BASHYAM IYENGAR HOISTED INDIAN FLAG 1932 JANUARY 26
BASHYAM IYENGAR HOISTED INDIAN FLAG 1932 JANUARY 26 நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்... நமது சுதந்திரத்திற்கு எதிராக செயல் பட்டவர்க்கு தியாகி பட்டம் சூட்டப்பட்டு இன்று தியாகிகள் பட்டியலில் உள்ளனர். நம்மில் பலருக்கும் தெரியாத ஒரு ஒப்பற்றவரின் சாகஸ வரலாற்றினை தெரிந்துகொள்வோம் . 1932ஆம் ஆண்டு ஜனவரி 26 நள்ளிரவு வேளையில் இன்று சென்னை தலைமைச் செயலகம் இருக்கும் புனித ஜார்ஜ்க் கோட்டையில் யூனியன் ஜாக் கொடி பறந்து கொண்டிருந்தது. சிப்பாயைப் போல் காக்கி உடையணிந்த ஒரு உருவம் ராணுவப் பாதுகாப்பு மிகுந்த புனித ஜார்ஜ்க் கோட்டையில் தந்திரமாக உள்ளே நுழைந்தது. இடுப்பில் தானே தயாரித்து வைத்திருந்த மூவர்ணக் கொடி, அதில் "இன்று முதல் பாரதம் சுதந்திரம் அடைந்து விட்டது" என்ற கொட்டை எழுத்துக்கள். சுமார் இருநூறு அடி உயரம் கொண்ட அந்த கொடிக்கம்பின் உச்சியினை அடைந்து யூனியன் ஜாக் கொடியினை வீசி எறிந்து தான் தயாரித்த மூவர்ணக் கொடியினை கட்டிப் பறக்க விட்டு, மெல்ல மெல்ல இறங்கி மறைந்து விட்டது அவ்வுருவம். மறுநாள் காலை சென்னை நகரமே அல்லோலகல் பட்டது. சூரிய ஒளியில் மூவர்ணக...