படுகொலைக்கு எதிராக, இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்து ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு பெற்றார். 1923 ஆம் ஆண்டில், மோதிலால் நேரு மற்றும் சித்தரஞ்சன் தாஸ் போன்ற தலைவர்களோடு சேர்ந்து மகாத்மா காந்தியுடன் தேர்தல்களில் பங்கேற்றார். பிரிவினை பிரிவுக்குப் பின்னர் ஸ்வராஜியக் கட்சி உருவாக்கப்பட்டது. 1926 தேர்தல்களில் பெரும்பான்மை பெற்றிருந்த போதிலும், ஐயங்கார் மாகாணத்தில் அரசாங்கத்தை அமைக்க மறுத்தபோது, அவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் பின்னர் சென்னை மாகாண ஸ்வராஜ்ய கட்சியின் தலைவராகவும் இருந்தார்.
பின்னர் அவர், இந்திய லீக்கின் சுதந்திரத்தை நிறுவி, சைமன் கமிஷனுக்கு எதிரான போராட்டங்களை ஒழுங்கமைத்தார். மற்ற காங்கிரஸ் அரசியல்வாதிகளுடனான கருத்து வேறுபாடு காரணமாக, அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். 1941 ஆம் ஆண்டு மே 19 இல், ஐயங்கார் சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
ஸ்ரீனிவாச ஐயங்கார் சென்னை சட்டப்பேரவையில் இருந்து வழக்கறிஞர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட இளைய வக்கீல் ஆவார். ஸ்ரீனிவாச ஐயங்கார் சுதந்திர போராட்ட வீரர்களான யு. முத்துராமலிங்கம் தேவர் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோரின் வழிகாட்டியாகவும் இருந்தார். பின்னர் 1954 முதல் 1962 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஆனார். மற்றும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பணியாற்றிய கே. காமராஜ் அவரது மிகப்பெரிய வழித்தோன்றலாகக் கருதப்படுகிறார். ஸ்ரீனிவாச ஐயங்கார் 1939 இல் எழுதிய "மேனேஸ் ஹிண்டு லாஸ்" புத்தகம் மிகவும் பாராட்டப்பட்ட மற்றும் நன்கு படிக்கப்பட்ட புத்தகம் ஆகும்.